Tamil nadu news today updates : தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில், சட்டம் – ஒழுங்கை கட்டுப்படுத்த, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், போராட்டங்களை கண்காணிக்க, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்ட, 12 பேர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை துாண்டி விடுவோரை கண்டறிந்து, அவர்களை சிறையில் தள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.
உலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசித்து வருகிறார்,” என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சாப விமோசனம் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என தி.மு.க.,வினர் கவலைப்படுகின்றனர்.ரஜினி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மிக அரசியலே அவரது திட்டம். இவ்வாறு, தமிழருவிமணியன் பேசினார்.
Tamil nadu news today updates : குரூப் - 4' தேர்விற்கான விடைகளை தயாரிக்கும் வகையில், வினாத்தாள் முன்கூட்டியே, 'லீக்' ஆனது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் லீக் ஆனது எப்படி என்றும், வினாத்தாள் திருடப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும், போலீசாரும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாளை தயாரித்தவர்களே, லீக் செய்தனரா; வினாத்தாள் இறுதி செய்யப்பட்ட இடத்தில் லீக் ஆனதா; அச்சகத்திலிருந்து லீக் ஆனதா; தேர்வு மையத்தில் இருந்து திருடப்பட்டதா; வாகனத்தில் வினாத்தாளை எடுத்து செல்லும் போது திருடப்பட்டதா என, பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
டில்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர்மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் அர்விந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Web Title:Tamil nadu news today live updates rajinikanth anti caa protests tnpsc scam modi arvind kejriwal
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் வரும் 19-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை உள்ளிட்ட பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருந்த விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது
மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம் முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள வரலாற்றுக் கூடத்தில் தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு எதிரி காங்கிரஸ்காரர்கள் தான். காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமரிசனம் செய்யும் சீமான், வைகோ போன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், உள்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார்.
என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்
அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.
தேர்தல் வரும்போது நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என சட்டத்துறைஅமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக தமிழக அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
தர்பார் பட விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையின்றி ஜல்லிக்கட்டு நடத்த இயலுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களின் பட்டியலில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்த்ததை எதிர்த்த வழக்கில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கன்னியாகுமரி அருகே 12 வயது சிறுவன் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டி சுருளி ஆண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 749 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். போட்டியின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் ஆர்வமுடன் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவு. பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4ஆம் தேதிகளில் ஆஜராக உத்தரவு
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு. தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
- முதல்வர் பழனிசாமி
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு.
விசாரணைக்கு தடை கோரிய தினகரனின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.30ம் தேதிக்கு ஒத்திவைப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்.
தஞ்சாவூர் பெரியகோயில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களின் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவில் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமை செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக அதிசயமாக அறிவிக்க வலியுறுத்தி ஆதரவு திரட்ட முதல் கட்டமாக இணையத்தளத்தில் மூலம் வாக்கெடுப்பு நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் உலக அதிசய குழுவை கோயிலுக்கு அழைத்து வந்து பார்வையிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் வசித்துவரும் மாரியப்பன் என்ற மீனவரே தாக்கப்பட்டவர். 5 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ள மாரியப்பன், நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அவருடன் சேர்த்து 11 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர். விசாரணைக்கு பிறகு நீரியல் துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற இலங்கை செய்தியாளர்களிடம், தம்மை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிவிட்டதாகவும், இதனால் தமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். தாம் தாக்கப்பட்டது குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினர் மிரட்டுவதாகவும் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றியதற்கு இருந்த நியாயமான காரணங்களைப் போல, வேளாண் கல்லூரியை ஏற்று நடத்தவும் காரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிக உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், கல்வி தரத்தின் நிலை மோசமடைந்து வருவதாகவும், வேளாண்மை ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசு ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
குரூப் 2 தேர்வு முறைகேடு - 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில், 2011-ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என தகவல். பல்வேறு பதவிகளில் இருக்கும் 12 பேரும் ஒரே கிராமத்தில் இருந்து தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
12 பேரும், 19-ஆம் தேதி கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர். இருப்பினும் உயர்நீதிமன்ற ஒப்புதல் பெறாமல் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தினர். நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, பிப்ரவரி 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் இனி நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை; தனியாக நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு இனி இல்லை
- ஜிப்மர் நிர்வாகம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சியே வந்துவிட்டது; அரசு தன் கடமையை செய்ய வேண்டும்
- பட்ஜெட் மீதான விவாதத்தில் காங். எம்.எல்.ஏ. விஜயதரணி பேச்சு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு. தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது. ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என வினவினார். மேலும், தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் முதல்வர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அப்போது பதில் கூறிய எதிர்க்கட்சித்துணை தலைவர் துரைமுருகன், அன்றைய தினம், மத்திய அரசும் மாநில அரசும் எதிரும், புதிருமாக இருந்ததாக கூறினார்.
மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 3 வருடங்களில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூ.643.84 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இந்தத் தொகையானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகையை விட 29 மடங்கு அதிகம் ஆகும்.
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தர வேண்டும் என சட்டசபையில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் இதுவரையில் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ தங்கம், தனுஷ்கோடி அருகே பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டில்லி மாநகராட்சியில் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை பதிவிற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஆளாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பெயர் சேர்க்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு ஆகியோரின் பெயர்களும், அவர்களை குறித்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. துவக்க நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கழக கமிஷனர் இப்பணியை துவக்கி வைக்க உள்ளார். அரசின் 3 துறைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஜனாதிபதி பற்றி கணக்கெடுப்பு உள்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிமூன் அன்சாரி எம்எல்ஏ, கண்டன பதாகையுடன் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.73ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது.
அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது. இன்று நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது.