scorecardresearch

Tamil Nadu news today updates : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 18 -ல் கூடும் என அறிவிப்பு

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today updates : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 18 -ல் கூடும் என அறிவிப்பு
Parliament

Tamil Nadu news updates : தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை நோக்கிய காற்று, தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்பே தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் அக்., 17, 18 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை மருத்துவமனை: ஜிப்மருக்கு 2வது இடம்: தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு ‘காயகல்ப்’ விருது வழங்கப்படும். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான காயகல்ப் விருதினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கினார். அதில் முதலிடத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடமும் பிடித்தது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:19 (IST)16 Oct 2019

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவ. 18 -ல் கூடும் என அறிவிப்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நம்பவர் 18 ஆம் தேதி கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 18 -ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21:13 (IST)16 Oct 2019

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர்களை சிறைபிடித்து விசாரணை

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை சிறைபிடித்து, காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

20:54 (IST)16 Oct 2019

ஸ்டாலினுக்கு மக்களை ஏமாற்றுவது தான் எண்ணம் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

முதலமைச்சர் பழனிசாமி விக்கிரவாண்டி, அத்தியூர் திருக்கையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, அதிமுக ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும். ஸ்டாலினுக்கு மக்களை ஏமாற்றுவது தான் எண்ணம் என்று கூறினார்.

19:14 (IST)16 Oct 2019

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்</p>

துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர்

19:07 (IST)16 Oct 2019

இடி, மின்னலுடன் கனமழை

சேலம், கன்னியாகுமரி, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

19:07 (IST)16 Oct 2019

2023-ம் ஆண்டுக்குள் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் – ஓ.பி.எஸ்

2023-ம் ஆண்டுக்குள் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.  நாங்குநேரி வடுகச்சிமதிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம். திமுக ஆட்சி, மின்சார பற்றாக்குறையை நீக்கமுடியாத ஆட்சியாக இருந்தது – ஓ.பன்னீர் செல்வம்

18:22 (IST)16 Oct 2019

கல்கி ஆசிரமம் – கணக்கில் வராத ரூ 20 கோடி

கல்கி ஆசிரமம் மற்றும் அலுவலங்களில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையில் மாலை 5 மணி வரை கணக்கில் வராத ரூ 20 கோடி பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17:52 (IST)16 Oct 2019

அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம் – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணி பலமாக உள்ளது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம் – தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

17:52 (IST)16 Oct 2019

நீட் ஆள்மாறாட்டம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது?

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிபிசிஐடி மேற்கொண்டுவரும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது மாணவர்களின் ஆடை, தலைமுடி வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள் என தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மோசடியில் சிக்கும் மாணவர்களின் புகைப்படங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்க சிபிஐ க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

17:50 (IST)16 Oct 2019

கொள்ளையன் முருகனின் காவல் 8 நாள் நீட்டிப்பு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் காவல் 8 நாள் நீட்டிப்பு. பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே 4 நாள் போலீஸார் விசாரணை செய்த நிலையில் காவல் நீட்டிப்பு

17:49 (IST)16 Oct 2019

வெளிப்படை தன்மையை உறுதி செய்வது தகவல் உரிமைச் சட்டம் – ஐகோர்ட்

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிகொண்டுவர முடியாது.

பொது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வது தகவல் உரிமைச் சட்டம் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

17:16 (IST)16 Oct 2019

சசிகலாவுக்கு கட்சியில் தலைமை பொறுப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து தலைமை முடிவெடுக்கும். அதிமுக தலைமை எடுக்கும் முடிவை நான் ஆதரிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

16:12 (IST)16 Oct 2019

அயோத்தி வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அயோத்தி இடம் தொடர்பான வழக்கில் 40 நாட்கள் நடந்த தொடர் வாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்ததுள்ளது. தீர்ப்பு, நவம்பர் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

15:39 (IST)16 Oct 2019

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் ஏன்? – தேர்தல் அதிகாரி பதில்

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரஹா சாஹூ, இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்காக பயன்படுத்துபவை என்று விளக்கம் அளித்துள்ளார்.

15:08 (IST)16 Oct 2019

வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகள் : நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், , காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

14:35 (IST)16 Oct 2019

விக்கிரவாண்டி தொகுதியில் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அக்டோபர் 19ம் தேதி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு இடைத்தேர்தல், வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

14:32 (IST)16 Oct 2019

வியாழக்கிழமை இனி டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிப்பு

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் நசீர் சத்ரு உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவதற்கான பணிகள் துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியானாவில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, இந்தியாவிற்கும், ஹரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டுள்ளது. இனி, அந்த நீரை தடுத்து நிறுத்தி, உங்கள் வீட்டிற்கு மோடி அரசு கொண்டு வரும். இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது. ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமானது. இதனால் தான் மோடி அரசு உங்களுக்காக போராடி வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news today live updates northeast monsoon chidambaram inx case bypoll stalin