Advertisment

Tamil Breaking News Highlights: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Tamil Nadu News Update Today- 10 July 2024 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fisherman boat

Tamil News IE Updates

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100.75க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனையாகிறது.

வானிலை அறிவிப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட அனுமதி

கருணாநிதி பெயரில் நினைவு நாணயம் வெளியிட  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நாணயத்தில் கருணாநிதி பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற உள்ளது.

 • Jul 10, 2024 23:55 IST
  டிஎன்பிஎல் - சேப்பாக் அணி வெற்றி

  திருப்பூர் தமிழன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கீல்லிஸ் அணி வெற்றி. முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்ட முடியாமல் 142 ரன்கள் எடுத்து தோல்வி • Jul 10, 2024 22:37 IST
  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி

  யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும்போதே, தனது சொகுசு காரில் சிவப்பு விளக்கு பொருத்தியது, தனி மீட்டிங் அறை என பல அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. இதனால் அவரை இடமாற்றம் செய்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

  இவர், தனக்குக் கண் பார்வை குறைபாடு இருப்பதாக முறைகேடான சான்றிதழ்களைக் காட்டி யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது! • Jul 10, 2024 22:30 IST
  பேட்மிண்டன் விளையாடிய திரௌபதி முர்மு

  குடியரசு தலைவர் மாளிகையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார். • Jul 10, 2024 21:42 IST
  1,500 சவரன் நகை கொள்ளையடித்தவர் கோவையில் கைது

  தமிழ்நாடு முழுவதும் 68 கொள்ளைச் சம்பவங்களில் 1,500 சவரன் நகையைக் கொள்ளையடித்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தேனியைச் சேர்ந்த ராடுமேன் மூர்த்தியை கோவை மாநகர தனிப்படை போலீஸ் கைது செய்தது; கொள்ளையடித்த பணத்தை வைத்து ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் ஒன்றை மூர்த்தி வாங்கியுள்ளார் • Jul 10, 2024 21:38 IST
  கரூர் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு பேட்டி

  "எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்" என கரூர் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். • Jul 10, 2024 20:39 IST
  ஷோபா கரந்தலஜே மனு - நீதிமன்றம் மறுப்பு

  பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புப்படுத்தி பேசிய வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு மீது இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. • Jul 10, 2024 20:38 IST
  செந்தில் பாலாஜி காவல் 45வது முறையாக நீட்டிப்பு

  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார் • Jul 10, 2024 20:36 IST
  சென்னை காவல் ஆணையர் அருண் அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை

  புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களுடன் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளுடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை செய்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளார். • Jul 10, 2024 19:42 IST
  மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ்

  மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நிறைவு பெற்றது. • Jul 10, 2024 19:41 IST
  குணா படத்தின் ரீ-ரிலீஸ்க்கு தடை கோரிய மனு: நீதிமன்றம் புதிய உத்தரவு

  குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • Jul 10, 2024 19:38 IST
  சிறைக்குள் வீட்டு உணவு அனுமதிக்க கோரி நடிகர் தர்ஷன் மனு

  கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், சிறை உணவு சாப்பிட்டதால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால், சிறைக்குள் வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும் என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். • Jul 10, 2024 19:12 IST
  மெட்ரோ ரயிலில் எந்திர கோளாறு: பயணிகள் உடனடியாக வெளியேற்றம்

  விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை  செல்லக்கூடிய மெட்ரோ ரயில் உயர்நீதிமன்ற நிறுத்தத்திற்கு வந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. மேலும் ரயிலில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதால் பயணித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து  தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுளளது.  பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. • Jul 10, 2024 18:36 IST
  பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது!

  பேரூர் படித்துறையில் காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி பெட்டிக்கடை உரிமையாளரிடம் ₹15,000 பணம்| பறித்த பாஜக நிர்வாகி பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெருமாள், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்போது பாஜக கோவை மாநகர் மாவட்டம் முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக உள்ளார் • Jul 10, 2024 17:41 IST
  எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி வாரியாக ஆலோசனை நடைபெறுகிறது. தொகுதி வேட்பாளர், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. • Jul 10, 2024 17:04 IST
  நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி; தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்

  2019 ஆண்டு நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி தொடர்பான வழக்கில், மோசடி தொடர்பான குற்றவாளிகளின் ஆவணங்களை கொடுக்க மறுப்பது ஏன் என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

  மேலும், இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மாணவிகள் நீட் தேர்வுக்கு தாலி அணிந்து வந்தால் கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாக கூறினார் • Jul 10, 2024 16:33 IST
  அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடாது – இ.பி.எஸ்

  அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று தமிழ்நாடு அரசு செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் முடியாது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது தமிழ்நாடு அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் • Jul 10, 2024 16:19 IST
  முல்லைப்பெரியாறில் தவறி விழுந்த யானை; தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

  முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 150 அடி பள்ளத்தில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்தது. யானையைக் காப்பாற்ற தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது • Jul 10, 2024 15:49 IST
  இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு; படகுழுவுக்கு மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை

  கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என  மதுரை மாவட்ட உரிமைகள் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் இயக்குநர் சங்கர் தரப்பில், ஆஜராகும் வழக்கறிஞரின் வாதம், பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் . இந்த உத்தரவு அவர்களையும் கட்டுபடுத்தும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது • Jul 10, 2024 15:22 IST
  மருத்துவக்கழிவு எரிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக; ஐகோர்ட் உத்தரவு

  மருத்துவக்கழிவு எரிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார் • Jul 10, 2024 14:31 IST
  கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?


  கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன சென்னை ஐகோர்ட் கேள்வியெழுப்பி உள்ளது.மேலும் பட்டியலின பழங்குடி இன சலுகைகள் சென்றடைந்துள்ளதா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளது. • Jul 10, 2024 13:55 IST
  சாராயம் அருந்திய 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

   

  விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி அருந்திய 7 பேருக்கு திடீர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. • Jul 10, 2024 13:53 IST
  சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தரிசனம்

  சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது தரிசனம் செய்ய எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  இந்நிலையில், ஆனி திருமஞ்சன விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் கனசபை மீது ஏறி தரிசனம் செய்தார்கள். • Jul 10, 2024 13:04 IST
  கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம்; ஆர்.பி. உதயகுமார் கைது: எடப்பாடி கண்டனம்


  “மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் அமைதியான முறையில் போராடிய அ.தி.மு.க.வினர் மற்றும் உதயகுமாரின் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  சுங்கச்சாவடி தொடர்பான உள்ளூர் மக்களின் கோரிக்கையை அரசு கேட்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். • Jul 10, 2024 12:45 IST
  செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வழக்கை ஒத்திவைக்க வைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. • Jul 10, 2024 12:18 IST
  மெரினா கடலில் தத்தளித்த 2 சிறுவர்கள்; ஓடோடி சென்று காப்பாற்றிய மீட்புக் குழு

  மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி தத்தளித்த நிலையில், அவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றினர்.Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment