Tamil Nadu news today updates: திருப்பதியில் கைது செய்யப்பட்ட முகிலன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடிக்கு அனுப்பி வைப்பு

Tamil news: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை ஐ.இ.தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: நேன்று மக்களவையில் 2019-2020-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் சம்பந்தமக பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென்று சங்கத் தமிழ் காலத்தையும் நினைவுக் கூர்ந்தார்.

தவிர, தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு வைகோவுக்கு ஒரு வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய வைகோ, “இளைஞர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்தை விதைத்ததற்காக எனக்கு இந்த தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். விதைப்பேன், விதைத்துக் கொண்டு தான் இருப்பேன். நான் தந்தை பெரியார் வழி வந்தவன். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தந்தை பெரியார் சென்னை சிறையில் 3 ஆண்டுகள் இருந்தார். அதிக பட்ச தண்டனை என்ன இருக்கிறதோ, அதைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, சால்வையை தூக்கிப் போட்டுக் கொண்டு 3 வருடம் சிறையில் கழித்தார் என படித்திருக்கிறேன். நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, Politics, Sports, Entertainment, traffic, train services and airlines தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை ஐ.இ.தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

23:13 (IST)06 Jul 2019
தமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு

திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக போலீசாரின் வேண்டுகோளின் பேரில் காட்பாடிக்கு பலத்த பாதுகாப்புடன் திருப்பதி ரயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.

21:16 (IST)06 Jul 2019
திருப்பதியில் இருக்கிறாரா முகிலன்?

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை, திருப்பதி ரயில் நிலையத்தில் நேரில் பார்த்ததாக, அவரது நண்பர் சண்முகம் தெரிவித்துள்ளார். வெள்ளை சட்டையுடன், கையில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டே சென்ற முகிலனை, மூன்று ஆந்திர போலீசார் சுற்றிவளைத்து அழைத்துச் சென்றதை பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார். தமிழில் அவர் முழக்கமிட்டுக் கொண்டே சென்றதாகவும் கூறியுள்ளார். 

20:23 (IST)06 Jul 2019
2 மாதத்தில் ரூ.2000 - முதல்வர்

நெல்லை தென்காசியில் அதிமுகவில் இசக்கி சுப்பையா இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர் பழனிசாமி, தேர்தலின் போது நாங்கள் அளித்த வாக்குறுதி படி, ஏழை குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதத்தில் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

19:53 (IST)06 Jul 2019
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு; கண்டன தீர்மானம் நிறைவேற்றனும் - ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

19:33 (IST)06 Jul 2019
உதயநிதியின் பதவி குறித்து பாக்யராஜ் விமர்சனம்

சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை; போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை, ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள் என உதயநிதி பதவி குறித்து இயக்குனர் பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்

18:33 (IST)06 Jul 2019
பாமக வேட்பாளர் அன்புமணி

எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, அன்புமணி ராமதாஸை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே. மணி இன்று வெளியிட்டுள்ளார். 

18:10 (IST)06 Jul 2019
தமிழக பாஜக தலைமையில் மாற்றம்?

ஆகஸ்ட் மாதம் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும் என சென்னையில் எஸ்.வி.சேகர் பேட்டி அளித்திருக்கிறார். முன்னதாக, தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், பாஜக இரு இடத்தில் கூட வெற்றிப் பெறவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

17:23 (IST)06 Jul 2019
முதல்வர் எடப்பாடி பேட்டி!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம் என்றும் கூறினார். 

16:58 (IST)06 Jul 2019
நடிகர் சங்க தேர்தல் வழக்கு:

நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி துணை நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  சேலம், கிருஷ்ணகிரியை சேர்ந்த துணை நடிகர்கள் தொடர்ந்த வழக்கு வரும்  திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.  அனைவருக்கும் வாக்குரிமை அளித்து தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் மனுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

16:04 (IST)06 Jul 2019
நீட் தேர்வு!

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. 

14:30 (IST)06 Jul 2019
தங்க விலை குறைவு:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 3281 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 40 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. 

13:54 (IST)06 Jul 2019
வேலூரில் ரெய்டு

வேலூரில் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளராக பணியாற்றும் ரமேஷ் ராஜு என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை.

13:14 (IST)06 Jul 2019
நகை கொள்ளை

சென்னையில் இருந்து நெல்லை வந்த ரயிலில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக அதிகாரி சோமசுந்தரம் என்பவரின் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை

13:07 (IST)06 Jul 2019
உதயநிதி பேட்டி

புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துவதுடன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும்,  திமுக இளைஞரணியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

12:35 (IST)06 Jul 2019
மீண்டும் ஏ.சி.எஸ் - கதிர் ஆனந்த் போட்டி

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில், ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

12:09 (IST)06 Jul 2019
வைகோ பேட்டி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன். மதச்சார்பின்மையை காப்பாற்ற பாடுபடுவேன், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க பணியாற்றுவேன் ’ என்றார்.

11:57 (IST)06 Jul 2019
வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் ஏ.சி.சண்முகம் போட்டி

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கிறது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:49 (IST)06 Jul 2019
அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகிய இருவரும் இதில் போட்டியிடுகிறார்கள். இன்னும் ஒரு சீட் பாமக-வுக்கு வழங்கப்படுகிறது. 

11:15 (IST)06 Jul 2019
Tamil News today: வைகோ மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ, திமுக வேட்பாளர்கள் வில்சன், சண்முகம் ஆகியோர் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். 

11:03 (IST)06 Jul 2019
திமுக இளைஞரணி கூட்டம்

சென்னையில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின் தனது முதல் ஆலோசனையை நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின். தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இளைஞரணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.  

10:42 (IST)06 Jul 2019
திமுக உறுப்பினர்கள் தலைமை செயலகம் வருகை

வைகோ, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ள நிலையில் துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் தலைமைச் செயலகம் வருகை தந்துள்ளனர்

10:34 (IST)06 Jul 2019
வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர், வைகோ வேட்பு மனு தாக்கல் செய்ய தலைமைச் செயலகம் வந்துள்ளார்.  சட்டப்பேரவை செயலாளரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் வைகோவுடன், திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலினும் தலைமைச் செயலகம் வந்துள்ளார். 

10:06 (IST)06 Jul 2019
8-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க வரும் 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

09:27 (IST)06 Jul 2019
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை வெளியீடு

சென்னையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் . அதில் தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

09:21 (IST)06 Jul 2019
வைகோ வேட்பு மனு தாக்கல்

வருகின்ற 18 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு,சட்டசபை செயலாளரிடம்  இன்று காலை 11 மணிக்கு வைகோ மனு தாக்கல் செய்யவுள்ளார். தி.மு.க.  வேட்பாளர்களான சண்முகம் மற்றும் வில்சனுடன்,  கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க.  சார்பில் வைகோவும் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளார். 

09:11 (IST)06 Jul 2019
மருத்துவ தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொது மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  ஓரிரு நாளில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். 

08:54 (IST)06 Jul 2019
News Today: உதயநிதி சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதன் பிறகே சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். 

08:48 (IST)06 Jul 2019
News in Tamil: வைகோ தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பை மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் வரவேற்றுள்ளார். பழனியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கிய அவர், வைகோவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். 

08:46 (IST)06 Jul 2019
அதிமுக - மாநிலங்களவை வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை இன்று காலை 10.30 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிவிக்கின்றனர்.

Tamil Nadu news today live updates: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்பட வில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது.

Web Title:

Tamil nadu news today live updates politics weather sports entertainment bigg boss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close