Tamil nadu news today updates : கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தும் வகையிலும், அதன் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், வங்கி கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும், 1,540 கூட்டுறவு வங்கிகளில், 8.60 கோடி பேர், ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.வாடிக்கையாளர்களின் முதலீடுகளை பாதுகாக்கும் வகையில், காப்பீட்டு தொகை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.'கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.இதன் மூலம், வர்த்தக வங்கிகள் போல, கூட்டுறவு வங்கிகளின் வங்கி நடவடிக்கைகள் அனைத்தும், ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ' தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் ஒரு போலீஸ்காரர், வணிக வரித் துறை உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் பிடியில் சிக்காமல், புரோக்கர் ஜெயகுமார், தலைமறைவாக உள்ளார். அவரது மனைவியும் வீட்டில் இல்லை. இதனால், இருவரும் வெளிமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், மூன்று தனிப்படை போலீசார், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், தீவிரமாக தேடி வருகின்றனர்.
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன: விஜயை விசாரித்த ஐ.டி அதிகாரி தகவல்.
Finally, நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன: விஜயை விசாரித்த ஐ.டி அதிகாரி தகவல் @actorvijay #ITRaid #Vijay @News18TamilNadu
— Mahalingam Ponnusamy (@mahajournalist) February 6, 2020
மெரினாவில் கலங்கரைவிளக்கம்-பட்டினப்பாக்கம் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் பிப்.21 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்கிறது
குவார்ட்டர் - ரூ.10,ஆஃப் - ரூ.20, ஃபுல் - ரூ. 40ஆக உயர்வு.
பீரின் விலை ரூ.10 உயர்த்தப்படும் என அறிவிப்பு.
கடைசியாக 2017 அக்டோபரில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது.
பீரின் விலை 2014-ல் உயர்த்தப்பட்டது.
என்பிஆர் அரசின் வழக்கமான நடைமுறை, இதை முந்தைய அரசும் மேற்கொண்டது, வாக்கு அரசியலுக்காக இது குறித்து தவறான செய்திகளை பரப்புகின்றனர். கேரளாவில் சிஏஏ போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்துள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பினராயி விஜயன் எச்சரித்திருந்தார். அதே போன்று டெல்லியிலும், நாட்டின் பிற பகுதியிலும் நடக்கும் போது அதை ஆதரிப்பது ஏன்? - பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் கேள்வி
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதில், பத்திரப் பதிவு துறையில் பணிபுரிந்த 6 பேர் சிக்கினர். இதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலக உதவியாளர்களான ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி. சோதனை போன்ற அச்சுறுத்தலுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது என்றும் வருமான வரிச் சோதனை மூலம் விஜய்யின் குரலை ஒடுக்கலாம் என பாஜக கருதுமேயானால் அது பகல் கனவாக முடியும் என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி. சோதனை போன்ற அச்சுறுத்தலுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது என்றும் வருமான வரிச் சோதனை மூலம் விஜய்யின் குரலை ஒடுக்கலாம் என பாஜக கருதுமேயானால் அது பகல் கனவாக முடியும் என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க 2020-21ம் கல்வியாண்டில் 23 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 1069 தொலைதூர வாழ்விடங்கள் மற்றும் 124 ஊரகப்பகுதிகளில் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் மெய்க்காவலர்களின் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிடி போலீசார் நடத்திய விசாரணையில், சிக்கிய பத்திரப்பதிவுத் துறை உதவியாளர்களான ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன், இரண்டு தேர்களில் பவனி வர உள்ளனர். இதனால், அன்றைய தினம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிட்ம் பேசினார். அப்போது, “இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று கூறும் ரஜினி, அவர்கள் மீது தாக்குதல் நடந்த போது ஏங்கே போனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், அந்தப் படத்தின் பைனான்சியர், பிரபல நடிகர் ஆகியோரின் இடங்களில் நேற்று நடத்திய வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டாத பணம் ரூ.77 கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அனைத்தும் அந்தப் படத்தின் சினிமா பைனான்ஸியருடையது என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரையில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல்
பிகில் படம் ரூ.300 கோடி வசூல் ஈட்டியதன் அடிப்படையில் சோதனை என வருமானவரிதுறை தகவல்.
பிகில் படத் தயாரிப்புக்கு நிதி அளித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை
| #ITRaid | #IncomeTax | #AnbuChezhiyan pic.twitter.com/qfeCEKxk43
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 6, 2020
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமைச் செயலக ஊழியர் கவிதா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வரும் 13-ம் தேதி சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும், விஜய் வீட்டில் "குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை" என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா தாயாரிப்பாளரான அன்புச்செழியன் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.65 கோடி பறிமுதல் செய்துள்ளகாக கூறப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9,10ம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 3ஆண்டுகளில் 100% அதிகரிப்பு என்ற மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கசென்றிருந்த திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அங்கிருந்த பழங்குடியின சிறுவனை தனது காலணியை கலட்டி விடுமாறு கட்டளையிட்டார். இந்த வீடியோ அனைவரின் கண்டனத்தை பெற்றது.
இந்நிலையில், சிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். தனது பேரன் போன்று இருந்ததால் அந்த சிறுவனை காலணியை கலட்டி விட கோரிக்கை விடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற ரஜினியின் பேச்சு குறித்து ஸ்டாலின் இந்த கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கிரிராஜ் சிங், ஷாஹீன் பாக், தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பிறப்பிடமாக உள்ளது. அங்குதான் நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் கைதாவது உறுதியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights