முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு: சென்னை மேயர் பதவியை பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்க கோரிக்கை
Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.81 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.54 ஆகும்.

Flash News in Tamilnadu Today Updates: நாளை முதல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது. இந்த தொடரில், “தேசிய நதி கங்கா (புத்துணர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) மசோதா, 2019” என்ற மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த, மசோதா சட்டமாக்கப்பட்டால் கங்கையை மாசுபடுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
இன்று புதுதில்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என்று அக்கட்சித் தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு சிவசேனா ,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளிவந்ததற்க்கு சமமாக சிவசேனாவின் இன்றைய முடிவை அரசியல் நிபுணர்கள் பார்க்கின்றனர்.
இதுபோன்ற முக்கிய தலைப்பு செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கோத்தபய ராஜபக்செ வெற்றி பெற்றுள்ளது பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. முதல்வரைச் சந்தித்தது ஏன் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வரிடம் மனு அளித்தேன். சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு என் வாழ்த்துகள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.” என்று டுவிட் செய்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.
சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டு விழா.விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்: அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன். தெலங்கானா ராஜ்பவனை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன்; மக்கள் தான் எல்லாம் என்று கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. மீண்டும் ஒரு முறை பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்து கொடுக்க ஐ.நா. அமைப்பு முன் வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜானதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் பெற்று 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கை ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்கிறார்.
இலங்கை ஜானதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் பெற்று 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு அவரது சகோதரர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வாழ்த்து. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உதவிய மக்களுக்கு நன்றி. தாய் நாட்டிற்கு சேவை செய்ய இலங்கை முழுவதும் நாங்கள் மேற்கொண்ட பிரசாரம் நன்கு பலனளித்துள்ளது என்று மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காத இலங்கை தமிழர்களுக்கு நன்றி. கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய லக்னோவில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில், " இலங்கைக்கான ஒரு புதிய பயணத்தை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம், இந்த பயணத்தில் அனைத்து இலங்கை மக்களுக்கும் ஒன்றாக பயணிக்கப்பட வேண்டியவர்கள். எனவே, இந்த வெற்றியை கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக மகிழ்வோம்" என்று பதிவு செய்துள்ளார்.
இந்தியா பிரதமர், இலங்கை நாட்டின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் வென்ற கோத்தபய ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். நமது இரு நாடுகளும் வரலாறு ரீதியாகவும், பொதுவான நம்பிக்கையினாலும் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நட்பை மேலும் வலுப்படுத்த, எதிர்காலத்தில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா நாட்டின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்த்கிருக்கிறார் . இரு நாட்டு உறவுகளை மேம்படும் வகையில் வரும் நாட்களில் நாம் உழைக்க இருக்கின்றோம் என்றும் பதிவு செய்துள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்யும் வகையில் , சஜித் பிரமதாஸா ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது மந்திரி பதவியில் இருந்தும் , கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் தற்போது விலகியிருக்கிறார் .
சஜித் பிரமதாஸா ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 26 வருடங்களாக அரசியல் பயணத்தில் மக்கள் பணியாற்றி வந்திருக்கின்றேன், தற்போதைய தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு, துணைத் தலைவர் பதவியில் இருந்து உடனே விலகுகிறேன், "
என்று தெரிவித்து இருக்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, இந்நிலையில், இலங்கை அரசின் நிதி அமைச்சரான மங்கள சமரவீர தனது ட்வீட்டில் , " எனது அன்பான நாட்டை நினைத்து நான் அழுகிறேன், இரட்டை மாணிக்கங்களாக கருதப்படும் புத்தரும், தர்மமும் எனது நாட்டிற்கு துணை நிற்கட்டும்" என்று பதிவு செய்துள்ளார். மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர் ஆவார்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரமதாஸா தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார். மக்கள் தீர்ப்புகளை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாகவும், அதிபராக வரவிருக்கும் கோத்தபய ராஜபக்ஷ தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டு வருகின்றன. கோத்தபய ராஜபக்ஷவும், சஜித் பிரமதாஸவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். தமிழர் பகுதியில் சஜித் பிரமதாஸா அபாரா வாக்குகள் பெற்றாலும், நாட்டின் பல பகுதிகளில் கோத்தபய ராஜபக்ஷ முன்னிலை வகித்து வருகின்றார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்ஷவின் இலங்கை பொதுசன முன்னணி கட்சி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை அமைதியாய்க் கொண்டாடுங்கள் என்று சொல்லியிருக்கிறது.
இலங்கை அதிபர் தேர்தலின் இறுதி முடிவு இன்று மாலை 3 முதல் 4 மணி வரைக்குள் வெளியிட முடியும் என்று நம்புவதாக இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேர்தல் முடிவுக்கு நாளை வர காத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கபட்டிருந்தது.
இலங்கை அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் கோத்தபய ராஜபக்ஷ முன்னிலை வகித்தாலும், வடக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர் பகுதியில் சஜித் பிரமதாஸ அபார முன்னிலையில் இருந்து வருகிறார்.
இலங்கை நாட்டின் எட்டாவது அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 84% வாக்குகள் பதிவாகின. ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவுக்கும், இலங்கை பொதுசன முன்னணி (எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 10% சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் கோத்தபய ராஜபக்ஷ தற்போது முன்னிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எண்ணப்பட்ட வாகுகள் வரையில் ராஜபக்ஷ 46.6% , சஜித் 45.5% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.