Advertisment

Tamil Nadu News Today : நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க முடிவு

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: பெட்ரோல் விலை ரூ.75.46 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.51 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today : நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க முடிவு

Flash News in Tamilnadu Today Updates:  வாட்ஸ்அப் வழியாக இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸைப் பயன்படுத்தி இந்திய உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை கண்காணிப்பதாகக் கூறப்படும் செய்தி உண்மையாக இருந்தால், ' மிகவும் மனவேதனை அடைகிறேன்' என்று   டேட்டா பாதுகாப்பு தொடர்பான நிபுணர்களின் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதி (ஓய்வு) பி என் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும், இந்தியா அரசியலமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடக்கும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்று சேர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவிருக்கும் சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி  தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.வழக்கின் தீர்ப்பு எவ்வாராயினும், அமைச்சர்கள் தேவையற்ற கருத்தை வெளியிட வேண்டாம் என்றும், சமூக நல்லினக்கம் பேணுவது அனைவரின் கடமை என்றும் பிரதமர் அறிவிறுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

 

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    20:30 (IST)07 Nov 2019

    நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க முடிவு

    அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள்.

    18:38 (IST)07 Nov 2019

    சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம் - நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பேட்டி

    நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்ததைத் தொடர்ந்து, நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர். “நாங்கள் அரசை குறை சொல்லமாட்டோம். சில தனிநபர்கள் நடிகர் சங்கத்தை நெருக்கடியில் தள்ள வேண்டும் என்று நினைத்து செய்தது. சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டோம். 4 பேர் புகார் கொடுத்தால் 3000 பேர் உள்ள சங்கத்தின் செயல்பாட்டை நிறுத்திவைப்பது எப்படி நியாயமாகும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது.” என்று கூறினர்.

    18:09 (IST)07 Nov 2019

    பேரறிவாளனுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் பரோல் வழங்க திட்டம் - தகவல்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள பேரறிவாளனுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் பரோல் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல். பேரறிவாளன் தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பரோல் வழங்க திட்டம்.

    18:03 (IST)07 Nov 2019

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி பதவியேற்கிறார் ஏ.பி.சஹி

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நவம்பர் 11-ம் தேதி பதவியேற்கிறார். கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    17:53 (IST)07 Nov 2019

    நான் சம்பந்தப்படாத, பங்கேற்காத நிகழ்ச்சி சுவரொட்டி அழைப்பிதழில் என் படத்தை பயன்படுத்தாதீர்கள் - உதயநிதி

    திமுக இளைஞர் அணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    17:45 (IST)07 Nov 2019

    ரஜினியின் 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளியாக உள்ள 'தர்பார்' படத்தின் தமிழ் போஸ்டரை வெளியிட்டார்  நடிகர் கமல்ஹாசன்.

    17:12 (IST)07 Nov 2019

    அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது; பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல - சஞ்சய் ராவத்

    சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்: அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது; பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு சட்டப்படி சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்குவோம் என்று கூறினார்.

    16:15 (IST)07 Nov 2019

    அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் – ஸ்டாலின்

    அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என்று தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

    இதுதொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம். திமுகவின் தியாக வரலாற்று நினைவுகளை திருத்தி எழுத அமைச்சர் பாண்டியராஜன் எத்தனிக்கிறார் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    15:48 (IST)07 Nov 2019

    உள்ளாட்சி தேர்தல் – அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் பழனிசாமி, மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.  மின்னணு வாக்கு எந்திரம், வாக்குச்சாவடி மையம், அதிகாரிகளை இறுதி செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15:22 (IST)07 Nov 2019

    நவம்பர் 24ம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

    அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மண்டபத்தில் நவம்பர் 24ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:57 (IST)07 Nov 2019

    காவி என்பது பா.ஜ.,வின் நிறம் அல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

    காவி என்பது பொதுவான நிறம். அது பாரதிய ஜனதா கட்சியின் நிறம் அல்ல என்று பா.ஜ. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவள்ளுவரை, பா.ஜ., சொந்தம் கொண்டாடவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    14:10 (IST)07 Nov 2019

    இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள் – கமல்ஹாசன்

    தமிழ்நாட்டில் இலவசங்களை கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள் என்று தனது பிறந்தநாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இங்கு இலவசங்களைக் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். இலவசமாக வழங்கும் கிரைண்டர்களை பழுது பார்க்க, வெளிநாடுகளிலிருந்தா ஆட்கள் வர வேண்டும்?. ராணுவத்திற்கு தனது பிள்ளைகளை அனுப்பினால், போரில் இறந்துவிடுவான் என கூறுவார்கள். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் ராணுவத்தில் இறப்பவர்களைவிட அதிகமாக இறந்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    13:35 (IST)07 Nov 2019

    தமிழகத்தின் உள்மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை மையம்

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 10ம் தேதிவரை  மழைக்கு  வாய்ப்பு  இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல்புல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி, வங்கதேசம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரத் தொடங்கும். தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    13:04 (IST)07 Nov 2019

    உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கணிசமான இடங்களில் போட்டியிடும் – பிரேமலதா

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம், முதல்வரும் கட்டாயம் தருவோம் என உறுதி அளித்துள்ளார். தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    12:27 (IST)07 Nov 2019

    தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்

    சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான 2 நாள் மாநாட்டை,  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், "  தொழிநுட்பத் துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில், கடந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 500 கோடி வரை தொழில் முதலீடாய் வந்துள்ளது. உயர் தொழில்நுட்ப கம்பெனிகள் எல்லாம் சென்னையில் கிளைகள் அமைக்க முனைந்து வருகின்றன" என்றார். மேலும், தகவல் தொழில்நுட்ப துறை ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தார்.  

    12:18 (IST)07 Nov 2019

    நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமித்தது தமிழக அரசு

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது . இதனையடுத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நீதிமன்றத்தில் தற்போது வழக்காய் உள்ளது.

    இதனையடுத்து, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. பதிவுத்துறை உதவி ஐஜி கீதா இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    12:07 (IST)07 Nov 2019

    அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள், தமிழக அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் எவ்வாறு செயல்படுவது, மக்கட்பணிகளை எவ்வாறு சிறந்த முறையில் ஆற்றுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    publive-image  publive-image   publive-image

    11:57 (IST)07 Nov 2019

    தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களின் கூட்டம்

    கடந்த ஐந்தாம் தேதி,  தேமுதிக தலைமை அலுவகத்தில் ஏழாம் தேதி ( இன்று )மாவட்ட கழக செயலாளர்களின் கூட்டம்,  கட்சித்  தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது செயலாளர்களின் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை எவ்வாறு மேம்படுத்துவது போன்றவைகள் பற்றி விவாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது           

    11:06 (IST)07 Nov 2019

    கோவையில் சிறுமி பாலியல் வழக்கு – தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

    கோவையை சேர்ந்த அக்கா/ தம்பி ( 11/8 வயது ) இருவரையும் 2010ம் ஆண்டு மோகன் ராஜ், மனோகரன் கடத்தி சென்று கொன்றனர். அக்கா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி என்ற தகவலும் தெரியவந்தது.  இந்த வழக்கில் மோகன் ராஜ் போலிஸ் என்கவுன்ட்டரில் கொல்லபட்டார். மனோஹரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனையை அளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தற்போது உச்ச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    10:47 (IST)07 Nov 2019

    மாவோயிஸ்ட் எதிரான சண்டை - சிஆர்பிஎப் வீரர் மரணம்

    இன்று அதிகாலை 4 மணியளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாபு மாவட்டத்தின் டோங்குடா-பேம்ட் பகுதியில் நடைபெற்ற மாவோயிஸ்ட்

    எதிரான துப்பாக்கிச் சண்டையில் ஒரு சிஆர்பிஎப் வீரர் சுட்டுக் கொல்லபட்டார்.

    10:35 (IST)07 Nov 2019

    மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் : உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்எல்ஏ க்களை சந்திக்கிறார்

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்  முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அங்கு ஆட்சி அமைக்கப்படாமல் உள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் தனை இணைத்துக் கொள்ளாது என்று அதன் தலைவர் சாரத் பவார் நேற்று அதிரடியாக அறிவித்தார் . இந்நிலையில், இன்று மகாராஷ்டிர மாநில பாஜக ஆளுநரை சந்தித்து முதல் முறையாக ஆட்சி அமைக்க  உரிமை கோருகிறது. அதே சமயம், இன்று அனைத்து சிவசேனா எம்.எல்.ஏ க்களையும்  அதன் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளார். இதனால் ,அம்மாநிலத்தில் அரசியில் சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் அடையும் என்று நம்பப்படுகிறது.                 

    10:24 (IST)07 Nov 2019

    திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன்  பேசும் போது , ஸ்டாலின் மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் . ஜனயாத்துக்கா அல்ல ,  ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்களுக்காகத் போலிஸார் கைது செய்து அடித்தனர் என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இந்த கருத்து திமுக கழகத்தினரிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.   ஏற்கனவே, அவரின் உருவ பொம்மைகள் திமுக சார்பில் எரிக்கப்பட்டது, 

    இந்நிலையில், இன்று  மாஃபா  பாண்டியராஜனின் சட்டமன்றத் தொகுதியான ஆவடி மாநகராட்சி அருகில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.             

    10:01 (IST)07 Nov 2019

    பீமா கோரேகான் வழக்கில் ஜாமீன் இல்லை - புனே செஷன்ஸ் நீதிமன்றம்

    பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் ஜாமீன் விண்ணப்பத்தை புனே செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு  ஜனவரி 1ம் தேதி, பீமா கோரேகான் யுத்தத்தின் 200 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்  கலவரம் ஏற்பட்டது.   இது தொடர்பாக இந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    ஜாமீன் நிராகரிக்கப்பட்ட அந்த 6 நபர்களின் பெயர்கள் - ரோனா வில்சன், ஷோமா சென், சுரேந்திர காட்லிங், மகேஷ் ரவுத், வர்வாரா ராவ் மற்றும் சுதிர் தவ்லே. 

    09:53 (IST)07 Nov 2019

    திப்பு ஜெயந்தி விழாவை தடை செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் - கர்நாடக உயர் நீதி மன்றம்.

    2015ம் ஆண்டு ( சித்தராமையா ஆட்சிக் காலம் ) முதல் கர்நாடாகாவில் நவம்பர் 10ம் தேதியை திப்பு ஜெயந்தியாக அம்மாநில அரசு கொண்டாடி வருகிறது. ஆனால், கடந்த  ஜூன் மாதம் பதவியேற்ற எடியூரப்பா திப்பு ஜெயந்தி விழாவை அரசு விழாவாக நடத்த தடைவிதித்தார். இந்த தடை உத்தரவுக்கு எதிராக கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தடை செய்யும் முடிவை  அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.   

    09:38 (IST)07 Nov 2019

    அயோத்தி வழக்கில் தேவையற்ற கருத்துகள் வேண்டாம்.

    அயோத்தி வழக்கின் தீர்ப்பு எவ்வாராயினும், அமைச்சர்கள் தேவையற்ற கருத்தை வெளியிட வேண்டாம் என்றும், சமூக நல்லினக்கம் பேணுவது அனைவரின் கடமை என்றும் பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிறுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின் , கட்சித் தலைவர்களும் , தொண்டர்களும்  கடைபிடிக்க வேண்டிய  நன்நடத்தை நெறிமுறைகளை  பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

    Tamil Nadu news today updates : ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை மண்டலம் டெல்லியின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சீரழித்துள்ளது. உங்கள் பணியை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள் என உச்ச நீதிமன்றம் பஞ்சாப் தலைமை செயலாளருக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் தன்னுடைய கட்சி எந்தவொரு பங்கையும் வகிக்காது என்று கூறி  மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து வந்த குழப்பத்திற்கு புற்றுபுள்ளி வைத்துள்ளார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment