Tamil Nadu news today Updates: புதிய கொரோனா வைரஸால் 41 பேர் இப்போது இறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1,287 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்க போராடி வருகின்றனர்.
முல்லை பெரியாறு, ஆழியாறு போன்ற நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருக்கிறார் என்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். கடந்த ஆண்டு தமிழக முதல்வர் பழனிசாமி கேரளாவில் , நதிநீர் பிரச்சனை தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயிவிஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மேலும் முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின்தொடருங்கள்.
Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன் விருது
மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
71வது குடியரசு தினத்தை எதிர் கொள்ளும் நமக்கு உரிமை, கடமை இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகளால் நாடு பெருமை அடைகிறது. கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. சமூகநலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை. ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இந்த அரசு நிரந்தர தீர்வை கொண்டு வந்துள்ளது. புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர் - குடியரசு தலைவர்
கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளன
இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்
- குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் உரை
அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது
தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர்
மொத்தம் 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சிக்கும் பத்மஸ்ரீ விருது
ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவுக்கும் விருது
சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் வரும் 27ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு மதுரைக்கு 85 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில் வரும் 27ம் தேதி விழுப்புரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு பதிலாக மாலை 5.40 மணிக்கு புறப்படும் - தென்னக ரயில்வே
இன்று இந்தியா முழுவதும் தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசியுள்ளார் தலைமை செயலாளர் சண்முகம் . அப்போது அரசியல் கட்சிகள் தங்களை வழிநடத்த அரசியல் ஆலோசகர்களை நாடுவது ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம், நேற்று தேர்வு மையங்களின் அதிகாரிகளாக செயல்பட்ட 2 தாஷில்தார்களை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , பலர் இந்த முறைகேட்டில் சம்பந்த பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களை தவிர்த்து 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, இந்நிலையில் , இந்த 9 மாவட்டங்களிலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து அரசாணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்திய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாப்படுகிறது.
இந்த தேசிய வாக்காளர் தினம் குறித்து மோடி தனது ட்விட்டரில்," தேர்தல் செயல்முறையை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பாளராகவும் மாற்றுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் தேர்தல் ஆணையத்திற்கு இந்நாளில் நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நாள் நமது ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது" என்று பதிவு செய்துள்ளார்.
சீனாவில் படிக்கும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில், சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும்! சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா? என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும்! என்று பதிவு செய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எம்எல் ஷர்மா என்ற வழக்கறிஞர் தனது மனுவில்," இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபரை எந்த விசாரணையின்றி கைது செய்ய முடியும், இது தனயு மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், நாட்டிற்கு ஒரு தவறான முன் உதாரணம்" என்றும் கூறியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் திராவிடர் விதுதலை கழகத்தின் (டி.வி.கே) தொடர்புடைய சில ஆர்வலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினோரா பி.எஸ். அசோக் என்பவர் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்து இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி உலகில் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதற்காக, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில், எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருபதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
2002 – 2003 ஆண்டுகளில் சார்ஸ் நோய் உலகம் முழுவதும் உள்ள 35 நாடுகளில் பரவி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பரவியது. 775 நபர்கள் இந்த நோயால் கொல்லப்பட்டனர். சார்ஸ் நோயும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோயாகும். இந்த நோய் பரவியதிற்கான காரணம் 2017ம் ஆண்டு வரை கண்டறியப்படவில்லை. 2017ம் ஆண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் சிலர் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குகைகளில் வசிக்கும் வௌவ்வால்களால் இந்த வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டது. சிலருக்கு சார்ஸ் நோய் மீண்டும் வரும் என்ற அச்சுறுத்தல் தற்போது உருவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நோயின் அறிகுறிகளாக தீவிர காய்ச்சல், சளி மற்றும் மூச்சுவிட சிரமம் இருத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் தீவிரமான நோய் தொற்று இருந்தால் முதலில் நிம்மோனியா ஏற்படும். பிறகு சிறுநீரகம் செயலிழக்க துவங்கும். இறுதியாக அந்நபர் உயிரிழப்பார். இது போன்ற நோய் தொற்றில் இருந்து தப்பிக்கும் பொருட்டு மக்களுக்கு வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் வகையில் முகமூடி அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள விலங்குகள், காட்டு விலங்குகள் ஆகியவற்றை தொடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட சார்ஸ் நோய் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் நோய் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதை உறுதி செய்துள்ளது.மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் அமைந்துள்ளது வுஹான் என்ற நகரம். முதன்முதலில் இங்கு தான் இப்படியான நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நிறைய பொதுமக்கள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஹுவானா கடல் உணவு சந்தை மூடப்பட்டது.
புதிய கொரோனா வைரஸால் 41 பேர் இப்போது இறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1,287 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்க போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று ரத்து செய்து தீர்பளித்தது. புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights