Advertisment

Tamil Nadu news today : ஜூலை 1ம் தேதி முதல் புதிய புறநகர் ரயில் கால அட்டவணை

Tamil Nadu Latest News: தமிழகத்தின் முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: சென்னை, சேலம் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றம். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக் கழக பதிவாளராக மாற்றப்பட்டிருக்கிறார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம். தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டிருக்கிறார்.

Advertisment

தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC), ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 122 புள்ளிளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் முறையே 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ளன.

Blog

Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Entertainment, weather, traffic, train services and airlines

தமிழகத்தின் முக்கியச் செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!

20:59 (IST)28 Jun 2019


ஜூலை 1ம் தேதி முதல் புதிய புறநகர் ரயில் கால அட்டவணை

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை செயல்பாட்டிற்கு வருகிறது.  சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் இயக்க ரயில்வே முடிவு செய்யப்பட்டுள்ளது.

20:24 (IST)28 Jun 2019


காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பிற்கு மக்களவை ஒப்புதல்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் ஜனாதிபதி  ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க, மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, ஜம்மு, காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2019 -ம் மக்களவையில் நிறைவேறியுள்ளது.

20:03 (IST)28 Jun 2019


சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால் கடும் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக தண்ணீரை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். என்று மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

19:55 (IST)28 Jun 2019


இந்தியாவின் ஆரஞ்சு நிற ஜெர்சி இது தான் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

publive-imageசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிமுறைப்படி, இரு அணிகளும் ஒரே நிற உடையில் களமிறங்க கூடாது.  ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடையில் களமிறங்க வேண்டும்.  உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால், அந்த அணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை. இதனால், வரும் 30ம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், இந்திய அணி மாற்று நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

19:45 (IST)28 Jun 2019


சென்னையின் பல இடங்களில் சாரல் மழை

சென்னையில் வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம்,  தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

19:22 (IST)28 Jun 2019


எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்

அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும் . கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்பவர்களால், அதிமுகவிற்கு எந்த பாதிப்புமில்லை.  மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தால், ஓ.பி.எஸ். இ.பி.எஸ் ஏற்றுக்கொள்வர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

19:00 (IST)28 Jun 2019


இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் : ஹெச்.ராஜா

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு எதிராக தஞ்சாவூரில், ஜூலை 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

18:37 (IST)28 Jun 2019


ஸ்டெர்லைட் வழக்கு - வேதாந்தா விவாதங்கள் குறித்து கவலையில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது திமுக தான், மக்கள் விருப்பப்படி ஆலை மூடப்பட்டது. நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வைக்கும் வாதம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

18:07 (IST)28 Jun 2019


ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விபரம்!

திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த பொன்னி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் பூக்கடை துணை ஆணையராக இருந்த அரவிந்தன், திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளராக நியமனம் கரூர் எஸ்.பியாக இருந்த விக்ரமன் கணினிமயமாக்கல் பிரிவுக்கு மாற்றம், புதிய எஸ்.பியாக பாண்டியராஜன் நியமனம். நாகை எஸ்.பி. விஜயகுமார் குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவுக்கு மாற்றம், புதிய எஸ்.பியாக ராஜசேகரன் நியமனம் கடலூர் எஸ்.பி. சரவணன் சிஐடி சிறப்பு பிரிவுக்கு மாற்றம், புதிய எஸ்.பியாக ஸ்ரீ அபினவ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

17:46 (IST)28 Jun 2019


Tamilnadu news updates : ஸ்டெர்லைட் வழக்கு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். முன்னதாக இதுத்தொடர்பான வாதத்தில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? - வேதாந்தா நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பட்டது குறிப்ப்டத்தக்கது.

17:23 (IST)28 Jun 2019


ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்!

தமிழகத்துக்கு புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிற்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

16:59 (IST)28 Jun 2019


கிரிஜா வைத்தியநாதனுக்கு விழா!

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துத் துறைச் செயலாளர் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இந்த விழாவில் அதிமுக சார்பில் அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

16:13 (IST)28 Jun 2019


கூடுதல் வால்வுகள் கொண்ட தண்ணீர் லாரி!

கூடுதல் வால்வுகள் கொண்ட தண்ணீர் லாரிகளை சென்னையில் அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார் . 2017ம் ஆண்டு இருந்த வறட்சியை விட தற்போது அதிகளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது  என்றும்  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.  நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால்தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது  என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

15:46 (IST)28 Jun 2019


திமுக -வின் 9 தீர்மானங்கள்!

நடப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 9 தீர்மானங்களை கொண்டு வர உள்ளார். இது தொடர்பான பட்டியல் சபாநாயகர் தனபாலிடம் இன்று கொடுக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினை, மத்திய அரசின் மும்மொழி கொள்கை, மாணவர்கள் கல்வி கடன், வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க கோருவது, உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு எதிர்ப்பு, மத்திய அரசின் ஓரே நாடு, ஓரே அட்டை திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை குறித்து தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் பற்றாக்குறை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:47 (IST)28 Jun 2019


நயன்தாரா படத்திற்கு நீங்கியது தடை!

நடிகை நயன்தாரா நடித்துள்ள "கொலையுதிர் காலம்" என்ற படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

14:44 (IST)28 Jun 2019


அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்!

வடசென்னை வடக்கு மாவட்ட அமமுகவினர் பலர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் . அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

14:17 (IST)28 Jun 2019


அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

அதிமுக  எம்எல்ஏக்கள்  இன்று காலை  தொடங்கி நடைப்பெற்று வந்தது. கூட்டத்தை முடித்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் தங்கதமிழ்ச்செல்வன்   திமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ திமுகவில் இணைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் இன்று ஒரு நாள் மட்டும் தான் ஹீரோ, நாளை ஜீரோ ” என்று விமர்சித்தார்.

13:57 (IST)28 Jun 2019


News in tamil : வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்க்கியுள்ளது. வள்ளூவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இயக்க நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது.

13:06 (IST)28 Jun 2019


அதிமுக- எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. எம்எல்ஏ-க்களுடன்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

12:30 (IST)28 Jun 2019


Tamil Latest news: திமுக-வில் இணைந்த பிறகு தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது பேசிய அவர், “எ.வ.வேலு, சேகர் பாபு, செந்தில் பாலாஜி என அதிமுகவில் இருந்த பலரும் திமுக-வுக்கு வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. அனைவரையும் அனுசரித்து செல்லும் தளபதி ஸ்டாலினின் குணம் என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்ற விஷயம் என்னை வியக்க வைத்தது. திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்” என்றார். அவரிடம் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து தலைமையே கொடுப்பது தான் பதவி. என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

12:23 (IST)28 Jun 2019


தங்க தமிழ்ச்செல்வனால் திமுக-வுக்கு ஆதாயமே - நாஞ்சில் சம்பத்!

அரசியலில் எண்ணிக்கை தான் முக்கியம், அதனால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவது திமுகவுக்கு ஆதாயம்தான், அவரை வாழ்த்தி திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்திற்கு வரவேற்கிறேன் என அதிமுக-விலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

12:19 (IST)28 Jun 2019


tamil news today: திமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.

12:07 (IST)28 Jun 2019


news today: தங்க தமிழ்ச்செல்வன் அறிவாலயம் வருகை

அமமுக-விலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்காக தற்போது முதன்முறையாக அறிவாலயம் வந்திருக்கிறார். இதற்காக திமுக-வின் முக்கிய நிர்வாகிகளும் தேனியிலிருந்து அறிவாலயம் வந்திருக்கின்றனர்.

11:41 (IST)28 Jun 2019


தங்க தமிழ்ச்செல்வனை வரவேற்கிறேன் - வி.பி.கலைராஜன்

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய இருக்கிறார், அவருடைய வருகை வரவேற்கத்தக்கது. இதனால் தேனி மாவட்ட திமுக இன்னும் வலுப்பெறும் என்று தெரிவித்திருக்கிறார் திமுக-வின் வி.பி.கலைராஜன். சில மாதங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி மற்றும் வி.பி.கலைராஜன் இருவரும் அமமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

11:21 (IST)28 Jun 2019


மறைந்த செய்தியாளர் பிரசன்னா குடும்பத்திற்கு 3 லட்சம் - முதல்வர்

சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து இறந்த செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

11:14 (IST)28 Jun 2019


எம்.எல்.ஏ-க்கள் கூடம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது; சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணைகிறார்.

11:04 (IST)28 Jun 2019


Tamil News today: அறிவாலயத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகை

அமமுகவில் தேனி மாவட்ட செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைகிறார். திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். இதில் தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளும் கலந்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தங்க தமிழ்ச்செல்வனும் வருகை தர உள்ளார்.

10:34 (IST)28 Jun 2019


Breaking news tamil: அறிவாலயத்திற்கு திமுக நிர்வாகிகள் வருகை

அமமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இன்று இணைவதாக முன்பே குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில் தற்போது தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தங்க தமிழ்ச்செல்வனும் வருகை புரிந்து, அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:26 (IST)28 Jun 2019


மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

சட்டப் பேரவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சபாநாயகரின் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் கடிதம் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

10:16 (IST)28 Jun 2019


சட்டப் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மறைந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் இன்று நாள் முழுவதும் சட்டப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து மீண்டும் திங்கட்கிழமை இது கூடுகிறது.

10:10 (IST)28 Jun 2019


திமுக-அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு இரங்கல் தீர்மானம்

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு முன்னாள் எம்எல்ஏக்கள் 8-பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது

10:07 (IST)28 Jun 2019


Tamil Latest News: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது. மறைந்த உறுப்பினர்களுக்கு இன்று பேரவையில் இரங்கல் தெரிவித்த பின் அவை ஒத்திவைக்கப்படும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1-ம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது.

10:05 (IST)28 Jun 2019


Tamil Latest News: கூடியது சட்டப்பேரவை

சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தனித்தனியே நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும், 11:30-க்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நடக்கும் முதல் கூட்டம் இது.

09:21 (IST)28 Jun 2019


அமமுகவை கட்சியாக பதிவு செய்வதற்கான அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தினகரனின் அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

09:10 (IST)28 Jun 2019


Tamil News today: இன்று காலை 11 மணிக்கு நடக்கும் நிகழ்வு

தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு அக்கட்சியில் இணையவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தேனி மாவட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டி இணைப்பு விழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

09:00 (IST)28 Jun 2019


News Today: திமுக-வில் இணையும் தங்க தமிழ்ச்செல்வன்?

சில தினங்களுக்கு முன்னர் அமமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை பற்றி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. பின்னர் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட டிடிவி விரைவில் புதிய மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படுவார் என்றார். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுக-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூட தனது செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கிடையே தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Tamil Nadu news today live updates: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு இரு தரப்பு கட்சியினரும் அமைதியை கடைபிடித்து வந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், அமமுக நிர்வாகி ஒருவரிடம் அலைபேசியில் பேசிய உரையாடல்கள் வெளிவரத் துவங்கின.

அவர் அதில் அமமுகவையும், அமமுகவின் தலைவர் டிடிவி தினகரனையும் தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். இது மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்து தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து விரைவில் நீக்கிவிடுவோம் என்று கூறினார் டிடிவி தினகரன். இதற்கிடையே, தான் பேசியது குறித்து வருத்தமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை தங்க தமிழ்ச்செல்வன்.

Mk Stalin Dmk Aiadmk Mla Thanga Tamilselvan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment