Tamil Nadu news updates: திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

Tamil Nadu news today live updates: சென்னையில் பெட்ரோல் விலை 14 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.66 ஆகவும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.69.71 ஆகவும் விற்பனை.

Tamil Nadu news today live updates: இன்றைய முக்கிய செய்திகள் தொடர்பான தொகுப்பாக இந்த லைவ் செய்தி தொகுப்பு அமைகிறது. முக்கிய செய்திகளின் விவரங்கள் கீழே..  நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடு போயிருந்த நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று மதியத்திற்குள் அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் ஆகிறது. இதற்காக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் தவறாது வரும்படி கொறடா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருப்பதால், நாளை பகல் 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் வரிசையில் நிற்க அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Updates: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களிலும் தமிழக உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of Politics, Entertainment, Sports, weather, traffic, train services and airlines இன்றைய முக்கியச் செய்திகள்! தமிழக செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க - IE Chennai Live

20:55 (IST)30 Jul 2019
திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது  என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  வேலூர் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார், அது நடக்காது என்று கூறினார்.

20:03 (IST)30 Jul 2019
முத்தலாக் மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி - பிரதமர் மோடி

முத்தலாக் தடை செய்யப்பட்டது பாலின மற்றும் சமூக சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி, மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது  என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

19:08 (IST)30 Jul 2019
முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – தமிழிசை கேள்வி

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் தெளிவான நிலைப்பாடு என்ன என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவையில், முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, அதற்கு ஆதரவாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமான   ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். இது அதிமுகவிற்குள் பெரும்புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம.பி. நவநீதகிருஷ்ணன், இந்த மசோதா சட்டவிரோதமானது. முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

18:28 (IST)30 Jul 2019
தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் திமுக எம்.பி.க்கள் – உதயநிதி ஸ்டாலின்

தமிழர்களின் உரிமைகளுக்காக, திமுகவின் 37 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தில் இவ்வாறு கூறினார்.

17:51 (IST)30 Jul 2019
புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் – தமிழக எம்.பி.க்களுக்கு அழைப்பு

புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம், ஆகஸ்ட் 1ம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

16:56 (IST)30 Jul 2019
தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களின் சிறப்பு அதிகாரிகள் இடமாற்றம்

தென்காசி, செங்கல்பட்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டிற்கு நியமிக்கப்பட்டிருந்த அருண் சுந்தர் தயாளன் தென்காசிக்கும், தென்காசிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஜான் லூயிஸ் செங்கல்பட்டுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

16:22 (IST)30 Jul 2019
ஆணவ படுகொலைகள் விவகாரம் – தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிப்பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

15:50 (IST)30 Jul 2019
முத்தலாக் மசோதா - மாநிலங்களவையில் அந்தர்பல்டியடித்த அதிமுக

 மக்களவையில், முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, அதற்கு ஆதரவாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமான   ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். இது அதிமுகவிற்குள் பெரும்புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம.பி. நவநீதகிருஷ்ணன், இந்த மசோதா சட்டவிரோதமானது. முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

15:14 (IST)30 Jul 2019
ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு 20ம்தேதிக்கு ஒத்திவைப்பு

பிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு,  திமுகவின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது . வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பது, நீதிமன்றத்தை சந்தேகப்படும் நோக்கில் பார்க்கப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

14:06 (IST)30 Jul 2019
முத்தலாக் மசோதா தாக்கல்- ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முத்தலாக் தடை சட்டத்தை ராஜ்யசபாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது. லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

14:01 (IST)30 Jul 2019
ஓ.பி.எஸ். வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

13:45 (IST)30 Jul 2019
ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்க வழக்கு-உச்ச நீதிமன்றம் விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்தார்.‘சபாநாயகர் செய்ய வேண்டிய தகுதிநீக்க நடவடிக்கையை நீதிமன்றம் செய்ய இயலுமா?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசியல் சாசனம் 226-வது பிரிவை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே அந்த பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

13:39 (IST)30 Jul 2019
நடிகை சத்தியகலா சிறை வைப்பு, பட அதிபர் வழக்கு

தொரட்டி பட கதாநாயகி சத்தியகலாவை பெற்றோர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதால் படத்தின் ப்ரமோஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பட நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பொள்ளாச்சி காவல்துறையினர் ஆகஸ்ட் 5-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

13:25 (IST)30 Jul 2019
தீபா அரசியல் துறவறமா? மாறுபட்ட தகவல்கள்

அரசியலில் இருந்து தீபா விலகியதாக வெளிவரும் தகவல்கள் நிஜமல்ல என அடுத்தகட்டத் தகவல்கள் வருகின்றன. முகநூலில் தீபாவின் அதிகாரபூர்வ பக்கம் இயங்கவில்லை. அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தீபா இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் பேரவையை சேர்ந்த யாரிடமோ தீபா வாட்ஸ் அப்பில் பறிமாறிய தகவல் அடிப்படையில் அவர் அரசியலை விட்டு விலகியதாக செய்தி பரவியிருப்பதாக தெரிகிறது. அதிகாரபூர்வ நிலைப்பாட்டை இன்று மாலை தீபா தெரிவிப்பார் என தெரிகிறது.

12:40 (IST)30 Jul 2019
பொது வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன் - தீபா

ஜெயலலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “நான் முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்” என முகநூலில் அறிவித்துள்ளார். 

12:15 (IST)30 Jul 2019
அரசியலாக்க வேண்டாம்

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது, இதை அரசியலாக்க வேண்டாம் என மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேச்சு

11:55 (IST)30 Jul 2019
காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ். காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்பட 6 உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

11:33 (IST)30 Jul 2019
மாநிலங்களவையில் வைகோ பேச்சு

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ, அங்கு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும்,  இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் நியூட்ரினோ மையத்திற்கு அருகில் உள்ளது எனவும் மாநிலங்களவையில் வைகோ பேச்சு. 

11:15 (IST)30 Jul 2019
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு விருது

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சிறந்த புலிகள் காப்பகத்திற்கான விருதை 4 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கி வருகிறது. வனத்தின் பாதுகாப்பு, வேட்டைத்தடுப்பு, களைச் செடிகளை அகற்றுதல், உயிர்ச்சூழல் பேணுதல், பழங்குடியின மக்களின் நலன் காத்தல் உள்ளிட்ட பல்வேறு வகை செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு இந்த விருது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கிடைத்துள்ளது. 

10:36 (IST)30 Jul 2019
எதையோ மறைக்கிறது அப்போலோ - உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது எனவும், எதையோ மறைப்பதற்காகவே அவ்வப்போது தடை கோருவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆணையம் சரியான முறையில் தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது, எனவும் உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10:22 (IST)30 Jul 2019
தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச்செல்லப்பட்ட சுமார் 2379 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 தமிழக மீனவர்களை கைது செய்து, இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

09:40 (IST)30 Jul 2019
காவிரி நீர் வரத்து

தமிழக எல்லையான பலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 8,000 லிருந்து 9,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் 8-வது நாளாக இன்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

09:22 (IST)30 Jul 2019
உமா மகேஸ்வரி கொலை வழக்கு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் கைதானவரிடம் 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு குற்றவாளி என உறுதியானதால் கார்த்திகேயனை கைது செய்தது காவல்துறை

09:16 (IST)30 Jul 2019
மேட்டூர் அணை நீர் வரத்து விபரம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8400 கனஅடியில் இருந்து, 8900 கன அடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணை நீர்மட்டம் - 44.49 அடி, நீர் இருப்பு - 15.67 டிஎம்சி, நீர்வரத்து - 8900 கனஅடி, நீர் திறப்பு - 1000 கனஅடி. 

09:09 (IST)30 Jul 2019
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மாயம்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ். எம் கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு திடீரென மாயமானார். தற்போது அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு - தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்: முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மாயம்

08:26 (IST)30 Jul 2019
சிபிசிஐடி அதிகாரி நியமனம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு நேற்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று காலை  திருநெல்வேலிக்கு சென்று விசாரணையை தொடங்க இருக்கிறார்,

Tamil Nadu news today live updates: திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் மதிப்புள்ள தங்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் திருச்சி வந்த விமானங்களில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி, சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 11 பேரிடம் இருந்து இரண்டாயிரத்து 600 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டன.

அத்திவரதர் தரிசனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக கூறிய தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Web Title:

Tamil nadu news today live updates politics sports entertainment weather

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close