Tamil Nadu news updates: 2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலம் – துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

Tamil Nadu news today live updates: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75.80 காசுகளுக்கும், டீசல் 68.78 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது அதிமுக தான்” என்றார்.

தமிழகத்தில் தலை தூக்கும் மாட்டிறைச்சி பிரச்னை – இளைஞர் கைது

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது பரப்புரையில், ”விரைவில் திமுக ஆட்சி அமைப்பது நிச்சயம்” என்றார். முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் 14 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி அறிவிப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் முதல்வர் எடியூரப்பா. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75.80 காசுகளுக்கும், டீசல் 68.78 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க – Chennai, Tamil Nadu News Live Updates: Dial for Water 2.0 from today; Bus rams into wall, kills 2 and injures 6

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of Politics, Entertainment, Sports, weather, traffic, train services and airlines 

தமிழகத்தின் முக்கியச் செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.


20:40 (IST)29 Jul 2019

2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலம் – துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாறும். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது  என்று வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை ஆதரித்து லத்தேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

19:43 (IST)29 Jul 2019

புதிய கல்வி கொள்கையில் பல்வேறு சிறப்புகள் உள்ளன

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இதில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர், தற்போது உள்ளது போன்று விவாதங்கள் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக அமையாது  என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பால.குருசாமி கூறியுள்ளார்.

19:04 (IST)29 Jul 2019

இந்தியாவில் அதிக சதவீத வாக்குகள் பெற்ற கட்சி திமுக – ஸ்டாலின்

இந்தியாவில் அதிக சதவீத வாக்குகள் பெற்ற கட்சி திமுக  தான் என்று திமுக தலைவர்  ஸ்டாலின் கூறியுள்ளார். 

வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில்  அவர் பேசியதாவது, சூழ்ச்சியின் காரணமாகவே தேர்தல் நிறுத்தப்பட்டது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்  என்று அவர் கூறினார்.

18:15 (IST)29 Jul 2019

நெல்லை மாஜி மேயர் உமாமகேஸ்வரி கொலைவழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  வழக்கின் முக்கியத்துவம் கருதி, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

17:18 (IST)29 Jul 2019

புற்றுநோய் பாதித்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – அரசாணை வெளியீடு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் முழு சம்பளத்துடன் 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

16:38 (IST)29 Jul 2019

அத்திவரதர் தரிசன விவகாரம் : வழக்குகள் தள்ளுபடி

அத்திவரதர் தரிசனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக கூறிய தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

16:05 (IST)29 Jul 2019

ஆணவக்கொலைகள் குறித்த அரசின் அறிக்கை – உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அதிருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 1300 காவல் நிலையங்களில் சிறப்பு பிரிவு அமைத்துள்ளதாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

15:55 (IST)29 Jul 2019

திருச்சி : ரூ.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் திருச்சி வந்த விமானங்களில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி, சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 11 பேரிடம் இருந்து இரண்டாயிரத்து 600 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

15:30 (IST)29 Jul 2019

மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைத்துறையினரே காரணம் – தமிழிசை

மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைத்துறையினரே காரணம் என  பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். திரைப்பட துறையில் அரசியல் தேடுகிறார்களே தவிர நல்ல கொள்கைகளை மேற்கொள்வதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

14:56 (IST)29 Jul 2019

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம், இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், காலஅவகாசம், மேலும் 15 நாட்களுக்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

14:30 (IST)29 Jul 2019

எடியூரப்பா வெற்றி

காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை எடியூரப்பா கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக, சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்ததை அடுத்து, சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து ரமேஷ் குமார் விலகினார். 

14:13 (IST)29 Jul 2019

சட்டப்பேரவை இடைத்தேர்தல்

2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 6 மாத காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் இடைத்தேர்தலை நடத்த தயாராக இருக்கிறது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

13:34 (IST)29 Jul 2019

அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக்கோரி, உள்துறை அமித்ஷாவிடன் நேரில் கோரிக்கை வைத்தார் விசிக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன். அவருடன் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் சென்றார். அமித்ஷாவை சந்தித்து விட்டு, செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். 28 ஆண்டுகள் என் மகனின் வாழ்க்கை சிறையிலேயே முடிந்து விட்டது. அவனை வெளியில் கொண்டு வர நான் எல்லா முயற்சியும் எடுத்து வருகிறேன். அதில் ஒரு பகுதியாக தம்பி திருமாவளவனோடு இன்று அமித்ஷாவை சந்தித்தேன் என கண்ணீர் விட்டார் அற்புதம்மாள். 

13:19 (IST)29 Jul 2019

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வனத்துறையின் காவலர் பணியிடத்திற்கான தேர்வுக்கு அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அரசு உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

13:07 (IST)29 Jul 2019

மக்கள் நீதி மய்யத்தின் சமூகப்பணி

12:54 (IST)29 Jul 2019

அமித்ஷா – அற்புதம்மாள் சந்திப்பு

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் எம்.பியுடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்.

12:09 (IST)29 Jul 2019

அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்

அணை பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.  இதற்கு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் அறிமுக நிலையிலேயே தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

11:41 (IST)29 Jul 2019

சர்வதேச புலிகள் தினம்

3000 புலிகளைக் கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களுள் ஒன்று என்று நாம் பெருமையுடன் கூறலாம் என மோடி பேச்சு. 

11:20 (IST)29 Jul 2019

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன், தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

11:02 (IST)29 Jul 2019

உமா மகேஸ்வரி கொலை வழக்கு

நெல்லையில் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றில் போடப்பட்டுள்ளதாக தகவல்

10:37 (IST)29 Jul 2019

தபால் வாக்குப்பதிவு

ஆகஸ்ட் 5ல் நடைபெற உள்ள வேலூர் மக்களவை தேர்தலையொட்டி போலீசார் தபால் வாக்குப்பதிவு செய்தனர். வேலூர் நேதாஜி ஸ்டேடியம் காவலர் பயிற்சி மைதானத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் 1,118 போலீசார் தங்களது தபால்வாக்குகளை இன்று மாலை 5 மணி வரை செலுத்துகின்றனர்

10:23 (IST)29 Jul 2019

அத்திவரதர் தரிசனம் தொடர்பான 5 வழக்குகளில் இன்று தீர்ப்பு

அத்திவரதர் தரிசனம் தொடர்பான 5 வழக்குகளில் இன்று பிற்பகல் 2.15க்கு தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்க கோரும் வழக்கு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வழக்குகளில் இன்று தீர்ப்பு

10:12 (IST)29 Jul 2019

மோடி தமிழகம் வருகை

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக 31-ஆம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் பிரதமர் மோடி.  ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் காஞ்சிபுரம் அத்திவரதர், நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நிலையில், 31-ம் தேதி சயன கோலத்திலும், 1-ம் தேதி நின்ற கோலத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்கிறார் மோடி

10:10 (IST)29 Jul 2019

அமித்ஷாவுடன் திருமாவளவன் சந்திப்பு

7 பேர் விடுதலை தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் விசிக மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன். அவருடன் அற்புதம்மாளும் அமித்ஷாவை சந்திக்கிறார். 

09:16 (IST)29 Jul 2019

இன்று தமிழ்நாட்டுக்கு துக்க நாள்

விசிக எம்.பி ரவிக்குமாரின் ட்விட்டர் பதிவு 

08:54 (IST)29 Jul 2019

செந்தூர நிற பட்டாடையில் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 29-வது நாளான இன்று செந்தூர நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.

08:36 (IST)29 Jul 2019

Tamil nadu news: உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கைது

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தலைவர் சீனியம்மாளின் மகன், கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு, ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்த்திகேயன் கொடுத்த தகவலின் பேரின் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உமா மகேஸ்வரிக்கும், சீனியம்மாளுக்கும் அரசியல் ரீதியான பிரச்னைகள் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

Tamil Nadu news today live updates: நேற்று (ஜூலை 28ம் தேதி) அத்திவரதரை தரிசிக்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 33 பக்தர்கள் மயக்கமடைந்தனர். ஆகஸ்ட் 1 முதல் 20,000 பக்தர்களை நிறுத்தி வைத்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் நேற்று பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் இதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பணியின்போது அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

Web Title: Tamil nadu news today live updates politics weather entertainment sports

Next Story
Tamil Nadu Weather Updates: டாமால் டுமீல் இல்ல, ஆனா இன்னைக்கும் மழை இருக்கு!Chennai weather update heavy rainfall alert given Theni Dindigul
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express