Advertisment

இன்றைய செய்திகள்: பெரியார் கருத்துகள் கொண்ட படத்தை வெளியிட ரஜினி உதவினார் - இயக்குநர் வேலு பிரபாகரன்

நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டம்,நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸியாஸ் பொல்சனாரோ பங்கேற்றுள்ளார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: பெரியார் கருத்துகள் கொண்ட படத்தை வெளியிட ரஜினி உதவினார் - இயக்குநர் வேலு பிரபாகரன்

திமுக கழக தலைமைக் கழக முதன்மைச் செயலாளாராக கே.என் நேரு நியமிக்கபட்டுள்ளார். இதுவரை இந்த பொறுப்பு வகித்து வந்த டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், முதன்மைச் செயலாளர் பதவி கே,என்.நேருவிற்கு வழங்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகளைத் தொடர்ந்து காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடுகள் அரங்கேறி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதிய 130-க்கும் மேலானவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 8826 காலிப்பணியிடங்களுக்கு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ல்  தேர்வு நடைபெற்றது.

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:29 (IST)26 Jan 2020

    ஆதரவற்றோர் சடலங்களை தகனம் செய்து வருபவருக்கு பத்மஸ்ரீ விருது

    ஆதரவற்றோர் சடலங்களை தகனம் செய்து வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது ஷரீஃப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:09 (IST)26 Jan 2020

    பெரியார் கருத்துகள் கொண்ட படத்தை வெளியிட ரஜினி உதவினார் - இயக்குநர் வேலு பிரபாகரன்

    பெரியார் கருத்துகளை தாங்கிய தனது படத்தை வெளியிட ரஜினிகாந்த் உதவியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் மனம் திறந்து பேசியுள்ளார்.

    19:47 (IST)26 Jan 2020

    காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் பகுதியில் பெரியார் சிலை உடைத்த வழக்கில் ஒருவர் கைது

    காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் பகுதியில் உள்ள கலியப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்த வழக்கில் தாமோதரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    19:12 (IST)26 Jan 2020

    கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் - நடிகர் சிவக்குமார்

    தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய, நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம்.. உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்று கூறினார்.

    அடுத்து பேசிய, நடிகர் சூர்யா: நாம் யாரும் சுயம்பு கிடையாது; சமூகத்தில் இருந்து நிறைய எடுத்திருக்கிறோம், அதை திருப்பி அளிப்போம். அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே உள்ளது. நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபைக்கு செல்லுங்கள். அந்த கிராமத்தில் தூர் வாரும் பணிகளுக்கு உதவுங்கள்.” என்று கூறினார்.

    இதையடுத்து, அகரத்தின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ, அவரது தாய், தந்தை, ஜெயஸ்ரீயின் குழந்தை ஆகியோரையே மேடையிலேற்றி நன்றி தெரிவித்து அழுதார் சூர்யா.

    18:54 (IST)26 Jan 2020

    பயனற்ற ஆழ்துளைக் கிணறு மழைநீர் சேகரிப்பு அமைப்பானது - பிரதமர் பாராட்டு

    பிரதமர் மோடி: பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது. தமிழகத்தில் தோன்றியதுபோல் எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவுக்கு வலுசேர்த்து வருகின்றன என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

    18:18 (IST)26 Jan 2020

    தூத்துக்குடியில் குடியரசு தின விழாவுக்கு பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சஸ்ட்பெண்ட்

    தூத்துக்குடியில் உள்ள எஸ்.குமாரபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியை பாக்கியசெல்வி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    17:37 (IST)26 Jan 2020

    விஜய்யின் மாஸ்டர் படத்தின் தேர்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் 3வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய்யுடன் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    17:26 (IST)26 Jan 2020

    குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

    குடியரசு தினத்தையொட்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

    16:51 (IST)26 Jan 2020

    மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியதாக ஆளுநருக்கு புகார் மனு - திமுக பொருளாளர் துரைமுருகன்

    ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் ஆளுநருக்கு புகார் மனு அனுப்பினார்,

    உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பேசியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    16:08 (IST)26 Jan 2020

    சீனாவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமையை கண்காணிக்கிறோம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

    சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தநிலையில், அங்குள்ள இந்தியர்களின் நிலைமை குறித்து தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் முதன்முதலாக வைரஸ் பரவிய வுஹான் நகரில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    வுஹானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை.

    வுஹானில் உள்ள மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பான முறையில் இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுத்துவருவதாக இந்திய தூதரகம் தகவல்.

    14:51 (IST)26 Jan 2020

    பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் - மு.க ஸ்டாலின்

    ஸ்டாலின் தனது ட்விட்டரில் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.  

    14:44 (IST)26 Jan 2020

    தமிழகத்திற்கு பத்ம விருதுகள் குறைவது வருத்தமளிக்கின்றது – ராமதாஸ்

    தமிழ்நாட்டிலிருந்து 7 பேருக்கு மட்டுமே இந்தாண்டு  பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கேரளத்தை சேர்ந்த ஐ,.ஐ.டி. பேராசிரியர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அடுத்த ஆண்டிலாவது அதிக விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

    மேலும்,  தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் விருது பெறும் தொழிலதிபர் வேணு சீனிவாசன், பத்மஸ்ரீ விருது பெறும் பாம்பே சகோதரிகள், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றும் சுந்தரம் ராமகிருஷ்ணன், நாதஸ்வரக் கலைஞர்கள் கலீஷாபி & ஷேக் முகமது ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

    13:09 (IST)26 Jan 2020

    ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த கூடாது, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    காவிரி படுகையை இரண்டு மண்டலங்களாக பிரித்து 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது. பின்னர் போராட்டம் கிளம்பியதால் இந்த திட்டத்தை தற்காலிகமாக மத்திய அரசு ஒத்தி வைத்தது.

    சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான வரையரையும் மாற்றியமைத்தது மத்திய அரசு. புதுவரையின் கீழ் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ, மக்கள் கருத்துக்கேட்போ தேவை இல்லை.

    இதற்கு, பல்வேறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தஞ்சை கறம்பக்காடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    12:52 (IST)26 Jan 2020

    அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா கொண்டாட்டம்:

    இந்தியாவின் 71வது குடியரசு தினம் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

    மேற்கு வங்காளம் 

    குடியரசு தின விழா 
    மகாராஷ்டிர 

    குடியரசு தின விழா 

    11:39 (IST)26 Jan 2020

    இன்று மாலை 6 மணிக்கு மான் கி பாத் ஒளிபரப்பப்படும்

    பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   வழக்கமான இந்த வானொலி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்

    11:37 (IST)26 Jan 2020

    இந்தியாவுக்கு பிரேசிலுக்கும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல் : 

    இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல் : 

    11:30 (IST)26 Jan 2020

    சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது

    சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ நெருங்குகிறது என்று சீனா அதிகாரிகள் தெரிவித்தனர். ஷாங்காய் நகரில்  கொரோனா வைரஸால் ஒருவர் பலியாகியுள்ளார் மரணத்தை .

    10:52 (IST)26 Jan 2020

    சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது

    சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது இன்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.  கோவை C2 காவல் நிலையம்  மாநிலத்தின் முதல் பரிசை தட்டி சென்றது,  இரண்டாம்  மற்றும் மூன்றாம் பரிசு  திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம் மற்றும் தருமபுரி நகர காவல் நிலையம் முறையே கொடுக்கபப்ட்டது.  

    காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பான வசதிகள்  ஏற்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் கோவை C2 காவல் நிலையம் விருதுக்கு  தேர்வாகியுள்ளது

    10:44 (IST)26 Jan 2020

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார்

    71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக  ஆளுநர்  பன்வரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்

    மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மாநில அமைச்சர்களும்  இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

    Tamil Nadu news today updates : இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நேற்று தனது குடியரசு தின உரையில்," தேசத்தின் நிர்மாணத்திற்காக, அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்கள் இன்றும்கூட பயனுடையவையாக இருக்கின்றன. காந்தியடிகளின் வாய்மை மற்றும் அஹிம்சை தொடர்பான செய்தியை நினைத்து பார்த்து அதன் வழிநடப்பது என்பது நமது தினசரி வாடிக்கையாக வேண்டும்" என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

    அதிமுக செய்தி தொடர்பாளராகவும், திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கே.சி.பழனிசாமி. இவர் நேற்று காலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சூலூர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள கே.சி பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment