2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க, திமுக- அதிமுக அல்லாத ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக அழைப்பிதழை வழங்கினார். இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும் 1ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா வைரஸ் எதிரொலி : புனிதப் பயணம் ரத்து
கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வரும் காரணத்தால் மெக்காவிற்கு யாரும் வர வேண்டாம் என்று சௌதி அரேபிய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணம் மேற்கொள்ள இருந்த 170 நபர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் படிக்க : கொரோனா வைரஸ் : தாயகம் திரும்பினார்கள் ஜப்பான் கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!
அன்பழகன் கவலைக்கிடம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளாராக பணியாற்றி வரும் க. அன்பழகன் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக 97 வயதான அவரை தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம். அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் கையில்
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்: மத்திய அரசு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. அரசியல் கொள்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதால் தான் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரஜினி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் நாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளைக் கூறிவந்தோம். நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்று கூறினார்.
வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக மொத்தம் 123 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 630 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் மந்தீப் சிங் ரந்தாவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் மந்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் வரவழைக்கப்பட்டு குற்றக் காட்சிகள் மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளது மானியக் கோரிக்கை மீதான விவாதம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப் பணித் துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு
பொதுப்பணித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் குடி மராமத்து திட்டம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை
ராஜீவி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை
டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கடிதம்
எதிர்க்கட்சிகள் அளித்த கடிதத்தில் டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கு
இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக்கூறி கண்டனம் தெரிவித்து சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக பேரணி நடத்தியது. இதில், கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற பாஜகவினர் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசிடம் எதுவும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்
விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு தரவும் ஆலோசனை செய்து வருகிறோம்
- அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை
வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது
- அமைச்சர் ஜெயக்குமார்
துபாயில் நடைபெற்று வரும் தொடர் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஜோகோவிச். ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் காரேனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
குற்றவாளிகளை அடையாளம் காட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய உத்திகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவித்துள்ளார். மேலும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த நம்முடைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டினை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏப்ரல் 6ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய மருத்துவர்களை பணியிடம் மாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து அறிவித்தது நீதிமன்றம். மேலும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்கதேசத்தினரை அடையாளம் காட்டினால் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று நவநிர்மான் சேனா விளம்பரம் செய்துள்ளது. ஔரங்கபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பான சூழல் அங்கே நிலவி வருகிறது.
மியான்மர் அதிபர் யு வின் மைண்ட் மற்றும் அவருடைய மனைவி டா சோ சோ ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர்கள் ஐதராபாத் இல்லத்தில் மோடியை சந்தித்தனர். பிறகு குடியரசுத் தலைவரையும் அமைச்சர்களையும் சந்தித்த அவர்கள், ஆக்ராவிற்கும், புத்தகயாவிற்கும் செல்ல உள்ளனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ நாட்டில் நடைபெறும் மெக்சிகோ ஓப்பன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் ரஃபேல் நடால். அகாபுல்கோவில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பிய வீரர் மியோமிரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலே எடை கொண்அ 21 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகிறார்கள் வனத்துறையினர்.
கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் ஷாபிப் சிங், மற்றும் அபேய் வெர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தெர் மற்றும் ஃபாராஹ் நக்வி தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights