Tamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்

Tamil nadu news Today: தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பருவமழை துவங்கினாலும், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் குடிநீர் இல்லாமல் தங்களின் செயல்பாட்டினை நிறுத்தி வருகின்றன.

பொதுமக்கள் தண்ணீர் லாரிகளுக்கு புக் செய்து வாரக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசோ, சட்டத்திற்கு புறம்பாக தண்ணீரை சேமித்து கொள்ளக்கூடாது என்பதற்காக வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தடை செய்துள்ளது.

தண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்… நீருக்காக வன்முறையில் இறங்கும் மக்கள் !

தவிர, திமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.

பதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்! உதயநிதிக்கு குவியும் வாழ்த்து!

இது போல் தமிழகத்தின் முக்கிய செய்திகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், பெட்ரோல் டீசல் விலை, தங்கம் மற்றும் வெள்ளி விலை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines, Sports தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!

21:01 (IST)18 Jun 2019
ரவுடி பினுவை கைது செய்த போலீஸ்

சென்னை கொளத்தூரில் தலைமறைவாக இருந்த ரவுடி பினுவை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் ரவுடி பினுவை போலீஸ் கைது செய்திருக்கிறது.

20:41 (IST)18 Jun 2019
சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் வேண்டாம்

தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதில் உள்ள இந்தி எழுத்துக்களை மாற்றி தமிழில் வழங்குமாறு, சாகித்ய அகாடமிக்கு குமரியை சேர்ந்த எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கையை பரிசீலிப்பதாக சாகித்ய அகாடமி கூறியுள்ளது என்று எழுத்தாளர் யூசுப் தெரிவித்துள்ளார்.

19:44 (IST)18 Jun 2019
எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? - நீதிமன்றம் கேள்வி

காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? எத்தனை தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது? ஆகிய கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

19:41 (IST)18 Jun 2019
புழல் சிறையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோரிடம், 5 மணி நேரமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேருக்கும் தொடர்புள்ளதா? என என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

18:25 (IST)18 Jun 2019
17 சிக்ஸர்களுடன் உலக சாதனை

உலகக் கோப்பை 2019 தொடரில், மான்செஸ்டர் நகரில், இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். இதில், 17 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த பட்டியலில் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த ரோஹித், ஏ.பி.டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார். 

அதேபோல், ரஷித் கான் வீசிய 9 ஓவரில் 110 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

17:59 (IST)18 Jun 2019
காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் தேர்வு

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17:18 (IST)18 Jun 2019
ஜெ., நினைவு மண்டபம் - முதல்வர் ஆய்வு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில், ரூ.50.80 கோடி பொருட்செலவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் கிட்டத்தட்ட நிறைவுபெறும் நிலையில் இருப்பதால், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் இன்று நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். 

16:44 (IST)18 Jun 2019
தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்கள் - வைரமுத்து புகழாரம்

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றதங்கங்களை வாழ்த்துகிறேன்.நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.பயணிப்போம் - மொழி காக்க;தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.

என்று கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டரில், தமிழில் பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

15:57 (IST)18 Jun 2019
TN Water Scarcity : ஓட்டல்கள் ஏதும் மூடப்படவில்லை - ஓட்டல் உரிமையாளர்கள்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி என்பது குறித்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஓட்டல் உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டல் உரிமையாளர்கள், "தனியார் குடிநீர் லாரிகள் மூலமாக நாங்கள் தண்ணீர் பெற்றுக் கொள்கிறோம். இதனால் எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தண்ணீர் காரணமாக ஓட்டல்கள் மூடப்படுவதாக வரும் செய்தி தவறான தகவலாகும். அனைத்து ஓட்டல்களும் திறந்தே இருக்கின்றன" என்று தெரிவித்தனர்.

14:50 (IST)18 Jun 2019
நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுப்பு

எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த பாதுகாப்பு கேட்டு, நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது இந்த மனு விசாரணைக்கு வந்தது.

“பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது. மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

14:39 (IST)18 Jun 2019
ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்

முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்த ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ’முதலமைச்சர், தமிழக திட்டங்கள் தொடர்பாக 29 கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார், அவரின் உரையை படித்து பார்க்காமலேயே ஸ்டாலின் விமர்சித்துள்ளார்’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

14:12 (IST)18 Jun 2019
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் மழைப்பொழிவு இல்லை, இது சோதனையான ஒரு தருணம்” என்றார். 

14:00 (IST)18 Jun 2019
மாநகராட்சியாக மாறும் ஆவடி

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15ஆவதாக ஆவடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆவடியை மாநகராட்சியாக மாற்றம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியீடு

13:06 (IST)18 Jun 2019
tamil news today: நளினி பரோல்

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பரோல் கோரிய மனு மீதான விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு ஆட்சேபனை உள்ளதா என அவரிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

12:48 (IST)18 Jun 2019
பாண்டவர் அணி செய்தியாளர் சந்திப்பு

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி நடந்து வருகிறது. அரசியல் பின்னணி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என நம்புகிறோம். எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது அரங்கத்தில் மட்டும் தான் எனக் கூறினர். 

12:22 (IST)18 Jun 2019
Tamil news today: தமிழக எம்.பி-க்கள் பதவி பிரமாணம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக, புதுச்சேரி எம்.பி.க்கள் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்கள் அத்தனை பேரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னையைப் பொறுத்தவரை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் “தமிழ் வாழ்க” என்ற கூறி பதவியேற்றுக்கொண்டார். வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். 

11:44 (IST)18 Jun 2019
தமிழகத்தில் நிஃபா

தமிழகத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

11:31 (IST)18 Jun 2019
Tamil News Today: முதல்வரிடம் வாழ்த்து

போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குதிரை தடை தாண்டுதல் போட்டியில் 3வது இடம் பிடித்த கோவை தனியார் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

11:18 (IST)18 Jun 2019
Tamil Nadu News Today: நடிகர் சங்க தேர்தல் நடக்குமா?

நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் தலைமையில் ‘பாண்டவர் அணியும்’, பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் இதில் மோதுகிறார்கள். இத்தேர்தல் சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நாளில் நாடகம் நடத்த எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடிகர் எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளார். 

Tamil Nadu news today updates: வரும் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் தலைமையில் ‘பாண்டவர் அணியும்’, பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் இதில் மோதுகிறார்கள். இத்தேர்தல் சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே நாளில் அக்கல்லூரியில் நாடகம் நடத்த நடிகர் எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றிருக்கிறார். அதனால் ஜூன் 23-ல் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா? அப்படியே நடந்தாலும் எங்கு நடக்கும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் துணை நடிகர்கள்.

Web Title:

Tamil nadu news today live updates politics nadigar sangam election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close