Advertisment

உள்ளாட்சித் தேர்தல்: ஒரேநாளில் 3217 பேர் வேட்புமனு தாக்கல், திமுக வழக்கு நாளை விசாரணை

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 77.83 ஆகும்.டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 69.59.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உள்ளாட்சித் தேர்தல்: ஒரேநாளில் 3217 பேர் வேட்புமனு தாக்கல், திமுக வழக்கு நாளை விசாரணை

Tamilnadu news updates ; local body election 2019

Flash News in Tamilnadu Today Updates: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது . உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை கடந்த 7ம் த்தி தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார். நேற்று முதல் நாளிலே, 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16 வரை நடைபெறுகிறது. நேற்று மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. வார்டு வரையறை பணிகள் முழுமையாக நடைபெறாத வரையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கக் கூடாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. திமுக மனுவை நாளை விசாரணைக்கு எடுத்தக் கொள்ள உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது

Advertisment

குடியுரிமை சட்ட திருத்தம் 2019 மசோதாவை  இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இன்றைய  மசோதா குடியுரிமைச் சட்டம், 1955 திருத்திக்க முயற்சிக்கிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் ஆவணமற்ற இந்தியாவிற்குள் வந்து தங்கிய சிறுபான்மையினருக்கு  குடியுரிமை வழங்க முற்படுகிறது.

எல்லாப்பூர், ரானேபென்னுர், விஜயநகர, யஷ்வந்த்பூர், மஹாலட்சுமி லேஅவுட், சிக்கபல்லபுரா, கே.ஆர்.புரம், சிவாஜிநகர்,  கே.ஆர் பீட், ஹன்சூர், அதானி, காக்வாட், கோகக், ஹிரேகூர், ஹோஸ்கோட் ஆகிய  15 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகுகிறது .இந்த இடைத்தேர்தலில் , பாஜக 13 கிளர்ச்சி எம்எல்ஏக்களை களம் இறக்கியிருந்தது.

இது போன்ற மேலும் சில முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:07 (IST)09 Dec 2019

    இன்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 2,834

    கிராம ஊராட்சி தலைவர் - 333

    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 47

    மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 3

    வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16 வரை நடைபெறுகிறது

    21:43 (IST)09 Dec 2019

    குற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா?

    வழிபறி வழக்கில் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதால், குற்றவாளிகளுக்கு விரைவில் ஜாமீன் கிடைத்து விடுவதாகவும், இதனால், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா? என்பதை குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    21:29 (IST)09 Dec 2019

    தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்

    தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி மறுக்கும் சென்னை மாநகராட்சி சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    21:12 (IST)09 Dec 2019

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்த ஓவைசி

    மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு

    இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது; நாட்டை மற்றொரு பிரிவினைக்கு உள்ளாக்கும் நோக்கம் கொண்டது - ஓவைசி

    21:11 (IST)09 Dec 2019

    கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    சில்லரை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைத்திருக்க மேலும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    விலை உயர்வு எதிரொலியால் சில்லரை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும்

    20:52 (IST)09 Dec 2019

    என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு

    ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 4 பேரின் உடல்களை 9 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வரும் 13 ஆம் தேதி வரை 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. மகபூப் நகர் மருத்துவமனையில் பதப்படுத்தும் வசதி இல்லாததால், ஐதராபாத் காந்தி மருத்துவமனைக்கு உடல்களை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

    20:33 (IST)09 Dec 2019

    2 பேருக்கு ஆயுள் தண்டனை

    ஓசூர் அருகே தொளுவபெட்டா கிராமத்தில் விவசாயி பசப்பா என்பவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு..

    20:28 (IST)09 Dec 2019

    விரைவான நீதியை எதிர்பார்க்கின்றனர்

    குற்ற வழக்குகளில் காவல்துறை தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வருகின்றனர், இதனால் மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது. மக்கள் தற்போது விரைவான நீதியை எதிர்பார்க்கின்றனர் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    20:14 (IST)09 Dec 2019

    பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம்

    சிறுத்தை சிவா இயக்கும், ரஜினியின் 168வது படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

    19:58 (IST)09 Dec 2019

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    19:38 (IST)09 Dec 2019

    நாளை அறிவிப்போம்

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து மாவட்ட அளவில் கருத்துகளை கேட்ட பிறகு நாளை அறிவிப்போம் - பொன்ராதா கிருஷ்ணன்

    19:13 (IST)09 Dec 2019

    தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை

    வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து ஈரோடு, கோயபுத்தூர் பகுதியை சார்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் 30 பேர், ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கிளைகளிலும், இன்று காலை 11 மணி முதல், சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கடை மற்றும் ஹோட்டலுக்குள் அதிரடிய நுழைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த வாடிக்கையாளரை வெளியேற்றி விட்டு, சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    18:58 (IST)09 Dec 2019

    உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் பொது சின்னம் வழங்க கோரி மனு

    வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன பொது சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் நாளை பதில் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்

    18:58 (IST)09 Dec 2019

    மரங்களை வேரோடு மாற்றி நடும் போது, அவை மீண்டும் துளிர்க்குமா?

    சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வேரோடு மாற்றி நடும் போது, அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

    தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை பெற்று அறிக்கையாக தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    18:43 (IST)09 Dec 2019

    ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்

    2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்

    குறுக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்ற ப.சிதம்பரம் தரப்பின் கோரிக்கை ஏற்பு.

    18:14 (IST)09 Dec 2019

    நித்யானந்தா மீது கடும் நடவடிக்கை

    நித்யானந்தா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டம். 

    நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை எச்சரிக்கை 

    18:06 (IST)09 Dec 2019

    அநீதி என்ற கேள்விக்கே இடமில்லை

    தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பின்னணியில் எந்த அரசியல் பின்புலமும் கிடையாது; இந்த மசோதாவால் அநீதி என்ற கேள்விக்கே இடமில்லை என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    18:05 (IST)09 Dec 2019

    அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம் பெயர்ந்தவர்கள் தான்

    1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது; கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இருப்பார்கள்; அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள்தான்

    - அமித்ஷா

    17:55 (IST)09 Dec 2019

    12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்

    நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் - கர்நாடக போலீஸாருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு

    நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் அதிரடி

    17:30 (IST)09 Dec 2019

    ஊராட்சி தலைவர் பதவி ரூ. 50 லட்சத்துக்கு ஏலம்? - பதவிகள் ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. துணை தலைவருக்கு 15 லட்சம் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    17:06 (IST)09 Dec 2019

    சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில், கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    16:37 (IST)09 Dec 2019

    ரஜினிக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    16:25 (IST)09 Dec 2019

    மாணவர்கள் மீது தடியடி

    டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜே.என்.யூ மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க மாணவர்கள் முயற்சி செய்யும் போது இச்சம்பவம் நடந்துள்ளது. 

    16:16 (IST)09 Dec 2019

    முல்லை பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு

    முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் துணை கண்காணிப்புக் குழு நாளை ஆய்வு  செய்கிறது. ஐவர் குழுவின் ஆய்வில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அணையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படுகிறது. 

    15:52 (IST)09 Dec 2019

    திமுக-வுக்கு தோல்வி பயம் - அன்புமணி ராமதாஸ்

    தோல்வி பயத்தால், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது எனவும் உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

    15:27 (IST)09 Dec 2019

    ரஜினியும் கமலும் இணைவார்கள்

    ரஜினியும், கமலும் தேவையான நேரத்தில் இணைவார்கள் என்றும், அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு உள்ளது என்றும் ஓசூரில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் பேட்டியளித்துள்ளார். 

    15:21 (IST)09 Dec 2019

    சித்தராமையா ராஜினாமா

    கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சித்தராமையா. அவரைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

    15:10 (IST)09 Dec 2019

    ப.சிதம்பரம் பேட்டி

    மத்திய தேசிய குடியுரிமை சட்டத்திற்கு பதில், அகதிகள் சட்டத்தை கொண்டுவந்திருக்க வேண்டும் எனவும்,  நாட்டை பிளவுப்படுத்தவே மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளது எனவும்  புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். 

    15:00 (IST)09 Dec 2019

    சோனியா காந்திக்கு திமுக-வினர் வாழ்த்து

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

    14:55 (IST)09 Dec 2019

    திருமாவளவன் வழக்கு

    மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் * சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். விரைவில் இம்மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    14:42 (IST)09 Dec 2019

    பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

    14:29 (IST)09 Dec 2019

    தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர்:

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.  162 கோடி மதிப்பிலான வீடுகள் வீட்டு வசதி வாரியம் சார்பாக கட்டப்பட்டு  பொதுமக்கள் பாயன்பாட்டிற்காக  கொடுக்கப்பட்டுள்ளது.   

    14:23 (IST)09 Dec 2019

    ராதாபுரம் வழக்கு விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.   2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது . 

    14:19 (IST)09 Dec 2019

    வேலையற்ற மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

    வங்கியில் கல்விக் கடன் வாங்கி படிப்பை  முடித்து வேலையில்லாத மாணவர்களின் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்களவையில் விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.    

    13:58 (IST)09 Dec 2019

    தமிழகத்துக்கு துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி-

    எகிப்து, துருக்கியிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான MT வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது . அதன் தொடர்ச்சியாக இன்று, கப்பல் மூலம் துருக்கியில் இருந்து சென்னை வந்த 30 டன் வெங்காயம், திருச்சி வெங்காய மண்டிக்கு அனுப்பப்பட்டது.    

    13:54 (IST)09 Dec 2019

    தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தனர்.

    தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில்  தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்தனர். செபம்பர் 22ம் தேதி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. பார் கவுன்சில் சேர்மேனாக அமல் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மரியாதை நிமித்தமாக  உறுப்பினர்கள் முதல்வரை  சந்தித்து  வாழ்த்து பெற்றனர். மேலும், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது.     

    13:22 (IST)09 Dec 2019

    ப.சிதம்பரத்தின் அச்சமில்லை அச்சமில்லை புத்தகம் 10ம் தேதி வெளியீடு

    ஐ.என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார் . இந்த 106 நாட்கள் ஜெயிலில் இருந்தபோது அவர் எழுதிய "அச்சமில்லை அச்சமில்லை" என்ற புத்தக்கத்தை வரும் ஜனவரி 10ம் தேதி கவிஞர்  வைரமுத்து தலைமையில்  வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.      

    13:15 (IST)09 Dec 2019

    "குயின்" வெப் சீரியஸ்க்கு தடை விதிக்க ஜெ.தீபா வழக்கு

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெயலலித்தாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும்  "குயின்" வெப் சீரியசை வெளியிட தடை விதிக்க வேண்டும்  என்று  தீபாஜெயகுமார்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதில அளிக்குமாறு  இயக்குனர் கவுதம் மேனனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   

    13:10 (IST)09 Dec 2019

    கார்த்திகை தீபம் - மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    பரணி தீபம்:  பரணிதீபம்  நாளை அதிகாலை 4 மணியளவில் நடைபெறவிருக்கிறது. பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர். 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகாதீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.  

    13:02 (IST)09 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்ய, திமுக உச்சநீதிமன்றத்தில் மனு

    தமிழகத்தில் இன்று உள்ளாட்சி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. வார்டு  வரையறை பணிகள் முழுமையாக நடைபெறாத வரையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கக் கூடாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.  திமுக மனுவை   நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்தக் கொள்ள  உச்சநீதிமன்றமும்  ஒப்புதல் அளித்துள்ளது.   

    11:48 (IST)09 Dec 2019

    750க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியுரிமை சட்டம் தவறானது என்று எதிர்ப்புக் கடிதம்

    டிசம்பர் 9 ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்  குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் குழு எதிர்ப்பு கடித்தத்தை வெளியிட்டுள்ளது. இஸ்லாமியர்களை விடுத்து மதத்தின் அடிப்படையில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  இது இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் உணர்வை மீறுவதாகவும் அந்த கடிதம்  கூறியுள்ளது.

    மூன்று முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து 750 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள்:  சந்தீப் திரிவேதி (டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், மும்பை), ராஜேஷ் கோபகுமார் (கோட்பாட்டு அறிவியல் சர்வதேச மையம், பெங்களூரு) மற்றும் அதிஷ் தபோல்கர் (சர்வதேச மையம் கோட்பாட்டு இயற்பியல், இத்தாலி).

    11:32 (IST)09 Dec 2019

    சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஆரோகியாமாக நீண்ட நாள் வாழ தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.   இன்று 73 வயதை எட்டிய சோனியா காந்திக்கு உயர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர் . 

    கொண்டாட்டம் வேண்டாம் சோனியா வேண்டுகோள்:   நாடு முழுவதும் கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில்,  தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் முன்னதாக அறிக்கை விடுத்திருந்தார்.

    காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் :   'காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய சோனியா காந்தியின் முன்மாதிரியான தன்மை பல தலைமுறை காங்கிரஸ் தலைவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவகளின் வலிமை, கண்ணியம், இரக்கம் கருணை ஆகியவை நம்மை ஒன்றிணைத்து பலப்படுத்தியுள்ளன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ”என்று கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது .

    11:24 (IST)09 Dec 2019

    இன்று, மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்தம் 2019 மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை தாக்கல் செய்யும் மத்திய உள்துறை அமைச்சை அமித் ஷா தற்போது பாராளுமன்றம் வந்தார்.

    11:15 (IST)09 Dec 2019

    பிளவுபடுத்தும் ஓட்டுனருடன் 'கேப்'(CAB) சவாரி: குடியுரிமை மசோதாவில் கபில் சிபல்

    காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இன்று குடியுரிமை (திருத்த) மசோதா தொடர்பாக தனது கருத்தை ட்விட்டரில் , பிளவுபடுத்தும் ஓட்டுநருடன் "கேப்'(CAB bill ) " சவாரி செய்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயங்களை மட்டும் கருத்தில் கொண்டு,  நமது சமூகம்  அரசியலமைப்பு, அரசியல் மதிப்புகளை சீர்குலைக்கும் இந்த  "கேப்'(CAB bill ) " சவாரி பிளவுபடுத்தும் ஓட்டுனரால் ஒட்டப்படுகிறது" என்று பதிவு செய்துள்ளார். 

    11:09 (IST)09 Dec 2019

    Assam NRC: அது பற்றிய full history.

    அசாம் என்.ஆர்.சி பதிவின் மூலம், வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்டது. இது பற்றிய முழு தகவல்களைப் பெற இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

    11:02 (IST)09 Dec 2019

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா - திரிபுராவில் போராட்டம்

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து, திரிபுரா மாநில தலைநகரமான அகர்தலாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    11:00 (IST)09 Dec 2019

    கண்ணுக்குத் தெரியாத இந்து-முஸ்லீம் பிரிவினை - சிவசேனா குற்றச்சாட்டு

    மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல்  செய்வதற்கு முன்னதாக,சட்டவிரோதமாக  குடியேறிய இந்துக்களை மட்டும்  ஏற்றுக்கொள்வது நாட்டில் ஒரு மதப் போருக்கு தூண்டுதலாக செயல்படும் ?  என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு இந்து-இஸ்லாம் பிரிவினையை கண்ணுக்குத் தெரியாத வகையில் உருவாக்கி வருகிறது.  மசோதாவின் (சிஏபி) கீழ் செய்யப்படும் வாக்கு வங்கி அரசியல் நாட்டின் நலனுக்கு நல்லது  இல்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருக்கிறார்.    மேலும், சிவசேனா  கட்சியின் ஊடகமான 'சாமானா'வில் இந்த மசோதா தாக்கல் செய்யும் நேரத்தையும் கேள்வி  எழுப்பியுள்ளது, "இந்தியாவில் இப்போது பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லையா, இருந்தாலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா போன்ற புதிய பிரச்சனைகளை  நாம் அழைக்கின்றோம்", இது போன்ற மசோதா நிரந்தர பிரிவை உண்டாக்கும் என்று கூறியுள்ளது.      

    10:18 (IST)09 Dec 2019

    வெங்காய விலை உயர்வுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு ஆர்பாட்டம்:

    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சியின்  தலைவருமான என். சந்திரபாபு நாயுடு வெங்காய விலை உயர்வைக் கண்டித்து சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   

    publive-image

    09:34 (IST)09 Dec 2019

    சோனியா காந்தி பிறந்த நாள் - ஸ்டாலின் வாழ்த்து

    திமுக தலைவர் ஸ்டாலின்  தனது ட்விட்டரில், " இன்று பிறந்த நாள் காணும்  சோனியா காந்தி அவர்களுக்கு  எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் சொல்லும்படியான  பங்களிப்புகளைச் செய்துள்ளது" என்று பதிவு செய்துள்ளார்.   

    09:28 (IST)09 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது:

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல்  தொடங்குகிறது.  உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை கடந்த 7ம் த்தி  தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.  இத்தேர்தலில் 2.58 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 4 வண்ணங்களில் வாக்குசீட்டு வழங்கப்படும். மாவட்டத்திற்கு 1 ஐ.ஏ.எஸ் அதிகாரி பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    உள்ளாட்சித்  தேர்தல் தொடர்பான முக்கியத்  தேதிகள்: 

    publive-image 

    09:22 (IST)09 Dec 2019

    குடியுரிமை சட்ட  திருத்த மசோதா எதிராக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்

    இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) மக்களவை உறுப்பினர் பி.கே.குன்ஹாலிக்குட்டி, குடியுரிமை சட்ட  திருத்த மசோதா (சிஏபி), 2019 ஐ அறிமுகப்படுத்துவதை எதிர்த்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்  கொண்டுவந்துள்ளார் .

    publive-image

    08:55 (IST)09 Dec 2019

    கர்நாடகாவின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்படுகிறது

    15 சட்டமன்ற இடைதேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. காலை நேர நிலவரப்பட எண்ணப்பட்ட மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், ஜெ.டி(எஸ்) , பாஜக  தலா ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கின்றனர்.publive-image    

    Tamil Nadu news today updates:   டெல்லி அனாஜ் மண்டியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர்.

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment