Tamil nadu news today updates : அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த, எஸ்.ஐ., மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துஉள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக தெரிகிறது.சித்தாண்டி, குரூப் - 4 தேர்வுக்கு, 9 லட்சம் ரூபாய்; குரூப் - 2 தேர்வுக்கு, 13 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். அவரது மனைவி, குரூப் - 2 தேர்வில், மாநிலத்தில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்; அவரது தம்பி, மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தம்பி மனைவி, ஆறாம் இடம்; மற்றொரு தம்பி, குரூப் - 4 தேர்வில், 10வது இடத்திற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சூரியனோட மேற்பரப்பா இது?.... ஆச்சர்யப்படுத்தும் போட்டோஸ்...
கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, மருத்துவ மாணவி, 'நிர்பயா' கொலை வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மற்றொரு குற்றவாளி, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனால், திட்டமிட்டபடி, பிப்., 1ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
உத்தர பிரதேசத்தின் முகமதாபாத் நகரில் கார்தியா கிராமத்தில் சுபாஷ் கவுதம் என்ற போதை ஆசாமி தனது மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி சில குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரது வீட்டுக்கு சென்ற 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை அந்த போதை ஆசாமி பணய கைதிகளாக பிடித்து வைத்து உள்ளார். கொலைக் குற்றவாளியான கவுதம், எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.பி. வரவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அறிந்து, ஆசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற சதீஷ் சந்திரா துபே மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு. போலீசார், கிராமவாசி உள்பட 3 பேர் காயம். தகவல் அறிந்த, மூத்த காவல்துறை அதிகாரிகள், தீவிரவாத ஒழிப்பு படை, கமாண்டோ படை, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர் - டி.ஜி.பி. ஓ.பி. சிங்
திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சமி நிலத்தில் முரசொலி இருப்பதாகக் கூறிய பொய்யை நிரூபிக்க முடியாத ராமதாஸ், பிரச்னையைத் திசைதிருப்பாமல், ஆதாரங்களை அளிக்க வேண்டும்; அல்லது பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் தேசிய பதிவேட்டுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர், ஏ.கே.அந்தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Kerala: United Democratic Front (UDF) workers staged a protest against #CitizenshipAmendmentAct and National Register of Citizens in Trivandrum, earlier today. Congress leaders Shashi Tharoor and AK Antony were also present. pic.twitter.com/A0IdTlFOTQ
— ANI (@ANI) January 30, 2020
கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல் துறை அனுமதி வேண்டுமா? ஒரு வேளை அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?"
-தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? உத்தரவை மக்களிடமிருந்து மறைப்பது ஏன் - உயர் நீதிமன்றம் கேள்வி
போராட்டங்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி
ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது. அந்த படம் திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்டவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையை ரஜினிகாந்த் பெற்று தர வேண்டுமென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் திரைப்பட விநியோக 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாளை சந்தித்து பேசுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விநியோகஸ்தர்கள் அனைவரும் திரும்பி சென்றனர்.
சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்க தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தல்
- சென்னை உயர்நீதிமன்றம்
கோவில்பட்டியில் மறுதேர்தல் நடத்தக்கோரி எம்பி கனிமொழி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி ஜாமியா பல்கலைகழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற அமைதிப்பேரணியின் இடையில், ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால், திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் 3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights