Flash News in Tamilnadu Today Updates: 'லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, 'நீட்' பயிற்சி வகுப்புக்கு செல்பவர்களுக்கு தான், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது என்றால், வசதியில்லாத ஏழைகளுக்கு, மருத்துவக் கல்லுாரிகளின் கதவுகள் திறக்காதா; இந்த பிரச்னைக்கு ஏன், மத்திய அரசு தீர்வு காணக்கூடாது' என, உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வுக்கான விதிகளை ஏற்படுத்திய மத்திய அரசு, கிராமப்புற மாணவர்களின் நிலையையும், கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 'தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என, மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. அயோத்தி மாவட்ட கலெக்டர் அனுாஜ் குமார் ஜா, கூறியதாவது: அயோத்தி வழக்கில், தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில், மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பகிர்ந்து கொள்வது, அதை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக செய்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பொருளாதார பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்கு
டிஆர்பி தலைவர், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூரைச் சேர்ந்த பரசுராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி வழங்கியதாக 7 ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் மற்றும் கருவிகள் வாங்கியது என 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய்க்கு போலியாக தலைமை ஆசிரியர் கணக்கு காட்டியுள்ளதாகவும் அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து நீதிபதிகள் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ஐபிஎல்லில் நோ பாலைக் கண்காணிக்க பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுவருகிறது. ஐபிஎல் போட்டிகளில், பிரதான நடுவர்கள் சில நேரங்களில் நோ பாலை சரியாக கண்டறிந்து தெரிவிப்பதில் கோட்டைவிட்டு விடுவதுண்டு.
இதனால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு. இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட எண்ணியுள்ள ஐபிஎல் நிர்வாகம் நோபாலைக் கண்காணிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடுவர் மூன்றாவது நடுவராகவோ நான்காவது நடுவராகவோ கருதப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐபிஎல் தொடரில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அசாம் மாநிலம் சாந்திப்பூரில் உள்ள பிரம்ம புத்திரா நதி கரையில் புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முதல் நாள் பூஜையில் அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க பிரம்மபுத்திரா நதிக்கு எடுத்து செல்லப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கர விழா ஏற்பாடுகளை, அசாம் மாநில அரசுடன் இணைந்து காஞ்சி காமகோடி பீட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தஞ்சை அருகே மர்ம நபரால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் பாலாபிஷேகம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்றைய தினம் மர்ம நபர்கள் சாணத்தை பூசி அவமரியாதை செய்த சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு இயக்கங்களும், கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு.முருகானந்தம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு வந்து வள்ளுவர் சிலையை பார்வையிட்டு, பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செய்தனர்.
டெல்லியில் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இரட்டை பதவி விவகாரத்தில் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்யக்கூடிய விஐபி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பெறலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி இந்தத் திட்டத்தினை தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஸ்ரீவாணி அறக்கட்டளையை தொடங்கியது என்றும் இந்த அறக்கட்டளை தொடங்கியது முதல் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அவர்களை வி.ஐ.பி தரிசன வரிசையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தர்மா ரெட்டி தெரிவித்தார்.
தாய்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்காக நன்றி தெரிவிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்நாட்டு உற்பத்தி சந்தையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதில் கையெழுத்திடக் கூடாது என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திலும் கையெழுத்திட மாட்டோம் என பிரதமர் மோடி தைரியமான முடிவு எடுத்து இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தின் மண்ணின் தன்மை, சாகுபடிக்கு ஏற்ற பயிர் எது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" மற்றும் ஜியோ அக்ரி இணைப்பு முகப்பு ஆகியவற்றை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், துரைகண்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பண்ணை செயலியை ஒரு விவசாயி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அவரது நிலம், மண்ணின் தன்மை, நீர்மட்டம் உள்ளிட்டவற்றை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்வர்.
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட 3 பேர் பாஜகவில் இணைந்தனர். மக்கள் நீதி மய்யம் சார்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் ரவி , அரக்கோணம் ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது என பேராசிரியர் சீனிவாசன் புகார் மனு அளித்த விவகாரம்
நவம்பர் 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக அரசின் செயலாளருக்கு நோட்டீஸ்
சீனிவாசன் மனு மீது தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையம் அதிரடி நடவடிக்கை
"தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதை" முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஈரோடு மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் காண்பித்து வாழ்த்து பெற்றதாக, முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஊராட்சிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் சிறந்த ஊராட்சி ஒன்றியத்திற்காக பெருந்துறைக்கு வழங்கப்பட்ட "தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதை" மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் ஈரோடு மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார். pic.twitter.com/4EQYjYctGQ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 5, 2019
காஞ்சிபுரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட தனியார் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழப்பு. நண்பர் வீட்டுக்குச் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு தலையில் குண்டு துளைத்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, 1500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது 10 நிறுவனங்களுக்கு சொந்தமான 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் நாடு போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு என் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டத்துறை மிக மோசமாக உள்ளது” என கடந்த 2-ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார் நடிகை மீரா மிதுன். போலீசார் குறித்து நீங்கள் இப்படி பேசியிருக்க கூடாது என மீரா தங்கியிருந்த ஹோட்டல் அதிகாரிகள் அவரை கண்டித்துள்ளர். இதனால் அதிகாரிகளை கடுமையாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக நட்சத்திர விடுதியின் ஊழியர் அருண் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல். மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் பிறந்த தினமும், முடிசூட்டிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம், ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது. இதில் கவியரங்கம், பட்டிமன்றம், இசை அரங்கம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல், யானை மீது திருமுறை வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு தஞ்சையில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ’நாணாமை நாடாமை’ எனத் தொடங்கும் குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது" என ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
"நாணாமை நாடாமை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்"-குறள் 833
— P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2019
வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள், இன்றுமுதல் வரும் 7ம் தேதிவரை, மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தலைநகர் டில்லியில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் போராட்டம் நடத்திவரும் நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு போலீஸ் உயர்அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், 7ம் தேதி, கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கான போட்டியில், சிவசேனா கட்சியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடப்பது குழப்பம் அல்ல என்றும், நீதி, உரிமைக்கான போராட்டம் இது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.69.50 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து 6வது நாளாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டில்லியை தொடர்ந்து, சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.டில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டில்லியை போல, நாட்டில் பல்வேறு நகரங்களில், காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளது.சென்னையில், இரு தினங்களுக்கு முன், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, 130க்கு குறைவாக காணப்பட்டது. தற்போது, காற்றில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக, மத்திய காற்று தர கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, 262 ஆக உள்ளது. இவை, வழக்கத்தை விட, அதிகமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights