Advertisment

டிச. 19-ல் முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம் : மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu news today live updates

Flash News in Tamilnadu Today Updates: ஊராட்சி சபை கூட்டங்களில், ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டி தீர்த்த கோபமும், தி.மு.க., மீதான பற்றும், தேர்தல் களத்தில் வெளிப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

அ.தி.மு.க., அரசு, எத்தனை அத்துமீறல்கள் செய்ய நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன், கூட்டணி அமைத்து, முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு, தி.மு.க.,விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கிறது.ஊராட்சிகளில் மக்களை சந்தித்தபோது, ஆட்சியாளர்கள் மீது கொட்டி தீர்த்த கோபமும், தி.மு.க., மீது அவர்களுக்கு இருக்கிற பற்றுதலும், தேர்தல் களத்தில் நிச்சயம் வெளிப்படும்.இதை, தி.மு.க., மாவட்ட செயலர்கள் உணர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, ஆக்கப்பூர்வமான வியூகம் வகுக்க வேண்டும். பட்டியல்நேற்று காலை வரை, 11 மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டங்களில், கூட்டணி கட்சியினருடன் பேச்சை முடித்து, ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும், கூட்டணி கட்சியினருடன், சுமூக உடன்பாடு கண்டிட வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா தொடர்பான இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை

நாடு துண்டாடப்படுவதை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை அழித்து, ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில், கடைசி மூச்சு உள்ள வரை, காங்., பின்வாங்காது என்று டில்லியில் நடைபெற்ற இந்தியாவை காப்போம் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் பேசியதாவது: பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக, பிரதமர் மோடியும், அவரது உதவியாளர் அமித் ஷாவும் தான், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    21:29 (IST)15 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் முடிவான திமுக போட்டியிடும் 34 மாவட்டங்கள் அறிவிப்பு

    34 மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, திமுக தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில், கழக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1. திருவண்ணாமலை வடக்கு, 2. திருவண்ணாமலை தெற்கு, 3. திருச்சி வடக்கு, 4. திருச்சி தெற்கு, 5. கரூர், 6. சேலம் மத்திய,  6. சேலம் மேற்கு, 7. கோவை தெற்கு, 8. நீலகிரி, 9. மதுரை வடக்கு, 10. மதுரை தெற்கு, 11. தூத்துக்குடி வடக்கு, 12. தூத்துக்குடி தெற்கு, 13. கன்னியாகுமரி கிழக்கு , 14.திருவள்ளூர் வடக்கு, 15. கடலூர் கிழக்கு, 16. கடலூர் மேற்கு, 17. தஞ்சை வடக்கு, 18. தஞ்சை தெற்கு, 19. நாகை வடக்கு, 20. புதுக்கோட்டை தெற்கு,  உள்ளிட்ட மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    20:14 (IST)15 Dec 2019

    ரஜினியின் தர்பார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    19:07 (IST)15 Dec 2019

    உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுபவர்கள், எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சிப் பதவிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்; உள்ளாட்சிப்பதவியை ஏலம் விடுபவர்கள், ஏலம் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    17:00 (IST)15 Dec 2019

    இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகள் தவறு

    எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை தன்மை இல்லை என கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார அறிவித்துள்ளார்.

    16:13 (IST)15 Dec 2019

    தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

    16:12 (IST)15 Dec 2019

    காங்கிரஸ் கட்சி மக்களை தூண்டிவிடுகின்றன

    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் மக்களை தூண்டி விடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

    16:11 (IST)15 Dec 2019

    உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிகளுக்கு சில இடங்களில் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

    15:21 (IST)15 Dec 2019

    திமுகவை பார்த்தால் பரிதபமாக இருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்

    திமுகவை பார்த்தால் கோப உணர்வு வரவில்லை மாறாக பரிதாபமாக இருக்கிறது. மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்திருப்பதால் நாங்கள் வேகமாக இயங்குகிறோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

    15:17 (IST)15 Dec 2019

    குடியுரிமை சட்டதிருத்த மசோதாவால் மாற்றத்தை கொண்டு வர முடியாது – பிரேமலதா

    குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    14:49 (IST)15 Dec 2019

    பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏராளமான தீவுகளை கொண்ட நாடான பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், அதன்பின்னர் ஏற்பட்ட சுனாமி மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    14:33 (IST)15 Dec 2019

    முதல்வர் பழனிசாமி 19ம் தேதி டில்லி பயணம்

    முதல்வர் பழனிசாமி, வரும் 19ம் தேதி டில்லி செல்ல உள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பினிடையே, தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    13:38 (IST)15 Dec 2019

    சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் இசைக்கச்சேரி

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மார்கழியை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இசைக்கச்சேரியை பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். கிண்டி, சென்ட்ரல், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் என 10 மெட்ரோ நிலையங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது.

    13:12 (IST)15 Dec 2019

    சென்னையில் அசாம் மாணவர்கள் போராட்டம்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த முயன்ற அசாம் மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தினர். ஒரு பிரிவு மாணவர்கள், வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    12:52 (IST)15 Dec 2019

    வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு

    சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததன் காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கேரட், பீன்ஸ், பீட்ருட், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்களின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.  முதல் தர நாசிக் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும் இரண்டாம் தரம் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    12:31 (IST)15 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.  அதன்படி,  சேலம் - காமராஜ், நாகப்பட்டினம் - ஞானசேகரன், நாமக்கல் - ஜெகநாதன், ராமநாதபுரம் - அதுல் ஆனந்த், நீலகிரி - ஜோதி நிர்மலா ஆகியோர் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    12:09 (IST)15 Dec 2019

    சிலை கடத்தல் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் – பொன் மாணிக்கவேல்

    சிலை கடத்தல் தொடர்புடைய ஆவணங்களை டிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக சிலைதடுப்பு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.  பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    11:40 (IST)15 Dec 2019

    யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கியது

    தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நலவாழ்வு புத்துணர்வு முகாமை நடத்தி வருகிறது. தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் 48 நாட்கள் நடக்கும் இம்முகாம் இன்று(டிச.,15) காலை துவங்கியது. முகாமை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். முகாமில் 26 யானைகள் பங்கேற்றுள்ளன.

    11:18 (IST)15 Dec 2019

    சச்சின் தேடிய அந்த சென்னை நபர் இவர்தான்….

    மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டின் போது எல்போ கார்டு எனப்படும் முழங்கை உபகரணத்தில் மாற்றம் செய்ய ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது

    10:51 (IST)15 Dec 2019

    நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தனக்கு அனுமதி கோரி வீராங்கனை ரத்தத்தில் கடிதம்

    நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரி, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

    10:15 (IST)15 Dec 2019

    உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்காவின் டோனி ஆன்சிங்

    2019ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி பிரிட்டனின்  எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் 20ம் தேதி துவங்கியது. 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர். உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி டிசம்பர் 14ம் தேதி  இரவு நடந்தது. இதில், ஜமைக்காவின் டோனி ஆன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில், அவர்களின் அறிவுத்திறனுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன . இதில், ஜமைக்கா அழகி டோனி ஆன்சிங் வெற்றி பெற்று, உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.

    09:54 (IST)15 Dec 2019

    பெட்ரோல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.70ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 7-வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    09:45 (IST)15 Dec 2019

    சிறுபான்மையினர்களின் உரிமையை பறிக்கிறது – ஸ்டாலின்

    குடியுரிமை மசோதா, சிறுபான்மையினர்களின் உரிமைகளை பறிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீளாத்துயரத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வை பறிக்கும் விதத்தில் இந்த மசோதா அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதல்வரும், துணை முதல்வரும், மாவட்ட செயலர்களை மட்டும் அழைத்து பேசி உள்ளனர். பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்ட செயலர்களாக இருப்பதால், அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு அழைக்கப்படாதது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஒவ்வொரு குடும்பமும், ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும்,'' என, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Tamil Nadu Mk Stalin Narendra Modi Rahul Gandhi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment