Tamil Nadu news today live updates : பாஜக பிரமுகர் ஜானகிராமன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். திருவள்ளூர் பொன்னேரி அருகே அமைந்திருக்கும் மேட்டுப்பாளையத்தில் ஜானகி ராமன் என்பவர் வீட்டுப் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம் 450 சவரன் நகைகள், 20 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் குறித்த வீடியோ
மறைமுக தேர்தல்கள் சிசிடிவி காட்சிப் பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களையும் முறையாக சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திமுக மனு அளித்தது. இதற்கு பதில் அளித்த தமிழக தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்கள் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கான அறிக்கைகளை நேற்றே 27 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்க இருப்பதாகவும் கூறியது.
Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், மாணவர் தலைவர் ஆய்ஷே கோஷ், பேராசியர்கள் சுக்லா உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை இன்று வெளியிட்டது டெல்லி காவல்துறை.
எனக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த ஒவ்வொரு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெறும் வன்முறை தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க இவர்களை அனுப்புங்கள் என்று முக ஸ்டாலின் ட்வீட்.
I wholeheartedly thank each and every one of the @crpfindia personnel for providing security cover for me over the past many years.
I urge the Govt to utilize CRPF personnel to protect universities and students from those perpetrating violence in the name of religion.
— M.K.Stalin (@mkstalin) January 10, 2020
முக ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பினை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கு பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில் இது ஒரு தவறான நடவடிக்கை என்று வைகோ அறிவித்துள்ளார்.
புதுச்சேரி தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் 16 பங்கேற்றுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1 கோடி ரூபாய் நிதியளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது
ரேசன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என்று கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். அரிசி கொள்முதலில் ஊழல் நடப்பதால், ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் நாராயண சாமி வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் மாநகர போக்குவரத்துத்துறை சார்பில் இன்று முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15ம், அதிகபட்ச கட்டணம் ரூ.60வும் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 35 ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜாகிர் அரண்மனை. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த அரண்மனை புதர்மண்டி, சிதிலமடைந்து, பொழிவிழந்து காணப்படுகிறது. இதனை புதுப்பித்து, இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட புராதான சின்னங்களை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ஒருவாரத்துக்குள் மத்திய அரசு இணைய முடக்கத்தினை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ராமேஸ்வரம் தீவுகளில் இருப்பவர்கள் அதிகமாக இந்த தேர்வில் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் முதலிடம் பிடித்த திருவராஜூ தந்திடிவிக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்க்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை அறிவித்தது. ஜனவரி 10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை அவர் பரோலோலில் வெளியே வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights