/tamil-ie/media/media_files/uploads/2019/12/image-64.jpg)
nellai kannan
Tamil Nadu breaking news today live updates Tamil Nadu weather : தமிழகத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை வரும் 5-ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்களால் சென்னையில் குற்றங்கள் குறைந்திருப்பதாக, காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக, வீடுகளில் கோலம் போட்டும், தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள் தமிழக மக்கள். முன்னதாக ‘சிஏஏ-என்ஆர்சி வேண்டாம் என கோலம் போட்டவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான 5 ஆய்வகங்களை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
Live Blog
Tamil Nadu breaking news today Live updates Tamil Nadu weather
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள
கிஷான் சமான் நிதி யோஜனாவின் கீழ் 8000 விவசாயிகள் பலன் - கர்நாடகாவில் மோடி பேச்சு
Today, we’ve provided fishermen from Tamil Nadu & Karnataka deep-sea fishing boats & transponders.
Karnataka has witnessed another historic achievement today. 8th crore Indian farmer has benefited from the PM Kisan Samman Nidhi Yojana: PM Modi #PMWithFarmers pic.twitter.com/cMdJ4qWz2F
— BJP (@BJP4India) January 2, 2020
Hello FM வானொலியின் தலைமை இயக்க அலுவலர் திரு.விஜயன் ஆதித்தன் அவர்கள் இன்று, "2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த அரசியல் ஆளுமை" - க்கான Hello FM விருதினை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு வழங்கினார். pic.twitter.com/nkeK47L4t1
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 2, 2020
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த ரியா என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழி. மேலும் அவர் அதில் ”மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக திமுக திகழ்கிறது” என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.
திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு பேட்டியளித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ”திருடியபின் திருடன் திருடன் எனக் கத்துவதை விட திருடுவதற்கு முன்னே திருடப் போகிறான் என்று தான் கூறி வருகிறோம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
’பிரதமரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள்!" என்று அதிமுக-வை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் பேசுவதாக கூறி பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குளிர்காய நினைத்த எடப்பாடி அரசின் அதிகார அநியாயத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்ததும் பூசி மெழுகினர்.
இதோ 20ம் தேதி பேசப்போகிறார் பிரதமர்! அவரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள்!#admkantipplgovt pic.twitter.com/QaMMcjXIwK
— M.K.Stalin (@mkstalin) January 2, 2020
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் மட்டும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சலுகை விலை லட்டுகளை ரத்து செய்து விட்டு, ஒரேயொரு இலவச லட்டை வழங்க முடிவு செய்திருக்கும் தேவஸ்தானம், கூடுதலாக பக்தர்கள் வாங்கும் லட்டு ஒன்றை ரூ.50-க்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோல போராட்டத்தை திமுக-வினர் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர் கடந்த இரண்டு நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு காரணமாக இவருக்கு வயிற்றிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கோர்ட்டில் ஆஜர் செய்யும் முன் நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பெரும்பாலும் உடல் நலத்தை காரணம் காட்டி நெல்லை கண்ணன் இன்று பெயில் கேட்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜக பெயில் கிடைக்க விடாமல் செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார். இவரை போலீசார் பெரும்பாலும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வைக்க வாய்ப்புள்ளது. 10 நாட்கள் வரை கண்ணனை கஸ்டடியில் வைக்க கூட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. பிரதமர் குறித்தும், கொலை குறித்தும் பேசியதால் இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கண்ணனுக்கு பெயில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
`பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் படி அவர் நேற்று தங்கியிருந்த ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கு அரசியல் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, #ReleaseNellaiKannan என்ற ஹேஷ் டேக்கில் ட்விட்டரில், நெல்லை கண்ணனை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights