நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விஜயகாந்த், சரத்குமாரிடம் ஆதரவு கேட்ட அதிமுக

Chennai petrol diesel price : சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.06 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.91 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu news today updates: இந்தியாவின் தந்தை ‘மோடி’ என அழைக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கேரளா செல்கிறார். இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்னை குறித்து இந்த பயணத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக உறுப்பினரின் பெயர் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் நேற்றிரவு சென்னையின் சுட்டுக் கொலை. அவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 27 வழக்குகள் இருப்பதாக தகவல்.

தமிழகத்தில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 15 மாவட்டங்களில் மேலும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் ஆதரவு கோரியதன் அடிப்படையில் தன்னுடைய ஆதரவை அதிமுகவுக்கு அளித்துள்ளார் சரத்குமார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and rainfall  : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

07:50 (IST)26 Sep 2019
அதிமுகவுக்கு சரத்குமார் ஆதரவு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் ஆதரவு கோரியதன் அடிப்படையில் தன்னுடைய ஆதரவை அதிமுகவுக்கு அளித்துள்ளார் சரத்குமார்.

22:08 (IST)25 Sep 2019
விஜயகாந்த்தை சந்தித்து இடைத் தேர்தலில் ஆதரவு கோரிய அதிமுக அமைச்சர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினர்

21:28 (IST)25 Sep 2019
பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் வரவேற்கிறேன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடமாக அறிவித்தது எனக்கு தெரியாது; அப்படி அறிவித்திருந்தால் வரவேற்கிறேன்.பகவத் கீதையை சமய நூலாக பார்க்கவில்லை; பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

20:33 (IST)25 Sep 2019
பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் - சீதாராம் யெச்சூரி விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான். பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பரப்புரை செய்கிறார். மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

20:10 (IST)25 Sep 2019
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகளான ரூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூபா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண்தலைவரானார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கபொதுக்குழு நாளை கூடுகிறது

19:56 (IST)25 Sep 2019
நாளை மறுநாள் நாங்குநேரி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் - கே.எஸ்.அழகிரி

திமுக காங்கிரஸ் கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுபரின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

19:43 (IST)25 Sep 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் கந்தசாமி, நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணன், புதுச்சேரி காமராஜ் நகரில் பிரவீனா மதியழகன் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19:23 (IST)25 Sep 2019
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.நீட் எழுதியவர்களின் அடையாளத்தையும் மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளத்தையும் சரிபார்த்தார்களா? ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதா? வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்தது பற்றி தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது.

18:52 (IST)25 Sep 2019
தத்துவவியல், பகவத் கீதை விருப்பப் பாடமாக வழங்கப்பட்டுள்ளது - அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

18:48 (IST)25 Sep 2019
இந்திய எல்லையில் தீவிரவாதிகளின் டிரோன்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் - ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் எச்சரிக்கை

இந்திய எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் டிரோன்களை பயன்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு டிரோன்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று ராணுவ லெப்டினட் ஜெனரல் அலோக் கெர் தெரிவித்துள்ளர்.

18:41 (IST)25 Sep 2019
சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

18:07 (IST)25 Sep 2019
ஸ்டாலின் ட்வீட்!

பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியலை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலுக்கு திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  “ அண்ணா பல்கலை. பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும்முயற்சி ஆளுநரும்,உயர்கல்வித்துறையும் இந்தப்பண்பாட்டு ஆதிக்கப்பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

18:04 (IST)25 Sep 2019
மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை!

அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் என்ற சென்னை மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

18:02 (IST)25 Sep 2019
மீண்டும் ஒத்தி வைப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று  இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கிய போது இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று  இரு தரப்பு விவாதங்களை கேட்டறிந்த நீதிபதி வரும் வெள்ளிக்கிழமை வழக்கை ஒத்தி வைத்தார். 

17:46 (IST)25 Sep 2019
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனு திருப்பி அளிக்கப்பட்டது . அமலாக்கத்துறையின் மனுவில் குறைகள் இருந்ததால் அந்த மனு திருப்பி அளிக்கப்பட்டது.

17:44 (IST)25 Sep 2019
இஸ்ரோ சிவனுக்கு வாழ்த்து!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இஸ்ரோ தலைவர் சிவன் இன்று சந்தித்து பேசினார். இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர்  சந்திராயன் 2 குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

17:31 (IST)25 Sep 2019
இபிஎஸ்- பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு!

நதிநீர் பங்கீடு குறித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு  முதன்முறையாக தமிழக முதல்வர் எடப்பாடியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தபர். அவர்கள் அளித்திருக்கும் பேட்டி முழு விபரம் இதோ.” பிரச்னை ஏற்படாத வகையில் நீரை பகிர்ந்து கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன.5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம், கேரளமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும்.” என்று கூறினர். 

17:19 (IST)25 Sep 2019
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

காலாண்டு விடுமுறைக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிற்பித்துள்ளது. ஏற்கனவே காலாண்டு தேர்வு தொடங்கி விட்ட நிலையில்  விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பும் முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

16:58 (IST)25 Sep 2019
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தை தொடங்கி உள்ளார். 

16:46 (IST)25 Sep 2019
விவேக் விளக்கம்!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை, நடிகர் விவேக் கேலி செய்யும் விதமாக பேசியதாக சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதுதொடர்பாக நடிகர் விவேக், தமது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், 1960ஆம் ஆண்டில் வெளியான இரும்புத்திரை படத்தில் "நெஞ்சில் குடியிருக்கும்" என்ற பாடலை சிவாஜி பாடியபோது அது காதல் உணர்வை கொடுத்ததாகவும், தற்போது நடிகர் விஜய் அதைச் சொல்லும்போது மந்திர சக்தி வார்த்தையாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

16:45 (IST)25 Sep 2019
தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.  ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 

16:08 (IST)25 Sep 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் – உதித் சூர்யா குடும்பத்துடன் கைது

நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி மலை அடிவாரத்தில் உதித் சூர்யாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை தேனிக்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது

15:33 (IST)25 Sep 2019
சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

15:00 (IST)25 Sep 2019
பேனர் விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் – சாஹு

பேனர் விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும்  என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரஹா சாஹூ தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

14:28 (IST)25 Sep 2019
இந்தி திணிப்பை கடைசி தமிழனும் ஏற்கமாட்டான் – வைரமுத்து

உலகத்தை வெல்ல தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் கணிப்பொறி அறிவு இருந்தாலே போதும். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை, கடைசி தமிழன் இருக்கும் வரை ஏற்கமாட்டான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

14:17 (IST)25 Sep 2019
திமுக அதிரடி

திமுக கொள்கைப்பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 

14:04 (IST)25 Sep 2019
வன்கொடுமை தடுப்புச் சட்டம்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான மனு மீது அக்டோபர் 3-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

13:54 (IST)25 Sep 2019
கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியை சாராதவர், லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்ட இளம் கலைஞர் நடிகர் விஜய் பொதுவாக பேசியதை, அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்துகொண்டிருக்கிறார்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

13:06 (IST)25 Sep 2019
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு

பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற  வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிகில் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

12:44 (IST)25 Sep 2019
சுபஸ்ரீ மரணம்: உயர்நீதிமன்றம் விசாரணை

”பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை போலீஸ் கைது செய்யவில்லை. விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” திமுக வாதம் செய்து வருகிறது. பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

12:25 (IST)25 Sep 2019
அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு 28 மாவட்ட நிர்வாகிகளும், நாங்குநேரி தொகுதிக்கு 27 மாவட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

12:17 (IST)25 Sep 2019
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

12:06 (IST)25 Sep 2019
செல்லூர் ராஜூ பேட்டி

வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதோடு, செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். தவிர இன்றிலிருந்து 200 ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.33-க்கு பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

11:47 (IST)25 Sep 2019
திமுக போராட்டத்திற்கு தடை

சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், வரும் 27-ம் தேதி கோவையில் நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

11:27 (IST)25 Sep 2019
அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத்கீதை பாடம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால கல்வியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். 

11:15 (IST)25 Sep 2019
எடப்பாடி பேட்டி

”நதிநீர் பங்கீடு குறித்து பேசுவதற்காக கேரள முதலமைச்சரை சந்திக்க செல்கிறேன். நதிநீர் தொடர்பான அனைத்து விஷயங்களும் பேசித் தீர்க்கப்படும். தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா இடையே நல்லுறவை மேம்படுத்தும் பேச்சுவார்த்தையாக அமையும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையை ஆந்திர அரசு திறக்க உள்ளது. இடைத்தேர்தல் குறித்து அதிமுகவிற்கு எந்த பயமும் இல்லை” என சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

11:11 (IST)25 Sep 2019
திருவாரூரில் எச்சரிக்கை

காவிரி உள்பட அனைத்து ஆறுகளிலும் கூடுதல் தண்ணீர் வர இருப்பதால், கரையோர மக்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து கொள்ள வேண்டும் எனவும், குழந்தைகளை கண்டிப்பாக ஆறுகள் மற்றும் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது  எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

11:10 (IST)25 Sep 2019
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி

புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். 2 மாத காலத்திற்குள் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ராணிப்பேட்டையில் ஏற்படுத்தப்படும் என திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார். 

11:08 (IST)25 Sep 2019
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் எம்.முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நாராயணனும் போட்டியிடுகின்றனர். 

11:02 (IST)25 Sep 2019
சென்னையில் காலை மழை!

இன்று காலை சென்னையில், கிண்டி, அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

10:59 (IST)25 Sep 2019
மோடிக்கு கோல்கீப்பர் விருது!

தூய்மை இந்தியா திட்டப்பணிக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது. இதனை பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பில் கேட்ஸ் வழங்கினார்

Tamil Nadu news today updates : ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல், இயக்கத்துக்கு, ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் கன் லியானார்டோ டிகேப்ரியோ பேஸ்புக் பதிவு மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிகேப்ரியோ, பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஆறுகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன, மேலும் அவற்றின் பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேஷன், காவிரி ஆற்றை காக்க கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

டிகேப்ரியோவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பெரும்பாலானோர் தங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். டிகேப்ரியோவின் பதிவை, ஜக்கி வாதசுதேவ் பகிர்ந்துள்ளார்.

 

Web Title:

Tamil nadu news today live updates chennai weather tn politics modi rowdy manikandan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close