Tamil Nadu news today updates: ‘கராத்தே தியாகராஜன் பேச்சில் உடன்பாடில்லை; அழகிரியிடம் வருத்தம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளேன்’ – ப.சிதம்பரம்

அரசியல், விளையாட்டு, சினிமா உட்பட தமிழகத்தின் முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள். 

Tamil Nadu news today updates: தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம், ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலமும் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

அதோடு, நேற்று சட்ட மன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, ஜூலை 1-ம் தேதிக்கு சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக வாய்மொழியாக அறிவித்திருக்கிறது திமுக. இதனால் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜூலை 1-ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிகிறது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Entertainment, weather, traffic, train services and airlines அரசியல், விளையாட்டு, சினிமா உட்பட தமிழகத்தின் முக்கியச் செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

20:25 (IST)29 Jun 2019
கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல - ப.சிதம்பரம் ட்வீட்

கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல. கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டியில் எனக்கு உடன்பாடில்லை; அவருடைய பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு பாதகமானவை. கே.எஸ்.அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளேன் என ப.சிதம்பரம் ட்வீட் செய்திருக்கிறார்.

20:20 (IST)29 Jun 2019
ஊடகங்களில் இனி செய்தித் தொடர்பாளர்கள் பேசலாம் - அதிமுக

ஊடகங்களிடம் பேசக்கூடாது என செய்தி தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அதிமுக நீக்கியது. ஜூலை 1ம் தேதி முதல் தங்களின் பணியை தொடரலாம் என கூட்டாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

20:01 (IST)29 Jun 2019
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி என கடலூர் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

19:30 (IST)29 Jun 2019
ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம் உறுதி

திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

18:33 (IST)29 Jun 2019
உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவே அதிகம் வாய்ப்புள்ளது. அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி உள்பட எங்கு நின்றாலும் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும்" என்று தெரிவித்தார்.

17:03 (IST)29 Jun 2019
கராத்தே தியாகராஜனுக்கு எச்சரிக்கை!

கராத்தே தியாகராஜன் மீது காங்கிரஸ் கட்சி எடுத்த  ஒழுங்கு நடவடிக்கை மூலம்  அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,  தனது சஸ்பெண்ட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா டெல்லியில் முகாமிட்டு தன்னை நீக்க சதி செய்ததாக புகார் கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள கோபண்ணா “ கராத்தே தியாகராஜன் விரக்தியில் பேசியதாக  கூறினார். மேலும், அவர் தொடர்ந்து இதுப் போன்ற அவதூறுகளை பரப்பி வந்தால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.” 

16:34 (IST)29 Jun 2019
நடிகை கஸ்தூரி ட்வீட்!

மதுக்கு எதிராக போராடிய வழக்கறிஞர் நந்தினி நீதிமன்றத்தை அவமதித்தாகவும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். வரும் ஜூலை 5 ஆம் தேதி அவருக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், நந்தினி தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். 

16:18 (IST)29 Jun 2019
துணை ஆட்சியர்கள் இடமாற்றம்!

கடந்த  2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு தமிழக அரசு இன்றைய தினம் தமிழகத்தில் 18 துணை ஆட்சியர்களை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

16:01 (IST)29 Jun 2019
Today news: திருநாவுக்கரசர் பேட்டி!

மக்களவை தேர்தலை போல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து அதுக் குறித்து நான்பதில் கூற முடியாது என்றார். 

15:35 (IST)29 Jun 2019
ஊடகத்தில் இனி பேசலாம்!

ஊடகங்களிடம் பேசக்கூடாது என செய்தி தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது அதிமுக.  வரும்  ஜூலை 1ம் தேதி முதல்  செய்தி தொடர்பாளர்கள் தங்களின் பணியை தொடரலாம் என்று  ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.   இதுக் குறித்து அறிக்கை அதிமுக அரசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

14:46 (IST)29 Jun 2019
கே.எஸ்.அழகிரி விளக்கம்

"காங். ஆலோசனை கூட்டம் குறித்து மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டார்கள், நான் விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையிலேயே கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார். கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு, நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது" என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

14:07 (IST)29 Jun 2019
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

"சென்னையில் மழை சேகரிப்பு திட்டம் உள்ளதா என வீடு, வீடாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன மழைநீர் சேகரிப்புதிட்டம் இல்லாத வீடுகள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது. மழைசேகரிப்பு கட்டமைப்பு இல்லாத 1,000 கட்டங்களை கண்டறிந்து கட்டமைப்பு ஏற்படுத்த ஆலோசனை தரப்படும் சென்னையின் 200 வார்டிலும் சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த இலக்கு" என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

13:26 (IST)29 Jun 2019
வானிலை மைய அப்டேட்

வெப்பச்சலனம் மற்றும் பருவக் காற்றால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13:01 (IST)29 Jun 2019
டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பிரிவு உபசார விழா

பதவியிலிருந்து ஓய்வுபெறும் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு நாளை பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த பிரிவு உபசாரவிழா நடக்கிறது

12:34 (IST)29 Jun 2019
ரஜினிகாந்த் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், “குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். உடனடியாக ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும். மழைக்கு முன்பு அவற்றை சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது. இறுதி நிமிடத்தில் தகவல் தெரிவித்ததால் என்னால் வாக்களிக்க முடியவில்லை” என்றார். 

12:18 (IST)29 Jun 2019
இயந்திரங்கள் பழுது

"இயந்திரங்கள் பழுதால் அம்மா குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன" என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேட்டி. 

11:51 (IST)29 Jun 2019
Tamil Nadu News: கராத்தே தியாகராஜன் மேல் பரிதாபப் படுகிறேன் - கோபண்ணா

இன்று காலையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்த கராத்தே தியாகராஜன், போபண்ணா மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது பற்றி போபண்ணாவிடம் கருத்து கேட்ட போது, “என் மீது கராத்தே தியாகராஜன் கூறிய அவதூறு குற்றச்சாட்டில் உண்மையில்லை. எனது தந்தை கொடுத்த நிலத்தை தவிர எனக்கு எந்த சொத்தும் இல்லை. கராத்தே தியாகராஜன் மேல் பரிதாபப் படுகிறேன்” என்றார். 

11:28 (IST)29 Jun 2019
காமராஜர் பல்கலைக் கழகம் சுற்றறிக்கை

யுஜிசி தகுதி பெறாத ஆசியர்கள் பணியாற்றினால், படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

11:13 (IST)29 Jun 2019
திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்கக்கோரி கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் சென்னை பிராட்வே-யில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

10:56 (IST)29 Jun 2019
Breaking News Tamil: புதிய தலைமைச் செயலர், டிஜிபி நியமனம்

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் ஆகியோரை நியமித்து அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. 

10:49 (IST)29 Jun 2019
Tamil news Today: கராத்தே தியாகராஜன் பேட்டி

காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரத்தை இன்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயதாரணி எம்.எல்.ஏ சில பேட்டிகளில் நாடாளுமன்றத்தில் மோடி பேசியது சரி தான் என்கிறார். காங்கிரஸ் தயவால் தான் 2006-ல் மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு வந்தது என்கிறார் வேலுச்சாமி. இவர்களை எல்லாம் கண்டிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என் மீது மட்டும் அழகிரி ஏன் நடவடிக்கை எடுத்தார் எனத் தெரியவில்லை. அன்றைக்கு அத்தனை மாவட்ட செயலாளர்களும் கூட பேசினார்கள். எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர். நான் தலைவர் ராகுல் காந்திக்கும், ப.சிதம்பரத்திற்கும் என்றும் விசுவாசத்துடன் இருப்பேன்” என்றார். 

09:58 (IST)29 Jun 2019
தேவசகாயத்தை மாநிலங்களவை உறுப்பினராக்கும்படி மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

தமிழகத்தில் பதிய மாநிலங்களை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக-வும் அதிமுக-வும் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்துக் கொள்ள முடியும். திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக-வுக்கு 1 இடம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளது. இதனை பேராயர் எஸ்ரா சற்குணம், தாமஸ் பிராங்கோ அனுப்பியுள்ளனர். ”என்னை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்க திமுக முன்வந்தால் நானும் அதற்கு தயார், வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவேன்” என இதுபற்றி தேவசகாயம் ஐ.ஏ.எஸ் கூறியிருக்கிறார். 

09:39 (IST)29 Jun 2019
ப.சிதம்பரத்துடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை

உள்ளாட்சிதேர்தலில் காங்கிரஸ் தனித்துபோட்டியிட வேண்டும் என கருத்து கூறியதால் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். 

09:14 (IST)29 Jun 2019
நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது

09:12 (IST)29 Jun 2019
Tamil Latest News: காதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம்

மேட்டுப்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஆணவக்கொலை நடைப்பெற்றது. பட்டியலின பெண்ணை காதலித்ததற்காக தம்பி கனகராஜையும், அவரது காதலி வர்ஷினியையும், அண்ணன் வினோத் கொடூர தாக்குதல் நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துவிட, பின்னர் போலீஸில் சரணடைந்தார் வினோத். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் வர்ஷினி. சிகிச்சை பலனின்றி தற்போது அவரும் இறந்துள்ளார். 

Tamil Nadu news today live updates: அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுக நிர்வாகி உடன் சமீபத்தில் பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுக் குறித்து பேசிய டிடிவி தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close