ஆப்கானிஸ்தான் விவகாரம்
ஆப்கானிஸ்தானின் ஃபாய்சாபாத்தில் இன்று காலை 6.08 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு உள்ள வெளிநாடுகளை சேர்ந்தவர்களை தங்கள் நாட்டுக்கு திருப்ப அழைக்னும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக காபூல் சென்ற இந்திய விமான படையின் சி-17 விமானம் டெல்லி திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னுரிமை அடிப்படையில், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்று வந்த உள்நாட்டுப்போரில் அந்நாட்டின் அரசுப்படைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படை தங்களது நாட்டிற்கு திரும்பி வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை திரும்ப்பெரும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது.
இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிர்ணையித்த 272 ரனகள் இலக்கை நோக்கி களகமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியிள் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கடந்த சில மாதங்களாக உச்சம் பெற்று வரும் பெட்ரோல் டீசல் விலை சில நாடகளாக மாற்றம் இல்லாமல் உள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ 99.47-க்கும் டீசல் விலை ரூ94.39-க்கும் விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ள நிலையில், அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார். இதனால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானிற்கு சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டினர் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ள தலிபான் செய்திதொடர்பாளர் காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அசாதாரன சூழல் நிலவி வருவகிறது. தற்போது இந்த நிலை குறித்து பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு விட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளன எனவும், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள், ஆப்கான் ராணுவ படையின் ஆயுதங்கள் தலிபான் வசம் சென்றன. இதனால் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கான் மாறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக உலக நாடுகள் பலவும் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச்சென்று வரும் நிலையில், இந்தியாவும் தனது தூதரக அதிகாரிகளை இந்தியா அழைத்து வந்துள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படவில்லை என்றும், உள்ளூர் ஊழியர்கள் அங்கு பணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவிகளுகு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சிவசங்கர் பாபுவுக்கு ஜாமீன் வழங்கினால் புகார்தாரர்களுக்கும், விசாரணைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் மன பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாக கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளனர். மக்களின் மன பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறும் போலி சாமியார்கள், குருக்களின் கைகளிலேயே மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். அனைத்து தரப்பட்ட வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் பிரச்னைகளை பேசுவதற்குதான் வந்துள்ளோம்; அது பற்றி தெரியாமல் நிதியமைச்சர் பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதத்தில் மத்திய அரசு முழுமையாக முடிக்கும் என பொதுநல மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, கடந்த 2011-2021 காலகட்டத்தில் சொத்துகுவித்ததாக அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.
தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம். அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் தீவரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கனவே செப்.21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்ததால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என சூர்யா தனது மனுவில் கூறியிருந்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் எப்போதும் கைவிடப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீர்குலைக்க சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோயில்களில் ஏற்கனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் சமூக நீதியை பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறும் தலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாராலிம்பிக்கில் பங்கேற்க உள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேசினார். பாரா ஒலிம்பிக் இந்திய அணியின் கேப்டனாக மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி வகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்வார். ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புறப்பட்ட சி-17 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது. குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தில் சி-17 விமானம் தரையிறங்கியது.
“தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக அரசு அறிவித்த தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமாகா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.
சேலம் ஈரோடு,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அங்கு மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காகிதமில்லா பட்ஜெட்டிற்கு பாராட்டுகள். இதே போல அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்க வேண்டும் என்றும் மதுரையில் திறக்கப்படவுள்ள நூலகத்தில் புத்தகங்கள் தான் அதிகம் இருக்க வேண்டும், முற்றிலும் கணினிமயமாக்கி விட கூடாது என்றும் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கைவிடுத்துள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கியது.
சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள Wi-Fi வசதியை (smart city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அர்ச்சகர்கள் நியமன விவாகரத்தில் சட்ட விதிமீறல்கள் இல்லை என்றும் விதிமீறல்களை சுட்டிக்காட்டினால் விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், கோயில்களில் ஏற்கெனவே பணியில் உள்ள அரக்கர்களை வெளியேற்றும் திட்டம் எதுவுமில்லை என்றும் மற்றவர்களின் மிரட்டலுக்கு பணியும் அரசு திமுக அரசு இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ள நிலையில், சீனாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஆப்கனில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளர். இதன் மூலம் இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது