Advertisment

திமுக, அதிமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி: கமல்ஹாசன் திட்டவட்டம்

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan press meet trichy

2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க, திமுக- அதிமுக அல்லாத ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக அழைப்பிதழை வழங்கினார். இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும் 1ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா வைரஸ் எதிரொலி : புனிதப் பயணம் ரத்து

கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வரும் காரணத்தால் மெக்காவிற்கு யாரும் வர வேண்டாம் என்று சௌதி அரேபிய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணம் மேற்கொள்ள இருந்த 170 நபர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.  மேலும் படிக்க : கொரோனா வைரஸ் : தாயகம் திரும்பினார்கள் ஜப்பான் கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

அன்பழகன் கவலைக்கிடம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளாராக பணியாற்றி வரும் க. அன்பழகன் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக 97 வயதான அவரை தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu news today updates  :  இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம். அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் கையில்



























Highlights

    22:07 (IST)28 Feb 2020

    சசிகலா சகோதரி மகன் பாஸ்கரன் வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்; தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் நீலாங்கரை வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    22:00 (IST)28 Feb 2020

    மத்திய அரசு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

    ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்: மத்திய அரசு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. அரசியல் கொள்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதால் தான் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    20:37 (IST)28 Feb 2020

    தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    20:34 (IST)28 Feb 2020

    எல்லை தாண்டிய புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல் படை

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 15ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட, புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது.

    19:48 (IST)28 Feb 2020

    நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் இணைவார்கள் - கமல்ஹாசன்

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரஜினி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் நாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளைக் கூறிவந்தோம். நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்று கூறினார்.

    19:21 (IST)28 Feb 2020

    டெல்லி வன்முறை: 123 எஃப்.ஐ.ஆர் பதிவு; 630 பேர் கைது - டெல்லி காவல்துறை

    வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக மொத்தம் 123 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 630 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் மந்தீப் சிங் ரந்தாவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் மந்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் வரவழைக்கப்பட்டு குற்றக் காட்சிகள் மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

    18:54 (IST)28 Feb 2020

    தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் - முதல்வர் பழனிசாமி சந்திப்பு

    மாநிலங்களவையில் இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் சுதீஷ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

    18:41 (IST)28 Feb 2020

    மார்ச் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்; முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    தமிழக சட்டப் பேரவையில் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளது மானியக் கோரிக்கை மீதான விவாதம்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப் பணித் துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு

    பொதுப்பணித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் குடி மராமத்து திட்டம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை

    18:34 (IST)28 Feb 2020

    அமைச்சரவை பரிதுரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - நளினி மனு

    ராஜீவி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

    தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை

    18:10 (IST)28 Feb 2020

    திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

    பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன்: இஸ்லாமியர்கள் திமுகவை நம்ப வேண்டாம். திமுக போராட்டத்தை தூண்டிவிட்டு பின்னால் சென்று விடுவார்கள்; துப்பாக்கிச்சூட்டில் பலியாவது இஸ்லாமியர்களாக தான் இருபார்கள் என்று கூறினார்.

    18:08 (IST)28 Feb 2020

    டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சிகள் கடிதம்

    டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கடிதம்

    எதிர்க்கட்சிகள் அளித்த கடிதத்தில் டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    17:29 (IST)28 Feb 2020

    இளையராஜா தொடர்ந்த வழக்கு - ஐகோர்ட் அதிரடி

    பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கு

    இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. 

    பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் அதிரடி

    17:20 (IST)28 Feb 2020

    யுவன் 23

    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

    17:15 (IST)28 Feb 2020

    350 பாஜகவினர் கைது

    தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக்கூறி கண்டனம் தெரிவித்து சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக பேரணி நடத்தியது. இதில், கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற பாஜகவினர் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

    17:13 (IST)28 Feb 2020

    பஞ்சாப் கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமனம்

    பஞ்சாப் அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஸ்வின் இந்த தொடரில் நீக்கப்பட்டு கேஎல் ராகுலை புதிய கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம்.

    17:03 (IST)28 Feb 2020

    விலகிய இஷாந்த்

    நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகியுள்ளார்.  அவருக்கு பதில், உமேஷ் பதில் பிளேயிங் லெவனில் ஆட உள்ளார்.

    16:28 (IST)28 Feb 2020

    பாஜக பேரணி

    CAA, NRC, NPR சட்டங்களுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானியர்களுக்கு துணை போகும் திமுக கூட்டணியை கண்டித்தும், அப்பாவி இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதாகவும் சென்னையில் பாஜக ஆர்பாட்டம்.

    16:27 (IST)28 Feb 2020

    விபத்துகளை தவிர்க்க அரசு சார்பில் நடவடிக்கை

    அரசிடம் எதுவும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன

    எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்

    விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு தரவும் ஆலோசனை செய்து வருகிறோம்

    - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    16:26 (IST)28 Feb 2020

    60 அதிகாரிகள் மீது வழக்கு

    குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பணியில் உள்ள 60 அதிகாரிகள் மீது வழக்கு

    டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை

    டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உட்பட பலர் சிக்க உள்ளதாக தகவல்

    16:24 (IST)28 Feb 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    நிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு செய்த, கடையநல்லூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மீதான புகார்

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

    16:02 (IST)28 Feb 2020

    டெல்லியில் வன்முறை - துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு

    டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு

    மாவுஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநர்

    15:49 (IST)28 Feb 2020

    எதிர்க்கட்சிகள் கடிதம்

    டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடிதம்

    டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    15:49 (IST)28 Feb 2020

    வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தம்

    ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

    வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது

    - அமைச்சர் ஜெயக்குமார்

    15:44 (IST)28 Feb 2020

    தென்காசி ஆலங்குளம் கொலை வழக்கு - கொலையாளிக்கு தூக்கு

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்தார் முத்துராஜ் என்பவர். அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது தென்காசி நீதிமன்றம். 

    15:41 (IST)28 Feb 2020

    திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள்

    மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அறிவித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

    15:16 (IST)28 Feb 2020

    காங்கிரஸ் குழு மேற்பார்வை

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு டெல்லியில் வன்முறை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

    14:49 (IST)28 Feb 2020

    ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்

    ஈரானில் சிக்கித் தவிக்கும் 300 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

    14:19 (IST)28 Feb 2020

    தமிழகம் பல துறைகளில் பின்தங்கியுள்ளது - கமல்ஹாசன்

    தமிழகம் பல துறைகளில் பின் தங்கியுள்ளது என்றும் புரட்சிகரமான பொருளாதார திட்டங்கள் தேவை என்றூம் கமல்ஹாசன். தமிழகத்திற்கு திறமையான, நேர்மையான தலைமை தற்போது தேவை என்றும் கமல் கூறியுள்ளார்.

    14:11 (IST)28 Feb 2020

    வில்சன் மகள் இளநிலை உதவியாளராக நியமனம்

    காளியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சனின் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவுக்கு இளநிலை உதவியாளராக பணியாற்ற உத்தரவினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பிறப்பித்தார்.

    14:04 (IST)28 Feb 2020

    துபாய் டென்னிஸ் தொடர் சாம்பியன்ஷிப் - அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

    துபாயில் நடைபெற்று வரும் தொடர் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஜோகோவிச். ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் காரேனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    13:59 (IST)28 Feb 2020

    சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த நம்முடைய சட்டங்கள் போதுமானதாக இல்லை

    குற்றவாளிகளை அடையாளம் காட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய உத்திகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவித்துள்ளார். மேலும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த நம்முடைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    13:57 (IST)28 Feb 2020

    தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வாளர்கள் சோதனை

    டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை நடத்துகின்றனர். டெல்லி வன்முறை தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    13:00 (IST)28 Feb 2020

    டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : சி.பி.ஐ விசாரிக்க திமுக தொடர்ந்த வழக்கு விசாராணை

    டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டினை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏப்ரல் 6ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

    12:41 (IST)28 Feb 2020

    தேசிய மகளிர் ஆணையம் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு

    டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட ஜாஃப்ராபாத் பகுதியை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு.

    12:35 (IST)28 Feb 2020

    குடியாத்தம் எம்.எல்.ஏ மறைவு : ஸ்டாலின் இரங்கல்

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகிய மனித நேயம் கொண்டவர் காத்தவராயன்.எளிமைக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் என்றும் பேச்சு.

    12:29 (IST)28 Feb 2020

    சி.ஏ.ஏவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி

    சி.ஏ.ஏவுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

    11:58 (IST)28 Feb 2020

    பொதுப்பணி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை

    பொதுப்பணி திட்டங்களின் நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்பு.

    11:55 (IST)28 Feb 2020

    காசிமேடு சட்ட-ஒழுங்கு ஆய்வாளர் இசக்கி இடமாற்றம்

    இளைஞர் கொலை சம்பவத்தை தடுக்க தவறியதால் காசிமேடு சட்ட-ஒழுங்கு ஆய்வாளர் இசக்கியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து அறிவித்துள்ளார் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்.

    11:55 (IST)28 Feb 2020

    அதிமுக தலைமை நல்ல முடிவை அறிவிப்பார்கள் - பிரேமலதா

    கூட்டணி அமைக்கும் போதே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கோரி இருந்தோம். அதிமுக தலைமை நல்ல முடிவையே எங்களுக்கு அறிவிப்பார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    11:29 (IST)28 Feb 2020

    தங்கம் விலை உயர்வு

    ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ. 7 அதிகரித்து சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 32,658 ஆகும்.

    11:07 (IST)28 Feb 2020

    அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

    பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய மருத்துவர்களை பணியிடம் மாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து அறிவித்தது நீதிமன்றம். மேலும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    10:55 (IST)28 Feb 2020

    எம்.எல்.ஏக்கள் மரணம் - கூட்டம் ரத்து

    நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த திமுக எம்.பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல். அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 எம்.எல்.ஏக்கள் காலமானதை தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10:53 (IST)28 Feb 2020

    கால்நடை மருந்தகங்களை தரம் உயர்த்த அரசாணை

    தமிழகத்தில் அமைந்திருக்கும் 102 கால்நடை மருந்தகங்களின் தரத்தினை உயர்த்த ரூ. 43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

    10:46 (IST)28 Feb 2020

    பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்கதேசத்தினரை அடையாளம் காட்டினால் ரூ. 5 ஆயிரம்

    மகாராஷ்ட்ராவில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்கதேசத்தினரை அடையாளம் காட்டினால் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று நவநிர்மான் சேனா விளம்பரம் செய்துள்ளது. ஔரங்கபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பான சூழல் அங்கே நிலவி வருகிறது.

    10:27 (IST)28 Feb 2020

    மியான்மர் அதிபர் இந்தியா வருகை

    மியான்மர் அதிபர் யு வின் மைண்ட் மற்றும் அவருடைய மனைவி டா சோ சோ ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர்கள் ஐதராபாத் இல்லத்தில் மோடியை சந்தித்தனர். பிறகு குடியரசுத் தலைவரையும் அமைச்சர்களையும் சந்தித்த அவர்கள், ஆக்ராவிற்கும், புத்தகயாவிற்கும் செல்ல உள்ளனர்.

    10:23 (IST)28 Feb 2020

    வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    10:13 (IST)28 Feb 2020

    மெக்சிகோ ஓப்பன் டென்னிஸ்

    மெக்சிகோ நாட்டில் நடைபெறும் மெக்சிகோ ஓப்பன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் ரஃபேல் நடால். அகாபுல்கோவில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பிய வீரர் மியோமிரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    10:08 (IST)28 Feb 2020

    749 கிலோ எடையுள்ள 21 செம்மர கட்டைகள் பறிமுதல்

    ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலே எடை கொண்அ 21 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகிறார்கள் வனத்துறையினர்.

    10:07 (IST)28 Feb 2020

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை லட்சுமணன்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 650 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    Tamil Nadu news today updates Delhi riots : வடகிழக்கு டெல்லியில் 23, 24, 25 தேதிகளில் நடைபெற்ற கலவரத்தில் இது வரை 38 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுவரையில் 48 முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 7000க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பொது ஒழுங்கினை நிலை நாட்ட பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் ஷாபிப் சிங், மற்றும் அபேய் வெர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தெர் மற்றும் ஃபாராஹ் நக்வி தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Tamil Nadu Delhi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment