Advertisment

Tamil Nadu news updates: வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம் - பிரேமலதா

Tamil Nadu news today live updates: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து லட்சகணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: சென்னையிலிருந்து சேலம் வரைக்குமான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisment

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயனை, ஆகஸ்ட் 15 வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டம். காஞ்சிபுரம் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தருவது இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் அவர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவதால், இன்று தரிசன நேரம் குறைப்பு.

நீண்ட விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா நேற்று நிறைவேறியது இதனை எதிர்த்து 84 பேரும் ஆதரவு தெரிவித்து 99 பேரும் வாக்களித்துள்ளனர்.

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா சடலமாக மீட்பு

திங்கட்கிழமை முதல் காணாமல் போன எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் ‘காஃபே காஃபி டே’வின் உரிமையாளருமான வி.ஜி சித்தார்த்தா, நேத்ராவதி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை சடலமாக மீட்பு

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of Politics, Sports, Entertainment, weather, traffic, train services and airlines

இன்றைய முக்கியச் செய்திகள்

 

 

தமிழக செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - Chennai, Tamil Nadu News Live Updates














Highlights

    21:06 (IST)31 Jul 2019

    வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம் – பிரேமலதா

    வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம்   என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா பேசியதாவது, திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என்று கூறினார்.

    19:45 (IST)31 Jul 2019

    அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு – முதல்வர் உத்தரவு

    தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்களை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

    அரசு கேபிள் டி.வி., கட்டணம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு 10 முதல், 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் மாதக்கட்டணமாக செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:03 (IST)31 Jul 2019

    இஞ்ஜினியரிங் மாணவர் சேர்க்கை – 89 ஆயிரம் இடங்கள் காலி

    இஞ்ஜினியரிங் கவுன்சிலிங்கின்  இறுதி நிலவரப்படி இந்த ஆண்டு 82 ஆயிரத்து 595 மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 89 ஆயிரத்து 405  இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 82 ஆயிரத்து 595 இடங்கள் நிரம்பி உள்ளன.  கடந்த ஆண்டு 82 ஆயிரத்து 249 இடங்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 346 இடங்கள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    17:50 (IST)31 Jul 2019

    டாக்டர்களின் போராட்டம் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அரசு மருத்துவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்காததால் தான் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர் . குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க முடியுமா?  என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    17:24 (IST)31 Jul 2019

    ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை கொடுத்தால் பணம் – ஆவின் அறிவிப்பு

    பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  காலி பாக்கெட்டை சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள், பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பாக்கெட் ஒன்றுக்கு ரூ.10 பைசா பெற்றுக்கொள்ளலாம்   என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    16:52 (IST)31 Jul 2019

    ஜாங்கிட் ஐ.பி.எஸ் ஓய்வு!

    கும்பகோணம் போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக உள்ள ஜாங்கிட், இன்று பணிஓய்வு பெறுகிறார். ஏ.எஸ்.பி., எஸ்.பி., டி.ஐ.ஜி. வடக்குமண்டல ஐ.ஜி என தான் வகித்து வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனி முத்திரை பதித்த ஜாங்கிட் என்னுடன் பணியாற்றிய அனைத்து காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,  நெல்லை, தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தியது, பவாரியா கும்பலை கண்டுபிடித்தது உள்ளிட்டவற்றை என்றும் மறவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

    16:49 (IST)31 Jul 2019

    டாக்டர்கள் போராட்டம்!

    தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் கடும் எதிர்ப்பை மீறி தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று  முன் நிறைவேற்றியதால் மருத்துவ மாணவர்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  

    16:39 (IST)31 Jul 2019

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது.  தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   இதற்கு மத்திய அமைச்சரவை இன்று மதியம் ஒப்புதல்  வழங்கியுள்ளது, 

    15:48 (IST)31 Jul 2019

    அத்தி வரதர் விஜபி தரிசனம்!

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவத்தில் விஐபி தரிசனம் நிறுத்தி வைப்பு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயில் வளாகத்திற்குள் உள்ள பக்தர்களுக்கு மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனத்திற்கு அனுமதி என்றும்  மாலை 5 மணிக்கு மேல் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    15:14 (IST)31 Jul 2019

    வேலூர் தேர்தலில் ராணுவ பாதுகாப்பு!

    வேலூர் மக்களவை தொகுதியில், வாக்குப்பதிவு நாளான ஆகஸ்ட் 5-ம் தேதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போட வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து மனுவையும் அளித்துள்ளார். 

    14:54 (IST)31 Jul 2019

    கல்வி கட்டணம் ரத்து!

    ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து  என்று பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    14:15 (IST)31 Jul 2019

    ஆளுநர் கிரண்பேடி அத்தி வரதர் தரிசனம்!

    காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை இன்று சந்தித்து ஆளுநர் கிரண்பேடி தரிசனம் பெற்றார். இன்றுடன் அத்தி வரதரின் சயனகோலம் முடிவடைவதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். 

    13:53 (IST)31 Jul 2019

    ஆயுள் கைதிகள் விடுதலை!

    ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாளைய (1.8.19) தினம் இதுக்குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கவேண்டுமெனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    13:07 (IST)31 Jul 2019

    அத்தி வரதர் சயனகோலம்!

    நாளை முதல் அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு என அறிவிக்கப்பட்டது.  மேலும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொதுதரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:01 (IST)31 Jul 2019

    சயனம் கோலம் டூ நின்ற கோலம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொது தரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு.

    12:36 (IST)31 Jul 2019

    திருமாவளவன் மனு

    புதிய கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார் திருமாவளவன் எம்.பி.

    12:12 (IST)31 Jul 2019

    பெண்கள் பாதுகாப்பு

    பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி உபர், ஓலா போன்ற டாக்ஸி சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை கொண்டுவர பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

    11:45 (IST)31 Jul 2019

    பொறியியல் கல்லூரிகள் திறப்பு

    அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை துவங்கும்  என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிப்பு.

    11:24 (IST)31 Jul 2019

    கரூரில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு

    ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

    10:52 (IST)31 Jul 2019

    8 வழிச்சாலை அறிக்கை தாக்கல்

    8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. சென்னை முதல் சேலம் வரையான சாலை வழி பயண நேரத்தை குறைக்கும் நல்ல நோக்கத்துடன் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    10:23 (IST)31 Jul 2019

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற பதிவாளருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

    09:49 (IST)31 Jul 2019

    ஆடி அமாவாசை

    ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் பக்தர்கள்

    09:36 (IST)31 Jul 2019

    தபால் துறை தேர்வு

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேது நடக்கிறது என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் என்றும் தபால் துறை அறிவித்துள்ளது. முன்னதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் தபால் துறை தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 

    Tamil Nadu news today live updates: தொரட்டி பட கதாநாயகி சத்தியகலாவை பெற்றோர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதால் படத்தின் ப்ரமோஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பட நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பொள்ளாச்சி காவல்துறையினர் ஆகஸ்ட் 5-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

    தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்று எச்சரிக்கை விடுத்தனர். ஆணவ படுகொலைகளை தடுக்க தனிப்பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Mk Stalin Dmk Aiadmk Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment