கொரோனா தொற்று பரவியதால் மே 5-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.இதற்கிடையே, சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும். செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு தங்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் பெரியாரின் பிறந்த நாள் விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள், ஃபாலோவர்கள் அவரின் கொள்கைகளை உலகிற்கு கூறும் வகையில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி தொண்டர்கள் முதல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வரை இன்று அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
Wishing PM Narendra Modi ji a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2020
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu news today live updates : coronavirus, covid19 தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பாஜக கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும், மத்திய மந்திரியாக உள்ள ஹர்ஷிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஹர்சிமத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரியாகவும் நிற்பதில் பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இவர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020-க்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் சார்பில் மத்திய அமைச்சராக உள்ள ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என சுக்பீர் சிங் தெரிவித்தார்.
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி, மேலும் அவர் மட்டுமே சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் எனது பிரதிநிதிகள் என்று பொதுவெளியில் சொல்லும் ஒருவரையும் நம்பவேண்டாம் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Legal Notice from the office of Mr #Ajithkumar pic.twitter.com/JUkvjpV88F
— Diamond Babu (@idiamondbabu) September 17, 2020
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் இன்று (17.9.2020) வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துடன் புதிய பாலங்கள், புறவழிச் சாலையை திறந்து வைத்து, புதிதாக கட்டப்படவுள்ள 2 "யூ" வடிவ மேம்பாலங்களின் பணிக்கு அடிக்கல் நாட்டினேன். pic.twitter.com/DFmj24M105
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 17, 2020
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர் என்றும், "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் தந்தை பெரியார் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து. பிரதமர் மோடியின் நல் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என ட்வீட்.
Wishing our Honorable Prime minister and my good friend @narendramodi ji a very happy 70th birthday.
I pray to the Almighty for your good health.
பாரத பிரதமரும் எனது நண்பருமான திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு 70 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDNarendraModi pic.twitter.com/i6ZNu4UwYA— Vijayakant (@iVijayakant) September 17, 2020
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து *'கடினமான இந்த நேரத்தில், மேலும் வலு சேர்க்க வாழ்த்துகிறேன்' என புகழாரம்.
Respected dear @narendramodi ji,
Wishing the tough man in you more strength during these tough times. Happy birthday.— Rajinikanth (@rajinikanth) September 17, 2020
மாநிலங்களவையில் லடாக் பிரச்சனை தொடர்பாக மீண்டும் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். எல்லை வரையறை செய்வது தொடர்பாக பல முறை இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் இந்திய எல்லைப்பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை சீனா எல்லையில் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
புதுவையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து மாநில அரசு தான் முடிவெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்ட நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
2014ம் ஆண்டு துவங்கப்பட்ட பாலம் கட்டுமான பணி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டுப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மரணம்
கொரோனாவிற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார் திருப்பதி எம்.பி. கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights