Advertisment

Tamil Nadu News today Updates: மாஸ்டர் தேர்ட் லுக் போஸ்டர் வெளியீடு; கர்ஜிக்கு விஜய் - விஜய் சேதுபதி!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.04-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.71.12-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today Updates: மாஸ்டர் தேர்ட் லுக் போஸ்டர் வெளியீடு; கர்ஜிக்கு விஜய் - விஜய் சேதுபதி!

Tamil Nadu news today Updates:  புதிய கொரோனா வைரஸால் 41 பேர் இப்போது இறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில்  மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1,287 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த  கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்க போராடி வருகின்றனர்.

Advertisment

 

முல்லை பெரியாறு, ஆழியாறு போன்ற நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருக்கிறார் என்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். கடந்த ஆண்டு தமிழக முதல்வர் பழனிசாமி கேரளாவில் , நதிநீர் பிரச்சனை தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயிவிஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மேலும் முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின்தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    22:22 (IST)25 Jan 2020

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    22:10 (IST)25 Jan 2020

    21 பேருக்கு பத்மஸ்ரீ

    தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன் உட்பட 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளது மத்திய அரசு.

    21:34 (IST)25 Jan 2020

    லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ்

    தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன் விருது

    மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

    21:34 (IST)25 Jan 2020

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்-க்கு பத்மஸ்ரீ

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    21:33 (IST)25 Jan 2020

    பிரதீப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    21:01 (IST)25 Jan 2020

    வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன்

    தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

    20:52 (IST)25 Jan 2020

    பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

    மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

    20:52 (IST)25 Jan 2020

    பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன்

    விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

    20:52 (IST)25 Jan 2020

    மேரி கோமுக்கு பத்ம விபூஷண்

    விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

    20:51 (IST)25 Jan 2020

    சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன்

    தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:09 (IST)25 Jan 2020

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

    குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    71வது குடியரசு தினத்தை எதிர் கொள்ளும் நமக்கு உரிமை, கடமை இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகளால் நாடு பெருமை அடைகிறது. கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. சமூகநலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை. ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இந்த அரசு நிரந்தர தீர்வை கொண்டு வந்துள்ளது. புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர் - குடியரசு தலைவர்

    20:07 (IST)25 Jan 2020

    ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டானுக்கு மாற்றம்

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டானுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    19:39 (IST)25 Jan 2020

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்

    கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளன

    இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்

    - குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் உரை

    19:38 (IST)25 Jan 2020

    இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்

    மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்

    குடிநீரை பாதுகாக்கும் சக்தி அபியான் திட்டம் மக்கள் திட்டமாக மாறும் என நம்புகிறேன்

    - குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் உரை

    19:24 (IST)25 Jan 2020

    பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

    அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது

    தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர்

    மொத்தம் 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

    கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சிக்கும் பத்மஸ்ரீ விருது

    ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவுக்கும் விருது

    19:12 (IST)25 Jan 2020

    தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு விழா

    தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு விழா. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறநிலையத்துறை தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    19:10 (IST)25 Jan 2020

    குரூப்-4 தேர்வில் முறைகேடு - 4 பேர் கைது

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    18:57 (IST)25 Jan 2020

    சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ்

    சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் வரும் 27ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு மதுரைக்கு 85 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில் வரும் 27ம் தேதி விழுப்புரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு பதிலாக மாலை 5.40 மணிக்கு புறப்படும் - தென்னக ரயில்வே

    18:57 (IST)25 Jan 2020

    ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க உத்தரவு

    விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், சிலெட் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு

    ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    18:56 (IST)25 Jan 2020

    விசாரணை வேண்டும் - வைகோ

    இதற்கு முன் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் - வைகோ

    18:56 (IST)25 Jan 2020

    மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்

    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி பெறுவார்கள், தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்

    ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    18:39 (IST)25 Jan 2020

    கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவல்

    கைதான அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க கோவை நீதிமன்றம் ஆணை

    நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு

    18:02 (IST)25 Jan 2020

    நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

    தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சரியாக செயல்படவில்லை என்றும் இந்த சங்கங்கள் மீண்டும் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றும் பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

    18:01 (IST)25 Jan 2020

    சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாகக் குழு உறுப்பினராக ஜசரி கணேஷ் நியமனம்

    திருப்பதி தேவசம் போர்டின் கீழ் செயல்பட்டு வருகிறது சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில். இந்த கோவிலின் நிர்வாக குழு உறுப்பினராக இன்று ஐசரி கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    18:00 (IST)25 Jan 2020

    கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானிலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம்

    கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    17:59 (IST)25 Jan 2020

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

    கோவையில் இன்று காலை கைது செய்யபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    17:45 (IST)25 Jan 2020

    அவந்திப்போராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    அவந்திப்போராவில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய பாதுகாப்புப் படை. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதி உட்பட 3 பேரை சுற்றிவளைத்தது பிடித்தது பாதுகாப்புப் படையினர்

    17:01 (IST)25 Jan 2020

    டி20 உலக கோப்பையில் பங்கேற்க மறுப்பு தெரிவிக்கும் பாகிஸ்தான்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும்  டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

    16:21 (IST)25 Jan 2020

    தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை

    தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை தெளிவாக வானம் காணப்படும் ஆனாலும் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:58 (IST)25 Jan 2020

    அரசியல் கட்சிகள் அரசியல் ஆலோசகர்களை அணுகுவது ஏன் ?

    இன்று இந்தியா முழுவதும் தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசியுள்ளார் தலைமை செயலாளர் சண்முகம் . அப்போது அரசியல் கட்சிகள் தங்களை வழிநடத்த அரசியல் ஆலோசகர்களை நாடுவது ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    15:42 (IST)25 Jan 2020

    சசிகலா விரையில் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் - ராஜேந்திர பாலாஜி

    சசிகலா விரையில் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பது தான் என்னுடைய பிரார்த்தனை என்றும், சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.

    15:37 (IST)25 Jan 2020

    தமிழகத்தில் கொரனாவைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சீனாவிலிருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தில் கொரனாவைரஸ் பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

    15:36 (IST)25 Jan 2020

    இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்கள் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

    15:34 (IST)25 Jan 2020

    களியக்காவிளை சோதனை சாவடியில் விசாரணை

    கன்னியாகுமரி சிறப்பு காவல்துறை அதிகாரி  வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தௌஃபீக் ஆகியோரை களியக்காவிளை சோதனை சாவடிக்கு அழைத்துவந்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை.

    12:58 (IST)25 Jan 2020

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு: 5 மாவட்டங்களில் சிபிசிஐடி இன்று விசாரணை

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம், நேற்று தேர்வு மையங்களின் அதிகாரிகளாக செயல்பட்ட 2 தாஷில்தார்களை கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , பலர் இந்த முறைகேட்டில் சம்பந்த பட்டிருக்கலாம் என்று  கூறப்படுகிறது.

    12:48 (IST)25 Jan 2020

    9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்க திட்டம் - தமிழக தேர்தல் ஆணையம்

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களை தவிர்த்து 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, இந்நிலையில் ,  இந்த 9 மாவட்டங்களிலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து அரசாணை வெளியிட  தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  

    11:43 (IST)25 Jan 2020

    இன்று தேசிய வாக்காளர் தினம் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

    இந்திய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாப்படுகிறது.

    இந்த தேசிய வாக்காளர் தினம் குறித்து மோடி தனது ட்விட்டரில்," தேர்தல் செயல்முறையை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பாளராகவும் மாற்றுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் தேர்தல் ஆணையத்திற்கு இந்நாளில் நாம் நமது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நாள் நமது ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது" என்று பதிவு செய்துள்ளார்.  

    11:14 (IST)25 Jan 2020

    சீனாவில் படிக்கும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்க - ராமதாஸ்

    சீனாவில் படிக்கும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். 

    இது குறித்து தனது ட்விட்டரில், சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும்! சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா? என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும்! என்று பதிவு செய்துள்ளார்.  

    11:09 (IST)25 Jan 2020

    தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யும் வழக்கை தள்ளுபடி செய்தது - உச்சநீதிமன்றம்

    தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  எம்எல் ஷர்மா என்ற வழக்கறிஞர் தனது மனுவில்," இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபரை எந்த விசாரணையின்றி கைது செய்ய முடியும், இது தனயு மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், நாட்டிற்கு ஒரு தவறான முன் உதாரணம்" என்றும் கூறியிருந்தார்.

    10:43 (IST)25 Jan 2020

    நடிகர் ரஜினிகாந்தை அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - காவல் ஆணையரிடம் புகார்

    நடிகர் ரஜினிகாந்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் திராவிடர் விதுதலை கழகத்தின் (டி.வி.கே)  தொடர்புடைய சில ஆர்வலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினோரா பி.எஸ். அசோக் என்பவர் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்து இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.  

    09:51 (IST)25 Jan 2020

    நாட்டின் 71 ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது

    நாட்டின் 71 ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

    குடியரசு தினம் விழாவில் கலந்துகொள்ளும் அணிவகுப்பு பட்டியல்கள்:  

    தமிழகத்தின் சார்பாக  அய்யனார் கோயில் கொடை விழா காட்சி அணிவகுக்க உள்ளது.  

    09:36 (IST)25 Jan 2020

    கொரோனா வைரஸ் : ராஜீவ் காந்தி மருத்துவனமையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு

    கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி உலகில் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதற்காக, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் இயக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில், எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருபதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    09:20 (IST)25 Jan 2020

    உலக அரங்கில் ஏன் இந்த நோய் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது?

    2002 – 2003 ஆண்டுகளில் சார்ஸ் நோய் உலகம் முழுவதும் உள்ள 35 நாடுகளில் பரவி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பரவியது. 775 நபர்கள் இந்த நோயால் கொல்லப்பட்டனர். சார்ஸ் நோயும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோயாகும். இந்த நோய் பரவியதிற்கான காரணம் 2017ம் ஆண்டு வரை கண்டறியப்படவில்லை. 2017ம் ஆண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் சிலர் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குகைகளில் வசிக்கும் வௌவ்வால்களால் இந்த வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டது. சிலருக்கு சார்ஸ் நோய் மீண்டும் வரும் என்ற அச்சுறுத்தல் தற்போது உருவாகியுள்ளது.

    09:20 (IST)25 Jan 2020

    கொரோனா வைரஸ் அறிகுறியென்ன?

    உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நோயின் அறிகுறிகளாக தீவிர காய்ச்சல், சளி மற்றும் மூச்சுவிட சிரமம் இருத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் தீவிரமான நோய் தொற்று இருந்தால் முதலில் நிம்மோனியா ஏற்படும். பிறகு சிறுநீரகம் செயலிழக்க துவங்கும். இறுதியாக அந்நபர் உயிரிழப்பார். இது போன்ற நோய் தொற்றில் இருந்து தப்பிக்கும் பொருட்டு மக்களுக்கு வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் வகையில் முகமூடி அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள விலங்குகள், காட்டு விலங்குகள் ஆகியவற்றை தொடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட சார்ஸ் நோய் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.

    09:19 (IST)25 Jan 2020

    கொரோனா வைரஸ் குறித்த சில முக்கிய தகவல்கள்

    ஆரம்பத்தில் இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் நோய் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதை உறுதி செய்துள்ளது.மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் அமைந்துள்ளது வுஹான் என்ற நகரம். முதன்முதலில் இங்கு தான் இப்படியான நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நிறைய பொதுமக்கள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஹுவானா கடல் உணவு சந்தை மூடப்பட்டது. 

    09:17 (IST)25 Jan 2020

    கொரோனா வைரஸ் : 41 மக்கள் பலியாகியுள்ளதாக சீனா அறிவிப்பு

    புதிய கொரோனா வைரஸால் 41 பேர் இப்போது இறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில்  மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1,287 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த  கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்க போராடி வருகின்றனர்.

    Tamil Nadu news today updates : இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் தணிந்து, முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று ரத்து செய்து தீர்பளித்தது. புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment