Tamil News Updates: உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது – ப.சிதம்பரம்

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu News Live Updates : கடந்த சில மாதங்களாக, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து மற்றும் பயணங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ப்ரெண்ட் மற்றும் WTI எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இருப்பினும் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் அதிகரிக்கவில்லை. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை பல்வேறு மாநகரங்களில் ரூ. 100-ஐ தாண்டிய நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ. 100-ஐ தாண்டியது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ. 104.22க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ. 100.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vaccine Program

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின’ 2-வது அலை தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுளள நிலையில், தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிரமான நடைறெ்று வருகிறது. இதில் ஏற்கனவெ தமிழகம் முழுவதும் 5 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 6-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

6-வது மெகா தடுப்பூசி முகாம் : தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

ஒரே வீட்டில் 11 மரணம், வைரலாகும் புராரி வழக்கு

வானிலை அறிக்கை

வேலுர், ராணிப்பேட்டை. திருவள்ளூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமகல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை; திட்டமிட்டு வெளியே செல்லுங்கள் மக்களே!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:29 (IST) 23 Oct 2021
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது இங்கிலாந்து

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனாது தொடர்ந்து 56 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

7:42 (IST) 23 Oct 2021
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டள்ள நிலையில், அனைத்து வகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு இரவு 11 மணி வரை விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1-ந் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

7:19 (IST) 23 Oct 2021
பாலியல் வழக்கு : விமான படை அதிகாரி அமிதேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விமான படை அதிகாரி அமிதேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோவை மாநகர காவல்துறைக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் விமானப்படைக்கு அளிவுறுத்தப்பட்டுள்ளது.

7:15 (IST) 23 Oct 2021
டி20 உலககோப்பை தகுதிச்சுற்று : தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்க அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் .இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 119 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7:10 (IST) 23 Oct 2021
உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது – ப.சிதம்பரம்

உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது; இந்திய பொருளாதாரம் அபாய கடடத்தில் உள்ளது. அரசின் கொள்கை என்ற பெயரில் குறுக்கீடுகள் தான் அதிகமே தவிர பலனில்லை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது 40% பேர் வேலையிழந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

5:22 (IST) 23 Oct 2021
டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 119 ரன்கள் இலக்கு!

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியில் ஐடன் மார்க்ராம் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.

5:01 (IST) 23 Oct 2021
ரஷ்யாவில் தொடரும் கொரோனா பலி: ஒரேநாளில் 1,075 பேராக உயர்வு

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 82,05,983 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 1,075 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.

4:44 (IST) 23 Oct 2021
“அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை” – ஓபிஎஸ், ஈபிஎஸ்

பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்க கோரிய சசிகலாவின் வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் வாதங்கள் முடிவடையாததால் விசாரணை அக்.27-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

4:30 (IST) 23 Oct 2021
டி20 உலகக்கோப்பை ஆட்டத்தை சமூக இடைவெளியுடன் கண்டுகளிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

4:24 (IST) 23 Oct 2021
டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் டி-20 போட்டி நாளை இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு; – பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ், ஹைடர்,

4:23 (IST) 23 Oct 2021
டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் டி-20 போட்டி நாளை இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு; – பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ், ஹைடர்,

4:07 (IST) 23 Oct 2021
15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் மலை 3:30 மணி நேரப்படி 15. 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

4:04 (IST) 23 Oct 2021
’வலிமை’ சிமெண்ட் அறிமுகமானவுடன் மேலும் விலை குறையும் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்! ​

“தமிழக அரசின் டான்செம் நிறுவனம் விரைவில் 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது . வலிமை’ சிமெண்ட் அறிமுகமானவுடன் சிமெண்ட்விலை மேலும் குறையும். சிமெண்ட் விலையை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

3:38 (IST) 23 Oct 2021
நாசி தடுப்பூசி நல்ல பலனளிப்பதாக பாரத் பயோடெக் தகவல்!

கொரோனாவுக்கு எதிராக நாசி தடுப்பூசி நல்ல பலனளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மேலும் அவற்றின் 2ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் திருப்தியளிப்பதாகவும், விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3:28 (IST) 23 Oct 2021
வலிமை சிமெண்ட விரைவில் அறிமுகம்

ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு அரசின் டாம்செம் நிறுவனம் வலிமை என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தவுள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

2:43 (IST) 23 Oct 2021
ஆஸ்கர் போட்டியில் ‘கூழாங்கல்’ திரைப்படம்

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2:18 (IST) 23 Oct 2021
கருப்பூர் கலம்காரி ஓவியத்துக்கு புவிசார் குறியீடு

கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சை நெட்டி வேலை உட்பட கைவினைப் பொருள்களுக்கும், அரும்பாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

1:44 (IST) 23 Oct 2021
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் & கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1:29 (IST) 23 Oct 2021
சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம் – தமிழக அரசு

சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சமூக நீதி பாதுகாப்பு குழு உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஜெய்சன், முனைவர் ராஜேந்திரன், கோ.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

12:58 (IST) 23 Oct 2021
கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு; கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல்

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல் அளித்து கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 நாள் விசாரணைக்கு சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

12:57 (IST) 23 Oct 2021
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

12:41 (IST) 23 Oct 2021
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்

12:12 (IST) 23 Oct 2021
மரணத்துக்கு பிறகும் சாதி மனிதனை விடவில்லை – உயர்நீதிமன்றம் வேதனை!

தனக்கு சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் உடல்களை தகனம் செய்ய எடுத்துச் செல்வதை தடை செய்ய கோரிய மனு விசாரணையின் போது மரணத்துக்கு பிறகும் சாதி மனிதனை விடவில்லை என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

12:00 (IST) 23 Oct 2021
நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை தொடக்கம்

நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

11:57 (IST) 23 Oct 2021
நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி சீல் வைத்துள்ளனர்.

11:39 (IST) 23 Oct 2021
அரசுப் பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

10:57 (IST) 23 Oct 2021
தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு

சென்னை எழில் நகர் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

10:54 (IST) 23 Oct 2021
உத்தரகாண்ட் நிலச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

10:49 (IST) 23 Oct 2021
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

தேர்தல் அதிகாரியின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி மந்த்ராசலம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை

10:30 (IST) 23 Oct 2021
தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தக்கங்கத்தின் விலை ரூ. 4, 515 ஆக உள்ளது.

10:17 (IST) 23 Oct 2021
பெரும்பாலான ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் பதவிகளையும் ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது திமுக. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி மேள தாளங்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

10:06 (IST) 23 Oct 2021
நவம்பர் 1 அன்று மழலையர்கள் பள்ளிகள் திறக்கப்படாது

நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எப்போது மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9:23 (IST) 23 Oct 2021
ஊரடங்கு : கூடுதல் தளர்வுகள்

தீபாவளி கொண்டாட்டம், பள்ளிகள் திறப்பு மற்றும் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை இன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9:22 (IST) 23 Oct 2021
டி20 உலக கோப்பை

டி20 உலகக்கோப்பைக்கான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா அணி. நமீபியா முதன்முறையாக டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9:22 (IST) 23 Oct 2021
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் வாங்கிய விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்த அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

9:14 (IST) 23 Oct 2021
மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

Web Title: Tamil nadu news today live updates diesel price politics weather dmk aiadmk

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com