Tamil Nadu news updates : ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் துவங்குவதற்கு முன், பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க, பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், 20 பயங்கரவாத முகாம்களை நடத்தி வருகிறது. அதில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்தவும், திட்டமிட்டுள்ளது என, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ரபேல் போர்விமானம் ஒப்படைப்பு : ஐரோப்பிய நாடான பிரான்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல் 'ரபேல்' போர் விமானம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்தார். பின்னர் அதில் அவர் பயணம் செய்தார். போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது: நமது விமானப் படை உலகின் நான்காவது மிகப் பெரிய விமானப் படையாக உள்ளது. தற்போது 'ரபேல்' போர் விமானங்கள் இணைவதால் அது மேலும் வலு பெறுகிறது. விஜயதசமி தினத்தில் போர் விமானத்தை பெற்றது சிறப்பு. அதைவிட இந்திய விமானப் படை தினத்தில் இதைப் பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த நாள் விமானப் படையின் வரலாற்றில் மிகச் சிறப்பான நாளாகும். இந்தியா பிரான்ஸ் இடையேயான ராணுவ நட்புறவில் இந்த நாள் ஒரு மைல்கல்லாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 100 அடி சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு அக்டோபர் 11, 12 தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இ.சி.ஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை
இயக்குனர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் இந்தியாவில் நடைபெற்றுவரும் கும்பல் தாக்குதல் படுகொலை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீகார் காவல்துறை 49 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும், அவர்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை கண்டுபிடித்துள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை துறை மாற்றம் செய்து நியமனம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம். சுற்றுலா மற்றும் கலாசாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக அசோக் டோங்ரே நியமனம். நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அபூர்வ வர்மா நியமனம்.
போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் வருவாய் துறை முதன்மை ஆணையராக நியமனம் - தமிழக அரசு
போக்குவரத்துத் துறை செயலாளராக சந்திர மோகன் நியமனம்
அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மதுரை ஆட்சியராக நியமனம் - தமிழக அரசு
அரியலூர் ஆட்சியராக டி.ரத்னா நியமனம்
ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்காது - நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது நீட் வரவில்லை, அவர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு புகுந்துள்ளது - ஸ்டாலின்
தான் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க எப்ஏ.டபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.
இதற்காக சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது.
'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் இதில் உள்ளது.
சீனாவில் மிக விலை உயர்ந்த காரான இந்த ஹாங்கி எல் 5 ரக காரின் விலை இந்திய மதிப்பில் 5 கோடியே 60 லட்ச ரூபாய்..
உருவத்திலும் பெரிய தோற்றம் கொண்ட இந்த காரானது, 3152 கிலோ எடை கொண்டது.
105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி இந்த காரில் உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.
திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 5ம் கட்ட அகழாய்வு வரும் 13ம் தேதி வரை நடைபெறும், 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியில் கூட்டத்தை ஒட்டி பொதுத்துறை செயலாளர் செந்தில் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால பணி நீக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் தங்களின் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் வரலாற்றிலும் மிக முக்கியமான நிகழ்வு என பேச்சு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து முடித்த பின்பு பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. இதனால் அரசுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என்றும் அறிவித்தார்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு பின்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கோவிலுக்கு பின்புறம் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 3 கப்பல்கள் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினர்தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாகிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதைப் பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள் என நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருகின்றனர் என்று நெல்லை நொச்சிக்குளத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின், இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு, ஸ்டாலின் வர மாட்டார் என்று நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
நாடு முழுவதும் செப்டம்பர் வரை 5.87 கோடி பேர் 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் வரை கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. : நாடு முழுவதும் 5.87 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2017 - 18ம் நிதியாண்டில் 5.67 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 20 லட்சம் பேர் அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 37.50 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights