Tamil Nadu news today updates : ‘தர்பார் படத்தில் சசிகலா குறித்த வசனத்தை நீக்கத் தயார்’ – லைகா

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.92க்கு விற்பனை. டீசல் ரூ.72.97க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tamil Nadu news today updates
Tamil Nadu news today updates

Tamil Nadu news today live updates : பாஜக பிரமுகர் ஜானகிராமன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். திருவள்ளூர்  பொன்னேரி அருகே அமைந்திருக்கும் மேட்டுப்பாளையத்தில் ஜானகி ராமன் என்பவர் வீட்டுப் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம் 450 சவரன் நகைகள், 20 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் குறித்த வீடியோ

மறைமுக தேர்தல்கள் சிசிடிவி காட்சிப் பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களையும் முறையாக சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திமுக மனு அளித்தது. இதற்கு பதில் அளித்த தமிழக தேர்தல்  ஆணையம் இந்த தேர்தல்கள் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கான அறிக்கைகளை நேற்றே 27 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்க இருப்பதாகவும் கூறியது.

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


17:36 (IST)10 Jan 2020

ஜே.என்.யு வன்முறையில் ஈடுபட்டவர்கள் புகைப்படங்கள் வெளியீடு

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், மாணவர் தலைவர் ஆய்ஷே கோஷ், பேராசியர்கள் சுக்லா உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை இன்று வெளியிட்டது டெல்லி காவல்துறை.

16:05 (IST)10 Jan 2020

பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணம் செல்ல, பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக 310 இணைப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

15:18 (IST)10 Jan 2020

பாதுகாப்பு காவலர்களுக்கு நன்றி !

எனக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த ஒவ்வொரு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெறும் வன்முறை தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க இவர்களை அனுப்புங்கள் என்று முக ஸ்டாலின் ட்வீட். 

15:01 (IST)10 Jan 2020

”தவறான நடவடிக்கை” மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்

முக ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பினை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கு பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில் இது ஒரு தவறான நடவடிக்கை என்று வைகோ அறிவித்துள்ளார்.

14:43 (IST)10 Jan 2020

உள்ளாட்சி தேர்தல் செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்ககான பாதுகாப்புகளை வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

14:41 (IST)10 Jan 2020

பொங்கல் பரிசு

புதுவையில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₨170 பணம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.

14:05 (IST)10 Jan 2020

காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டம்

புதுச்சேரி தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் 16 பங்கேற்றுள்ளனர்.

14:03 (IST)10 Jan 2020

எஸ்.ஐ. வில்சன் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம்

மார்த்தாண்டம் அருகே உள்ள களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1 கோடி ரூபாய் நிதியளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

12:51 (IST)10 Jan 2020

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது

12:48 (IST)10 Jan 2020

கிரண்பேடி உத்தரவுக்கு எதிராக நாராயணசாமி வழக்கு – விசாரணைக்கு ஏற்பு

ரேசன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என்று கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். அரிசி கொள்முதலில் ஊழல் நடப்பதால், ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் நாராயண சாமி வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

12:23 (IST)10 Jan 2020

கமாண்டோ பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து கண்டனம்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பினை நேற்று மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதற்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

12:21 (IST)10 Jan 2020

சென்னையில் இன்று முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

சென்னையில் மாநகர போக்குவரத்துத்துறை சார்பில் இன்று முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15ம், அதிகபட்ச கட்டணம் ரூ.60வும் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

12:19 (IST)10 Jan 2020

ஜாகிர் அரண்மனையை புதுப்பிக்க அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 35 ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜாகிர் அரண்மனை. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த அரண்மனை புதர்மண்டி, சிதிலமடைந்து, பொழிவிழந்து காணப்படுகிறது. இதனை புதுப்பித்து, இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட புராதான சின்னங்களை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

12:16 (IST)10 Jan 2020

ராணுவ விவகாரத்துறையின் கீழ் செயலாளர்கள் அறிவிப்பு

கடந்த வாரம் முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் பிபின் ராவத். இவரின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள் மற்றும் 22 செயலாளர்கள் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12:14 (IST)10 Jan 2020

தங்கத்தின் விலை மேலும் குறைவு

தங்கத்தின் விலை நேற்று ரூ. 500 வரை குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. சென்னையில் கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து தற்போது ரூ. 30,344க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது தங்கம்.

11:31 (IST)10 Jan 2020

தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பினை காக்க வேண்டியது நீதிமன்றம்

தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. நீதிமன்றங்களின் கடமை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் இணைய முடக்கம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கருத்து.

11:23 (IST)10 Jan 2020

இணைய முடக்கம் : திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ஒருவாரத்துக்குள் மத்திய அரசு இணைய முடக்கத்தினை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

10:47 (IST)10 Jan 2020

களியக்காவிளை காவல்துறை உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட விவகாரம்

களியக்காவிளையில் பணி புரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சையது முகம்மது மற்றும் அப்பாஸ் இருவரை கைது செய்து கேரள காவல்துறையினர் விசாரணை.

10:40 (IST)10 Jan 2020

எம்.ஜி.ஆர் 103வது பிறந்தநாள்!

எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் வருகின்ற 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ராயப்பேட்டையில் உள்ள சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்த உள்ளனர்.

10:33 (IST)10 Jan 2020

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வு

பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் அதிகரித்து ரூ.78.92க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து ரூ.72.97க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:32 (IST)10 Jan 2020

டி.என்.பி.எஸ்.சி. விசாரணையில் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ராமேஸ்வரம் தீவுகளில் இருப்பவர்கள் அதிகமாக இந்த தேர்வில் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் முதலிடம் பிடித்த திருவராஜூ தந்திடிவிக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்க்றார்.

10:32 (IST)10 Jan 2020

டெல்லி பனி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டத்தால் 23 ரயில்கள் தாமதம்.

10:32 (IST)10 Jan 2020

பவானி சாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 104.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 32.7 டிஎம்சி ஆகும். நீர்வரத்து – 589 கனஅடியாகவும் நீர் திறப்பு 2200 கனஅடியாகவும் உள்ளது.

10:31 (IST)10 Jan 2020

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 113.76 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 83.86 டிஎம்சி ஆகும். நீர்வரத்து – 1029 கனஅடியாகவும் நீர் திறப்பு 10,000 கனஅடியாகவும் உள்ளது.

Tamil Nadu news today updates : கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் அவருடைய வீட்டின் முன்பு மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்தது காவல்துறை. இதில் முக்கிய குற்றவாளியாக ருஷிகேஷ் தேவ்திகர் நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை அறிவித்தது. ஜனவரி 10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை அவர் பரோலோலில் வெளியே வருகிறார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates gold rate fuel price admk dmk tn weather pongal darbar

Next Story
மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் – திமுகவுக்கு சரமாரி கேள்விsmriti irani speech in madurai on pro-caa rally - மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் - திமுகவுக்கு சரமாரி கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express