Tamil Nadu News today updates : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன், திருவாரூரில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளான். கைதான மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது தப்பியோடிய சுரேஷ் என்ற கொள்ளையனைப் பிடிக்க போலீஸ் தீவிரம். பிடிப்பட்ட கொள்ளையனை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை.
ராதாபுரம் தேர்தல் வழக்கில், இன்று உயர்நீதி மன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கு தடைகோரிய அதிமுக எம்.எல்.ஏ இன்பத்துரையின் மனுவை உச்சநீதி மன்றம் இன்று விசாரிக்கிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தடையில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பேனர் வைக்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.
திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.#Police | #Trichy | #Theft pic.twitter.com/zEBxPDsH5D
— Thanthi TV (@ThanthiTV) October 4, 2019
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன் - மனுதாரர் அப்பாவு பேட்டி
உச்சநீதிமன்றத்தில் வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் - அப்பாவு
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரைத்துறையினர் மீது தேசத்துரோக வழக்குப்பதியப்பட்டதற்கு தமிழக காங். கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, "வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுக்க பிரதமரிடம் முறையிட்டதற்காக வழக்குப்பதியப்பட்டது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ. இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இன்பதுரை தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் ராமசந்திரன் ஆஜராகி வாதிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது . அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி தமிழக வருகையொட்டி பேனர் வைக்க அனுமதி தருமாறு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை சாடும் வகையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் என்றும் பாஜக தமிழக தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் உடனான சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொன்னர், “அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம்தான் பேச முடியும்” என்று தெரிவித்தார்.
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக அக்.15-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதுத் தொடர்பான வழக்கில் நீட் தேர்வு முறைகேடுகள் அதிகாரிகள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினர். ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டனர்? எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் கேள்வி எழுப்பட்டது.
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை அதிமுக கோரவில்லை என்கிற சர்ச்சை எழுந்தது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற தலைவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் குழு, தமிழக பாஜக.வுக்கு தலைவர் இல்லாததால் சந்திக்கவில்லை என கருத்து கூறியது.
இந்நிலையில் பிரதமர் சென்னை வந்தபோது இடைத்தேர்தல் ஆதரவு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் சென்றார். இன்று பிற்பகலில் அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அதிமுக.வுக்கு ஆதரவு கேட்டார் அவர்.
ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ரிசல்ட் விவரங்கள் சீலிட்ட உறையில் வைக்கப்படும். உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவை அறிவிக்க இயலும் என்பது குறிப்பிடத் தக்கது.முன்னதாக அப்பாவு தரப்பிலும் தங்களைக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் விரிவான விவாதங்கள் எதுவும் இன்று நடக்கவில்லை. இன்பதுரையின் கோரிக்கையான வாக்கு எண்ணிக்கைக்கு தடை என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேசமயம் முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு அருண் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு இன்பதுரை தரப்பில் இன்று வாதிடப்பட்டது.
எனினும் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதேசமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனவே ப.சிதம்பரம் சிறையில் இருக்கும் நிலை தொடர்கிறது.
முதலில் 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அடுத்து 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளின் 16,083 வாக்குகளும் மீண்டும் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் உள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் பதிவான 1508 தபால் வாக்குகளில், 203 ஓட்டுக்கள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த 203 வாக்குகள் உட்பட 1508 தபால் வாக்குகளையும் எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவிர, 3 ரவுண்ட் வாக்குகளையும் எண்ண இருக்கிறார்கள். வெறும் 49 வாக்குகளில் திமுக வேட்பாளர் அப்பாவுவை, அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே 203 வாக்குகளை இணைத்து எண்ணும்போது, முடிவு மாறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் தற்போது தொடங்கியிருக்கிறது. அதிமுக-வில் வெற்றி பெற்ற இன்பதுரை, திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு உள்ளிட்டோர் அங்கிருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பதிவாளர் பட்டியலில் இந்த வழக்கு 64 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை முன்கூட்டியே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி.
முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது புதுக்கோட்டையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் திருமணமாகி, 2 வயதில் மகள் உள்ள நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து 3 முறை தலாக் கூறியதை தொடர்ந்து இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைதான மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரிய வந்திருக்கிறது.
காந்தியின் சொற்களை எவ்வாறு அடுத்த தலைமுரையினருக்கு எடுத்து செல்வது ? என்ற கேள்வுக்கு பதில் தேட சிந்தனையாளர்களையும், தொழில்முனைவோரையும் , தொழில்நுட்பத் தலைவர்களையும் நான் அழைக்கின்றேன் என்று மகாத்மா காந்தி பற்றி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டிஜிட்டல் சக்ராவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், மத்திய அரசாங்க நிறுவனமான என்ஐசி நிர்வகிக்கும் அனைத்து வெப்சைட் களிலும் காந்தி குறித்த தகவல்களை, பொன்மொழிகளை வெளியிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights