/tamil-ie/media/media_files/uploads/2021/11/Chennai-5-2.jpg)
Tamil Nadu news today live updates: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது முல்லை பெரியாறு அணை. அணைக்கு வரும் நீரின் அளவு 4875 கன அடியாக உள்ளது. தமிழக பகுதியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 2300 கன அடியாக உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய வந்து விட்டது ரோபோ
ட்விட்டர் CEO-வாக இந்திய வம்சாவளி நியமனம்
ட்விட்டரின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ஜாக் டோர்சி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:05 (IST) 30 Nov 2021அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாலர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 21:34 (IST) 30 Nov 2021பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு மருத்துவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டபோது பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச்செல்வனின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- 20:40 (IST) 30 Nov 2021இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
புதிய கோவிட்-19 வகை ஒமிக்ரான் இந்தியாவில் இன்னும் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய மாறுபாடு தொடர்பான உலகளாவிய முன்னேற்றங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளதாகவும், துறைமுகங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் மாண்டவியா கூறினார்.
“ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் ஒமிக்ரான் தொற்று பதிவாகவில்லை. நாங்கள் உடனடியாக சந்தேகத்திற்கிடமான தொற்றுகளை சரிபார்த்து, மரபணு வரிசைமுறையை நடத்துகிறோம்.அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் கூறினார்.
- 20:17 (IST) 30 Nov 20214 வழிச்சாலைகளாக மாறும் 2200 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள்; நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
அடுத்த 10 ஆண்டுகளில் 2200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்ற தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.
- 20:14 (IST) 30 Nov 2021ரூ. 2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் வழக்கு; பொறியாளர் ஷோபனா கைது
வேலூரில் ரூ. 2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் தொழில்நுட்ப கல்வி இயக்கக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கைது செய்யபட்டுள்ளார்.
- 18:51 (IST) 30 Nov 2021முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் துரை முருகன் அறிக்கை
பெரியாறு அணையின் நீர்மட்டம் 4வது முறையாக 142 அடியை எட்டிய நிலையில், அமைச்சர் துரை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பலப்படுத்தும் பணிகளை முடித்த பின்பு, நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம். அதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- 18:48 (IST) 30 Nov 2021கோயம்பேடு சந்தையில் தக்காளிக்கு தற்காலிக சந்தை ஒதுக்கீடு
சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளிக்கு தற்காலிக சந்தை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தைக் குழு மற்றும் சி.எம்.டி.ஏ தரப்பு தெரிவித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளிகளை இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 18:36 (IST) 30 Nov 2021கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை தீவிரத்தை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 18:03 (IST) 30 Nov 2021விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது - ஐகோர்ட் உத்தரவு
விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது; கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- 16:53 (IST) 30 Nov 2021களங்கம் ஏற்படுத்தவே வீடியோ தவறாக சித்தரிப்பு - திருமாவளவன்
டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன்; நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்; அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை.என் மீதும், என் இயக்கம் மீதும் களங்கம் ஏற்படுத்தவே வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.நான் தங்கி இருப்பது அறக்கட்டளை, வீடு அல்ல; மழை நேரங்களில் அந்த இடத்தில் சாக்கடை சூழ்ந்து கொள்ளும் என திருமாவளவன் எம்.பி சர்ச்சை வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
- 15:53 (IST) 30 Nov 2021காவல் துறையில் 5 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்
செங்கல்பட்டு எஸ்.பி விஜயகுமார் சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக இடமாற்றம். சென்னை எஸ்பிசிஐடி எஸ்பி அரவிந்தன் செங்கல்பட்டு எஸ்.பியாக நியமனம்
- 15:27 (IST) 30 Nov 2021எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
- 15:27 (IST) 30 Nov 2021எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
- 15:24 (IST) 30 Nov 2021எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
- 15:02 (IST) 30 Nov 2021முறைகேடு வழக்கு - உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை
தூத்துக்குடி - நெல்லை சாலையில் வல்லநாடு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்குகள் பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பதை விட, பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தான் முக்கியம் என்றும் 90 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை எனில் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
- 14:40 (IST) 30 Nov 2021கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் ஒரு சில இடங்களில் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
- 14:37 (IST) 30 Nov 2021மாநிலங்களவை ஒத்திவைப்பு
எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
- 14:01 (IST) 30 Nov 2021ஒமைக்ரான் வைரஸ் தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை
டெல்டா வகை கொரோனா பாதிப்பு மட்டுமே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் மேலும் 4 விமான நிலையங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 13:57 (IST) 30 Nov 2021பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் சந்திப்பு
டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்து பேசினார்.
- 13:24 (IST) 30 Nov 20213 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை - மக்களவையில் மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2018, 2019 ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020-ம் ஆண்டில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 13:17 (IST) 30 Nov 2021மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்வீட்
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரினால் உத்தரவை ரத்து செய்வதாக மாநிலங்களவை தலைவர் கூறிய நிலையில், மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
- 13:17 (IST) 30 Nov 2021கோயம்பேட்டில் தக்காளி வாகனங்களுக்கு இடம் ஒதுக்காததால் உயர்நீதிமன்றம் அதிருப்தி
கோயம்பேடு சந்தையில் தக்காளி வாகனங்களுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை இடம் ஒதுக்கப்படாததால் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
- 13:02 (IST) 30 Nov 2021மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்வீட்
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரினால் உத்தரவை ரத்து செய்வதாக மாநிலங்களவை தலைவர் கூறிய நிலையில், மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
- 13:02 (IST) 30 Nov 2021தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாயும் கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
- 13:00 (IST) 30 Nov 2021தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாயும் கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
- 12:46 (IST) 30 Nov 2021இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை - மன்சூக் மாண்டவியா
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், ஒமிக்ரான் வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்
- 12:44 (IST) 30 Nov 2021ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை- அமைச்சர் துரைமுருகன்
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தற்போதைக்கு நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்
- 12:26 (IST) 30 Nov 2021பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பாதுகாக்க ரூ.2.48 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பாதுகாக்க ரூ.2.48 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளதாக, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினிகுமார் தெரிவித்துள்ளார்.
- 12:12 (IST) 30 Nov 2021புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு என்றும், தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:08 (IST) 30 Nov 2021பாலியல் வன்கொடுமை – மதுரை காவலர் சஸ்பெண்ட்
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை திலகர் திடல் காவல் நிலைய குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் முருகன், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
- 12:00 (IST) 30 Nov 2021நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை மாநிலங்களவை தலைவர் ரத்து செய்ய மறுத்ததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்
- 11:50 (IST) 30 Nov 2021சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்
- 11:47 (IST) 30 Nov 2021எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை மாநிலங்களவை தலைவர் ரத்து செய்ய மறுத்ததால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை மாநிலங்களவை தலைவர் ரத்து செய்ய மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்
- 11:44 (IST) 30 Nov 2021மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 11:43 (IST) 30 Nov 2021தமிழகத்தில் மழைப்பாதிப்புகளை மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் – ஜி.கே.வாசான்
தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி., ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
- 11:41 (IST) 30 Nov 2021சஸ்பெண்ட் முடிவை நான் எடுக்கவில்லை – வெங்கையா நாயுடு
மாநிலங்களவை தலைவரான நான் சஸ்பெண்ட் முடிவை எடுக்கவில்லை. ஆக.ஸ்ட் 10-ல் நடந்த நிகழ்வின் வீடியோவை பார்த்துவிட்டு சொன்னால் பரிசீலிக்க தயார் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்
- 11:38 (IST) 30 Nov 2021ஆறுமுகசாமி ஆணையத்துக்கான தடையை நீக்க கோரிய மனு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
- 11:24 (IST) 30 Nov 202112 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ஜனநாயகமற்ற செயல்
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு ஜனநாயகமற்ற செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 10:57 (IST) 30 Nov 2021சென்னையில் இயல்பைக் காட்டிலும் 843% கூடுதல் மழை - வானிலை ஆய்வு மையம்
மதுரை மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கூடுதலாக இந்த ஆண்டு மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்திருப்பதாகவும் சென்னையில் மட்டும் 83% கூடுதலாக மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 10:48 (IST) 30 Nov 2021மினி க்ளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடுங்கள் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 2 ஆயிரம் அம்மா கிளினிக்குகளை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
- 10:12 (IST) 30 Nov 2021ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம்
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதலாக 500 சதுர அடி இடத்தை சென்னை, எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் ஒதுக்கியது தமிழக அரசு
- 10:10 (IST) 30 Nov 2021தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 குறைந்து ரூ. 36,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,515 ஆக உள்ளது.
- 09:50 (IST) 30 Nov 2021வேலூர் நில அதிர்வுக்கு காரணம் என்ன?
வேலூரில் நேற்று அதிகாலை 4.17 மணி அளவில் 3.6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணம் என்ன என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி வினீத் குமார் கேலாட் அறிவித்துள்ளார். பாலாற்றில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு மற்றும் அதிக மழை காரணமாக வேலூரில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கருத்து
- 09:47 (IST) 30 Nov 2021நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவி ஏற்க உள்ளனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்த வழி வகை செய்யும் மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
- 09:39 (IST) 30 Nov 2021செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
சென்னை செம்மஞ்சேரியில் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
- 09:19 (IST) 30 Nov 2021தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு, கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 09:12 (IST) 30 Nov 2021தொடர் கனமழையால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொடைக்கானல் - பழனி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 08:52 (IST) 30 Nov 2021ஒமைக்ரான் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை ஒமைக்ரான் எளிதில் தாக்கலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது
- 08:46 (IST) 30 Nov 2021மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை இன்று துவங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவெற்றியூர் மெட்ரோ நிலையங்களில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- 08:16 (IST) 30 Nov 2021சீர்மரபினர் மாணவர்களின் பெற்றோர்களுக்கான வருமான வரம்பு உயர்த்தி அரசாணை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகையை பெற பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 08:08 (IST) 30 Nov 2021நாளை முதல் சென்னையில் மழை குறையும்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை பெய்யும் கனமழையை தொடர்ந்து மழைப்பொழிவு குறையத் துவங்கும் என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
One last spell remains today to tomorrow morning for KTCC (Chennai and 100 kms) and then rain reduces drastically from tomorrow noon
Western interior & south TN will get rains from the pull effect. Coimbatore, Tiruppur, Erode will join today. Tuty & other districts will see rains pic.twitter.com/QR6eB8OPO0
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 30, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.