இன்றைய செய்திகள்: குரூப் 4 தேர்வு முறைகேடு: தலைமறைவான ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்- சிபிசிஐடி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil nadu news today updates : அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், ‘குரூப் – 4’ தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த, எஸ்.ஐ., மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துஉள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக தெரிகிறது.சித்தாண்டி, குரூப் – 4 தேர்வுக்கு, 9 லட்சம் ரூபாய்; குரூப் – 2 தேர்வுக்கு, 13 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். அவரது மனைவி, குரூப் – 2 தேர்வில், மாநிலத்தில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்; அவரது தம்பி, மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தம்பி மனைவி, ஆறாம் இடம்; மற்றொரு தம்பி, குரூப் – 4 தேர்வில், 10வது இடத்திற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சூரியனோட மேற்பரப்பா இது?…. ஆச்சர்யப்படுத்தும் போட்டோஸ்…

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ கொலை வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மற்றொரு குற்றவாளி, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனால், திட்டமிட்டபடி, பிப்., 1ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:32 (IST)30 Jan 2020

உத்தர பிரதேசத்தில் பணய கைதிகளான 20 குழந்தைகள், பெண்கள்; மீட்பு நடவடிக்கையில் போலீஸ்

உத்தர பிரதேசத்தின் முகமதாபாத் நகரில் கார்தியா கிராமத்தில் சுபாஷ் கவுதம் என்ற போதை ஆசாமி தனது மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி சில குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரது வீட்டுக்கு சென்ற 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை அந்த போதை ஆசாமி பணய கைதிகளாக பிடித்து வைத்து உள்ளார். கொலைக் குற்றவாளியான கவுதம், எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.பி. வரவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அறிந்து, ஆசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற சதீஷ் சந்திரா துபே மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு. போலீசார், கிராமவாசி உள்பட 3 பேர் காயம். தகவல் அறிந்த, மூத்த காவல்துறை அதிகாரிகள், தீவிரவாத ஒழிப்பு படை, கமாண்டோ படை, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர் – டி.ஜி.பி. ஓ.பி. சிங்

20:38 (IST)30 Jan 2020

பஞ்சமி நிலத்தில் முரசொலி – நிரூபிக்க முடியாத ராமதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் -டிகேஎஸ்.இளங்கோவன்

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சமி நிலத்தில் முரசொலி இருப்பதாகக் கூறிய பொய்யை நிரூபிக்க முடியாத ராமதாஸ், பிரச்னையைத் திசைதிருப்பாமல், ஆதாரங்களை அளிக்க வேண்டும்; அல்லது பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

20:32 (IST)30 Jan 2020

கொரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவது பற்றி உயர் நீதிமன்றத்தில் மனு

சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

19:50 (IST)30 Jan 2020

சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தொழிலாளர்கள் போராட்டம்

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் தேசிய பதிவேட்டுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர், ஏ.கே.அந்தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

19:08 (IST)30 Jan 2020

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் பிப். 3ம் தேதி விசாரணை

18:53 (IST)30 Jan 2020

சீன மருத்துவக் கழிவுகளுடன் கப்பல் வந்தது உண்மையா?

சென்னை துறைமுகத்திற்கு சீன மருத்துவக் கழிவுகளுடன் கப்பல் வந்தது, உண்மைக்கு புறம்பானது என சென்னை துறைமுக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

18:25 (IST)30 Jan 2020

கல்யாணம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல் துறை அனுமதி வேண்டுமா?

கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல் துறை அனுமதி வேண்டுமா? ஒரு வேளை அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?”

-தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? உத்தரவை மக்களிடமிருந்து மறைப்பது ஏன் – உயர் நீதிமன்றம் கேள்வி

போராட்டங்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி

17:41 (IST)30 Jan 2020

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தை வெளியிட அனுமதி இல்லை

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது – கலாஷேத்ரா

* டி.எம்.கிருஷ்ணாவின் Sebastian and Sons என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட இருந்தது

17:39 (IST)30 Jan 2020

விசாரணை நாளை ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கில் பிப்.1ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி குற்றவாளிகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு.

17:22 (IST)30 Jan 2020

நெல்லை கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து

தினமும் இரு முறை காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என நெல்லை கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து முதன்மை மாவட்ட நீதிபதி நசீர் அகமது உத்தரவு

17:20 (IST)30 Jan 2020

ரஜினிகாந்த் வீட்டுக்கே நேரடியாக வந்த தர்பார் விநியோகஸ்தர்கள்

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது. அந்த படம் திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்டவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையை ரஜினிகாந்த் பெற்று தர வேண்டுமென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் திரைப்பட விநியோக 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாளை சந்தித்து பேசுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விநியோகஸ்தர்கள் அனைவரும் திரும்பி சென்றனர்.

17:17 (IST)30 Jan 2020

பாஜக அரசு விவாதிக்க தயார்

பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகளையும் பற்றி விவாதிக்க பாஜக அரசு தயாராக உள்ளது

புத்தாண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சரியான திசையை காட்டுவதே நாட்டிற்கு சிறந்த நலனாக அமையும்

– அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

17:16 (IST)30 Jan 2020

பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17:04 (IST)30 Jan 2020

இந்தியா வருகிறார் மஹிந்த ராஜபக்ச

5 நாள் பயணமாக பிப்.7ல் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச

பிப்.8ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் மஹிந்த் ராஜபக்ச

16:31 (IST)30 Jan 2020

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள்

16:27 (IST)30 Jan 2020

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்க தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தல்

– சென்னை உயர்நீதிமன்றம்

16:26 (IST)30 Jan 2020

சீனாவிலிருந்து சென்னைக்கு கப்பலா?

சீனாவிலிருந்து கழிவுகளை ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

16:23 (IST)30 Jan 2020

முதல் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு : பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

15:59 (IST)30 Jan 2020

கனிமொழி போராட்டத்தில் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டியில் மறுதேர்தல் நடத்தக்கோரி எம்பி கனிமொழி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15:16 (IST)30 Jan 2020

டில்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு

டில்லி ஜாமியா பல்கலைகழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற அமைதிப்பேரணியின் இடையில், ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் காயமடைந்தார்.  துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15:05 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

15:04 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

15:04 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

15:04 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

15:04 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

13:21 (IST)30 Jan 2020

குரூப்-4 தேர்வு முறைகேடு – திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால், திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:18 (IST)30 Jan 2020

கனிமொழி சாலையில் அமர்ந்து போராட்டம்

தூத்துக்குடி கோவில்பட்டியில் மறுதேர்தல் நடத்தக்கோரி கனிமொழி எம்பி சாலையில் அமர்ந்து  போராட்டம் மேற்கொண்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.

13:11 (IST)30 Jan 2020

இசையமைப்பாளர் ராகவேந்திரா மரணம்

சென்னையில் இன்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ராகவேந்திரா(75) உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.

11:05 (IST)30 Jan 2020

ராஜ்காட்டில் பிரதமர் மோடி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 72வது நினைவுதினம் நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் , பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

10:40 (IST)30 Jan 2020

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் ரயில் சேவை

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:09 (IST)30 Jan 2020

பஸ்சில் லேடீஸ் சீட்டில் உட்கார்ந்தால் பைன்…

நகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது..

10:01 (IST)30 Jan 2020

தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் – அசத்தும் சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் 3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

09:35 (IST)30 Jan 2020

பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.19 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:33 (IST)30 Jan 2020

மகாத்மா காந்தி நினைவு தினம் – கவர்னர், முதல்வர் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி,  சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர்  பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட  அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tamil nadu news today updates : டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்

கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates corona virus tnpsc scam nirbhaya case

Next Story
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர கண்காணிப்பில் 68 பேர்….coronavirus, coronavirus in tamil nadu, coronavirus causes, coronavirus treatment, coronavirus symptoms, chennai airport, coronavirus causes in india, coronavirus infection
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com