scorecardresearch

News Highlights: கோயம்பேடு சந்தை இன்று திறப்பு!

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை இன்று திறக்கப்பட்டது

CMBT at Koyambedu cmbt reopen
Tamil Nadu news today live updates

கொரோனா தொற்று பரவியதால் மே 5-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.இதற்கிடையே, சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும். செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு தங்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் பெரியாரின் பிறந்த நாள் விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள், ஃபாலோவர்கள் அவரின் கொள்கைகளை உலகிற்கு கூறும் வகையில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.  பிரதமர் மோடியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி தொண்டர்கள் முதல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வரை இன்று அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog

Tamil Nadu news today live updates : coronavirus, covid19  தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


21:48 (IST)17 Sep 2020

ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா ஏன்?

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாஜக கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும், மத்திய மந்திரியாக உள்ள ஹர்ஷிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஹர்சிமத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரியாகவும் நிற்பதில் பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இவர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

21:34 (IST)17 Sep 2020

மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா

மத்திய அரசின் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020-க்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் சார்பில் மத்திய அமைச்சராக உள்ள ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என சுக்பீர் சிங் தெரிவித்தார்.

17:14 (IST)17 Sep 2020

ரூ. 2000 நோட்டுகளை விநியோகிப்பதில் மோடிக்கு விருப்பம் இல்லை

பண மதிப்பிழப்பின் போது பிரதமர் மோடிக்கு ரூ. 2000 நோட்டுகளை விநியோகிப்பதில் விருப்பம் பெரிதும் இருக்கவில்லை என்று அவரது முன்னாள் முதன்மை செயலாளர் நிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

17:10 (IST)17 Sep 2020

மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலி

கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலியாகினார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

17:03 (IST)17 Sep 2020

திருவள்ளூரில் மழை

திருவள்ளூர், திருத்தணி, திருவலாங்காடு, ஊத்துக்கோட்டை, மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

17:02 (IST)17 Sep 2020

பக்கோடா வறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான போராட்டத்தின் போது பக்கோடா வறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16:57 (IST)17 Sep 2020

டெல்லி கலவர வழக்கு

டெல்லி கலவர வழக்கின் விசாரணை முறையாக நடைபெறக்கோரி கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக தலைவர்கள் குடியரசு /தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

16:57 (IST)17 Sep 2020

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

தட்கல் முறையில் விவசாயிகள் மின் இணைப்பை பெற செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம். தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொகையை செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

16:48 (IST)17 Sep 2020

நாளை திறக்கப்படும் கோயம்பேடு சந்தை

கோயம்பேடு உணவு தானிய சந்தை நாளை திறக்கப்படுகிறது. அரசு கடனுதவி வழங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

16:39 (IST)17 Sep 2020

எனது பிரதிநிதிகள் என்று பொதுவெளியில் சொல்லும் ஒருவரையும் நம்பவேண்டாம் – நடிகர் அஜித்

நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி, மேலும் அவர் மட்டுமே சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் எனது பிரதிநிதிகள் என்று பொதுவெளியில் சொல்லும் ஒருவரையும் நம்பவேண்டாம் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

16:33 (IST)17 Sep 2020

யு வடிவ மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

16:18 (IST)17 Sep 2020

கமல்ஹாசன் ட்வீட்!

பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர் என்றும்,  “பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் தந்தை பெரியார் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். 

16:00 (IST)17 Sep 2020

விஜயகாந்த் பிறந்த‌நாள் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த‌நாள் வாழ்த்து.  பிரதமர் மோடியின் நல் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என ட்வீட். 

16:00 (IST)17 Sep 2020

இலவச மின்சாரம்!

நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவிப்பு . தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் 

15:41 (IST)17 Sep 2020

மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த‌நாள் வாழ்த்து *’கடினமான இந்த நேரத்தில், மேலும் வலு சேர்க்க வாழ்த்துகிறேன்’ என புகழாரம். 

15:04 (IST)17 Sep 2020

முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்!

திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது  நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு, ஆதரித்தது அதிமுக அரசு . மாணவர்கள் தற்கொலைக்கு அதிமுகவும், பாஜகவும்தான் காரணமே தவிர, திமுக அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

15:01 (IST)17 Sep 2020

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை!

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதாகைகள் ஏந்தி போராட்டம்

15:00 (IST)17 Sep 2020

ஓபிஎஸ் – ஈபிஎஸ் நாளை ஆலோசனை!

‘ சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை . ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

13:52 (IST)17 Sep 2020

எம்.பிக்கள் மனு!

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கக்கோரி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எம்.பிக்கள் மனு அளித்தனர். 

12:58 (IST)17 Sep 2020

லடாக் பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேசிய ராஜ்நாத் சிங்

மாநிலங்களவையில் லடாக் பிரச்சனை தொடர்பாக மீண்டும் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். எல்லை வரையறை செய்வது தொடர்பாக பல முறை இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் இந்திய எல்லைப்பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை சீனா எல்லையில் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

12:32 (IST)17 Sep 2020

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

புதுவையில் ஈன்று கொரோனாவால் 323 பாதிப்படைந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 21, 428 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது.

12:26 (IST)17 Sep 2020

கேரள தங்க கடத்தல் விவகாரம் ; மூவருக்கு ஜாமீன்

கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைதான அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு.

12:26 (IST)17 Sep 2020

புதுவையில் ஊரடங்கை கடுமையாக்க வழக்கு

புதுவையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து மாநில அரசு தான் முடிவெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

11:53 (IST)17 Sep 2020

பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் பாலம் திறப்பு

பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூ. 82 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை கொடியசைத்து திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

11:33 (IST)17 Sep 2020

புதுவையில் பெரியார் சிலை திறப்பு

புதுவை காமராஜ் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விசக தலைவர் திருமாவளவனும் புதுவையில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

11:33 (IST)17 Sep 2020

மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது – தம்பிதுரை

கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்ட நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

11:23 (IST)17 Sep 2020

தங்கம் விலை குறைவு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்துள்ளது. ஒரு சவரன் 39 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4909-க்கு விற்பனையாகிறது.

11:23 (IST)17 Sep 2020

வண்டலூர் மேம்பாலம்

2014ம் ஆண்டு துவங்கப்பட்ட பாலம் கட்டுமான பணி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டுப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

11:19 (IST)17 Sep 2020

வண்டலூர் மேம்பாலம் திறப்பு

வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வண்டலூரில் ரூ. 55 கோடி செலவில் 700 மீட்டர் தூரத்திற்கு 6 வழிகள் கொண்ட இருவழிப்பாதை மேம்பாலம் இது.

11:19 (IST)17 Sep 2020

பெரியார் 142வது பிறந்த தினம்

பெரியார் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.

11:19 (IST)17 Sep 2020

கோவையில் 9 மாத குழந்தை உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 9 மாத குழந்தை உயிரிழந்த சோகம். பாத்திரம் கழுவ வைத்திருந்த பக்கெட்டில் குழந்தை தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழப்பு.

11:18 (IST)17 Sep 2020

மழைக்கால கூட்டத்தொடர்

இன்று மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளாகும். மாநிலங்களை இன்று காலையிலேயே துவங்கி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார் செல்வம்.

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மரணம்

கொரோனாவிற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார் திருப்பதி எம்.பி. கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news today live updates narendra modi periyar today news tamil news