Tamil Nadu news today updates : தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் காலமானார்

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.79 விற்பனையாகிறது. நேற்றைய விலை ரூ. 75.85

Tamil Nadu news today updates : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ஆட்சியில் அதிகாரம் பகிர்வுக்கான பேச்சுவார்த்தையில் இன்றுவரை  முழுஉடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.  தாக்கரேவின் மாடோஷ்ரீ இல்லத்தில் நேற்று நடந்த புதியதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்,  ஆட்சியில் பாதி ஆண்டு கால  முதல்வர் பதவி சிவசேனாவுக்கு வழங்கப்படும் வேண்டும் என்ற கோரிக்கை அனைவராலும்  எழுப்பப்பட்டதாக தெரிகிறது. மேலும், சிவசேனாவின் கோரிக்கையை பாஜக பூர்த்தி செய்யவில்லை  என்றால் மாற்று ஏற்பாடுகள் செய்ய சிவசேனா யோசிக்க தயங்காது என்றும் தாக்கரே கூட்டத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று, தீபாவளி பண்டிகை மொழி மறந்து, நாடு கடந்து அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்களும், பொது  மக்களும் தீபாவளி  வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

மேலும், இது போன்ற நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


18:47 (IST)27 Oct 2019

தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் காலமானார்

தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 80. முதலமைச்சர் பழனிசாமியின் மனைவி ராதாவின் தந்தை காளியண்ணன் எடப்பாடிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர். முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தா அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

18:10 (IST)27 Oct 2019

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பிரதமர் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

16:31 (IST)27 Oct 2019

பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சவுதி அரேபியா பயணத்தின்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

14:44 (IST)27 Oct 2019

தர்பார் போஸ்டர் வெளியீடு

துப்பாக்கி , மெர்சல் படங்களை இயற்றிய ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தர்பார் சார்பில்  தீபாவளி வாழ்த்துகளை ரசிகர்களுக்கு பகிர்வதாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது. 

14:38 (IST)27 Oct 2019

ஹரியானாவில் முதல்வர், துணை முதல்வர் பதவி ஏற்றனர்

ஹரியானாவில் முதல்வராக மனோகர் லால் கட்டாரும் , துணை முதல்வராக  ஜனாயகம் ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதலாவும் சற்று முன்பு பதவி ஏற்றுள்ளனர்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பெறமால் இருந்ததால் ஜனாயகம் ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது பாஜக

 

14:24 (IST)27 Oct 2019

சுதர்சன் பட்நாயக் பசுமை தீபாவளி சிற்பம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இன்று பசுமை தீபாவளி என்ற கருத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடித்துள்ளார். பசுமை தீபாவளி மூலமாக  காற்று மாசுபடுவதை நம்மால் தடுக்க முடியும் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.    

12:47 (IST)27 Oct 2019

கிரிக்கெட் பிரபலங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் கிரிக்கெட் முதல் உலக கிரிக்கெட் வீரர்கள் வரை தங்களது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  

12:04 (IST)27 Oct 2019

உலக நாடுகளில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி திருநாள் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐ,நா சபை, கூகிள் நிறுவனம்  தொடங்கி , அமெரிக்கா , , துபாய் போன்ற முக்கிய இடங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டு  வருகிறது .

 

11:24 (IST)27 Oct 2019

ஆஸி- இலங்கை டி20 கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுபயணம் செய்து வரும் இலங்கை அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் அபாரமாக தனது முதல் டி20  சதத்தை விளாசினார். ஆரோன் பின்ச் அரை சதத்தோடு வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் மட்டும்  இழந்து  233 ரன்களை குவித்தது …. இது, ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா எடுத்த  அதிகபட்ச டி20 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

10:41 (IST)27 Oct 2019

ரஜினி ரசிகர்களுடன் தீபாவளி

பண்டிகை நாளை  முன்னிட்டு ரஜினி தனது வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறினார். அப்போது, எடுக்கபப்ட்ட சில புகைப்படங்கள் இங்கே :   

10:26 (IST)27 Oct 2019

இந்திய- வங்கதேசம் எல்லை வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , இந்தியா – வங்கதேசம் எல்லையில் இரு நாட்டு எல்லை காவலர்கள்  இனிப்பு பரிமாறி தீபாவளி திருநாள் பண்டிகையை அனுபவிக்கின்றனர்.

 

10:20 (IST)27 Oct 2019

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அசத்தல் தீபாவளி ட்வீட்

இருக்கும் ஐ.பி..எல் அணிகளிலே சற்று வித்தியாசமான, விவகாரமான அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் என்றே சொல்ல வேண்டும். அந்த அணியின் அதிகாரப் பூர்வ தீபாவளி ட்வீட் வீடியோவில் , ” சத்தம் மற்றும் மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவதற்காக  எங்கள்  அணி கிரிக்கெட் மைதனத்துகுள்ளேயே அனைத்து பட்டாசுகளையும் விட்டுவிட்டோம்”  என்று பதிவு செய்துள்ளது.     
   

09:35 (IST)27 Oct 2019

ராகுல் காந்தியின் தீபாவளி வாழ்த்து

இன்று மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் நாடு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   ராகுல் காந்தி, தனது ட்விட்டரில் , ”  அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, மகிழ்ச்சிகளால் உங்கள் வாழ்க்கை நிரப்பப்படட்டும் என்று பதிவு செய்துள்ளார். 

08:50 (IST)27 Oct 2019

கரும்பு ஆலைகள் வாங்கிய கடனை சீரமைப்பு செய்ய வேண்டும்

தமிழகத்தின் கரும்பு உற்பத்தியையும், கரும்பு ஆலைகளையும் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பொது வங்கிகளும், தனியார் வங்கிகளும் கரும்பு ஆலைகள் வாங்கிய கடனை மரு சீரமைப்பு செய்யும் வரை திவால் சட்டத்த்தை வைத்து கரும்பு ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.  
      

08:30 (IST)27 Oct 2019

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து

இந்தியா பிரதமர் தனது ட்விட்டரில், ” தீபாவளி  கொண்டாடும் இந்நன்னாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களுக்கும், நாட்டிற்க்கும்  மகிழ்ச்சி, செழிப்பு, நல்வாய்ப்பு ய் ஒருங்கே கிடைக்கட்டும்” என்று பதிவு செய்துள்ளார்.      

08:23 (IST)27 Oct 2019

ஜனாதிபது ராம் நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து

இன்று இந்திய மக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் குடிமகனாக இருக்கும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ட்விட்டரில் , அன்பு,அக்கறை , பாசம் என்ற தீபத்தால் வாழ்க்கைத்தரம் குறைவாக இருக்கும் மக்களின் வாழ்வில் இந்த திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று பதிவு செய்துள்ளார்    

Tamil Nadu news today updates:   ஹரியானாவின் முதல்வராக மனோகா் லால் கட்டரை இன்று அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.   துணை முதல்வராக ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் செளதாலாவும் பதவி ஏற்கவுள்ளார்.

தமிழகத்தில் கீழடியைத் தாண்டி மேலும் புதிய நான்கு இடங்களை அகழ்வாராய்ச்சி  செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது. ஈரோடில்  இருக்கும் கொடுமனல், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகலை , தூத்துக்குடியின்  ஆதிச்சனல்லூரில் இந்த  அகழ்வாராய்ச்சி நடைபெறும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates diwali wishes happy deepavali 2019 deepavali wishes

Next Story
தீபாவளி உனக்காக காத்திருக்கிறது; எழுந்து வா சுஜித்! – 100 அடி ஆழத்தில் மௌனம் ஏன்?Sujith Wilson death : Party leaders and cinema celebrities pay tributes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com