Tamil Nadu News Today Updates : உயர் கல்வி நிறுவன வளாகங்களில் இ சிகரெட்டுக்கு தடை: யுஜிசி!

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.78.65-க்கும், டீசல் லிட்டர் ரூ.72.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Jan 16, 2020, 7:12:53 AM

Tamil Nadu news today updates : துக்ளக் இதழில் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் நேற்று கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் குருமூர்த்தி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நேற்று அந்த இதழின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மேலும் படிக்க : முரசொலி வைத்திருந்தால் திமுககாரர்… துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம் – ரஜினி பேச்சு

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வருடன் ரஜினி சந்திப்பு தொடர்பான வீடியோ கீழே

வில்சன் கொலை வழக்கு இருவர் கைது

ஜனவரி 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ.வில்சன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்தில்யே உயிர் இழந்தார். அவரை கொன்றவர்களை தமிழக காவல்துறை தேடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று உடுப்பி ரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

Live Blog
Tamil Nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
20:51 (IST)15 Jan 2020
செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவித்துள்ளது. பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

20:15 (IST)15 Jan 2020
ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ராஜினாமா

ரஷ்யாவின் பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ராஜினாமா செய்துள்ளார். திமித்ரி மெத்வதேவ் தனது ராஜினாமா கடிதத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

19:48 (IST)15 Jan 2020
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 31இல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

18:38 (IST)15 Jan 2020
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தூக்கு தண்டனை உத்தரவை ரத்து செய்ய கோரி மனு

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தூக்கு தண்டனை உத்தரவை ரத்து செய்ய கோரி மனு
முகேஷின் கருணை மனு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு நாளை விசாரணை செய்கிறது.
முகேஷின் மனு தொடர்பாக பதிலளிக்க நிர்பயாவின் பெற்றோருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

17:49 (IST)15 Jan 2020
விஜய்யின் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி டுவிட்டரில் வைரல் ஆனது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

17:14 (IST)15 Jan 2020
வேலூர் இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகினாலும் கவலையில்லை என்று கூறினார். துரைமுருகன் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை? என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

16:42 (IST)15 Jan 2020
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவன வளாகங்களில் இ-சிகரெட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் - யுஜிசி

பல்கலைக்கழகங்கள் மானியக் குழுவான யுஜிசி, அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவன வளாகங்களில் இ-சிகரெட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் இ-சிகரெட்டின் பாதிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

16:38 (IST)15 Jan 2020
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. போட்டியில் 500-க்கு மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

14:55 (IST)15 Jan 2020
மோடியை சந்தித்தார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரவ் சந்திப்பு

அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர். இன்று காலை  டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். 

14:25 (IST)15 Jan 2020
ஜன.22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவது உறுதி இல்லை

நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனு இன்னும் நிலுவையில் இருப்பதால், ஜன.22ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகிகள் தகவல்

14:25 (IST)15 Jan 2020
ஜன.22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவது உறுதி இல்லை

நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனு இன்னும் நிலுவையில் இருப்பதால், ஜன.22ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகிகள் தகவல்

14:23 (IST)15 Jan 2020
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதாக பலரும் சந்தேகித்திருந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று வேலூரில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12:51 (IST)15 Jan 2020
ஐசிசி விருதுகள்

2019ம் ஆண்டில் மிகவும் உத்வேகத்துடன் ஆடிய வீரர் என்ற விருதினை விராட் கோலிக்கு தர முடிவு செய்துள்ளது ஐசிசி. அதே போன்று கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12:51 (IST)15 Jan 2020
ஐசிசி விருதுகள்

2019ம் ஆண்டில் மிகவும் உத்வேகத்துடன் ஆடிய வீரர் என்ற விருதினை விராட் கோலிக்கு தர முடிவு செய்துள்ளது ஐசிசி. அதே போன்று கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11:59 (IST)15 Jan 2020
கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின்

இன்று காலை தூத்துக்குடி எம்.பியும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மகளுமான கனிமொழி மெரினாவில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

11:59 (IST)15 Jan 2020
கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின்

இன்று காலை தூத்துக்குடி எம்.பியும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மகளுமான கனிமொழி மெரினாவில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

11:50 (IST)15 Jan 2020
எடப்பாடியில் முதல்வர்

தென்னிந்திய அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியை துவங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் எடப்பாடியில் இந்த போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை தனியார் மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவினை அவர் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அவர் அறிவிப்பு

11:37 (IST)15 Jan 2020
ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி

பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் விவசாயிகள் சங்கம் சார்பில் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஏ.கே. கண்ணன் என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கினை நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து அறிவித்தது.

11:22 (IST)15 Jan 2020
இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வழங்கப்பட்டது.

11:09 (IST)15 Jan 2020
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 விலை அதிகரிப்பு

சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 280 அதிகரித்து ரூ. 30408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:47 (IST)15 Jan 2020
சபரிமலை மகர ஜோதி தரிசனம்

இன்று மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

10:35 (IST)15 Jan 2020
சேவல்கட்டு போட்டிகள்

கரூர் பகுதியில் அமைந்திருக்கும் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல்கட்டு போட்டிகள் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

10:26 (IST)15 Jan 2020
யாதும் ஊரே யாவரும் கேளிர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி 

10:23 (IST)15 Jan 2020
சென்னை ஆழ்வார்பேட்டையில் பொங்கல் பரிசளித்த முக ஸ்டாலின்

சென்னை ஆழ்வார்பேட்டையில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்க வந்த திமுக தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார் முக ஸ்டாலின்

10:18 (IST)15 Jan 2020
தேசிய ராணுவ தினம் - முப்படைகளின் தளபதி மரியாதை

இன்று தேசிய ராணுவ தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், விமானம், தரைப்படை தளபதிகள் மரியாதை.

10:17 (IST)15 Jan 2020
பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த ரஜினி காந்த்

பொங்கல் தினத்தை ஒட்டி சென்னை போயஸ்கார்டனில் அமைந்திருக்கும் ரஜினியின் இல்லத்தில் குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினி காந்த் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்.

09:36 (IST)15 Jan 2020
ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து

இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வயநாடு எம்.பி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

09:36 (IST)15 Jan 2020
தந்தைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மரியாதை செலுத்தினார்.

09:14 (IST)15 Jan 2020
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மோடி

உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கலை கொண்டாடுகிறது. தமிழில் வாழ்த்துகள் கூறிய மோடி.

09:13 (IST)15 Jan 2020
நீட் தேர்வு எழுத 15,93,452 பேர் விண்ணப்பம்

மருத்துவம் படிக்க நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு எழுத இதுவரை 15,93,452 பேர் இந்தியா முழுவதும் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 27ம் தேதி ஹால் டிக்கெட்டுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விடும். மே 3ம் தேதி நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

09:05 (IST)15 Jan 2020
பவானிசாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணையில் தற்போது நீர் மட்டம் 104.18 அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 32.1 டி.எம்.சி, நீர் வரத்து 386 கன அடி. நீர் வெளியேற்றம் - 2600 கன அடியாக உள்ளது.

09:05 (IST)15 Jan 2020
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக துவங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகள். போட்டியில் பங்கேற்பதற்காக 700 காளைகளும், 730 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் நடைபெறுகிறது.

Tamil Nadu news today updates : இன்று தமிழகம் முழுவதும் கோலகலமாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

பெண்ணின் தாயார் வாரிசுரிமை கோர இயலாது

திருமணமான ஒரு பெண் இறந்துவிட்டால் அவருடைய உடைமைகள் அனைத்தும் அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே போய் சேரும். அப்பெண்ணின் அம்மா அந்த சொத்திற்கு வாரிசாக இயலாது. இந்து திருமண சட்டத்தின் படி திருமணமான ஒரு ஆண் இறந்தால் மட்டுமே அவருடைய சொத்துக்கு அவருடைய அம்மா உரிமை கோர இயலும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Web Title:Tamil nadu news today live updates pongal 2020 jallikattu started at avaniyapuram tn politics tamil nadu weather caa nrc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X