Advertisment

Tamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும்

Chennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும்

Tamil Nadu news today : இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, உலகம், மற்றும் உலக தலைவர்களின் முக்கிய அறிக்கைகள் ஆகியவற்றை நீங்கள் இந்த செய்தித் தொகுப்பில் படித்துக் கொள்ளலாம். இன்று மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி.

Advertisment

இங்கிலாந்து, மான்செஸ்டரில் இருக்கும் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் இந்த போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நான்கு நாட்கள் அங்கு மழை இருக்கும் என வானிலை அறிக்கைகள் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா - நியூசிலாந்து போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டரில் நிலவும் காலநிலை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏம்மாற்றத்தை கொடுத்துள்ளது.

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் இன்னும் முற்றிலுமாக முடியவில்லை. மேலும் பருவமழை துவங்கி 8 நாட்கள் ஆன போதிலும் சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. தண்ணீர் இல்லாமல் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events and more : இன்று சென்னை மற்றும் தமிழகமெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை இங்கு படிக்கலாம்.



























Highlights

    13:09 (IST)16 Jun 2019

    மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் - மத்திய சுகாதார அமைச்சகம்

    புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. அதில் மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதில் அடுத்த ஆண்டு முதல் மருத்துவமனை பட்டப்படிப்பு உலகத்தரம் வாய்ந்ததாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    12:23 (IST)16 Jun 2019

    Hydro Carbon Plan : Fasting Protest

    காவிரி டெல்டா பாசனப்பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் சிங்காரவேலர் சிலை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    11:43 (IST)16 Jun 2019

    Parliament Session 2019 : டெல்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

    நாளை நாடாளுமன்ற கூட்டம் துவங்க உள்ளது. பாஜகவின் இரண்டாவது ஆட்சிப் பொறுப்பில் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டடத்தொடர் என்பதால் அதனை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சபாநாயகருக்கான தேர்தல்கள் நாளை இருக்கலாம். 21ம் தேதி மாநிலங்களவையும் துவங்குகிறாது.

    11:18 (IST)16 Jun 2019

    ஓ. ராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

    ரேசன் முறைகேடு குறித்து ஓ.ராஜா மீது புகார் அளித்தார் நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் துரை என்பவர். அவரை மிரட்டியதாக துணை முதல்வரின் தம்பியான ஓ.ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

    10:56 (IST)16 Jun 2019

    திருமாவளவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

    மே மாதம் 18ம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவு தினக் கூட்டத்தில் காந்தியை குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியதாக திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.  இந்து முன்னணி இயக்கத்தின் தலைவர் வி.ஜே. நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் தொகுதி எம்.பி, மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

    10:17 (IST)16 Jun 2019

    Miss India 2019 : ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவிற்கு பட்டம்

    2019ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது மிக்க இளம் பெண் இந்த பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்பார்

    10:17 (IST)16 Jun 2019

    Miss India 2019 : ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவிற்கு பட்டம்

    2019ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது மிக்க இளம் பெண் இந்த பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்பார்

    10:17 (IST)16 Jun 2019

    Miss India 2019 : ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவிற்கு பட்டம்

    2019ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது மிக்க இளம் பெண் இந்த பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்பார். 

    09:45 (IST)16 Jun 2019

    ரயில்வே முக்கிய அறிவிப்பு

    தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரைக்கு இடையேயான சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்படுள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்களும் மாற்றுப்பாதையில் இயங்கும் என்றும் அறிவித்துள்ளது.  திங்கள் கிழமை மீண்டும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இடையேயான சேவை அதிகாலையிலேயே துவங்கிவிடும்.

    09:43 (IST)16 Jun 2019

    Javadhu hills summer festival 2019

    22வது ஜவ்வாது மலை கோடை விழா 2 நாட்கள் கொண்டாட்டமாக ஆரம்பமாகியுள்ளது. அமைச்சர் எம்.சி.சம்பத் இவ்விழாவினை துவக்கி வைத்தார். 

    09:42 (IST)16 Jun 2019

    செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

    இன்று காலை 11 மணியில் இருந்து செங்கல்பட்டு மற்றும் சென்னைக் கடற்கரைக்கு இடையேயான மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது ரயில்வே.  கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூருக்கு இடையே இருக்கும் உயர்மட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், ஒத்திவாக்கம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    09:34 (IST)16 Jun 2019

    22nd Javadhu Hills Summer Festival : எம்.சி. சம்பத் துவங்கி வைத்தார்

    திருவண்ணாமலை மாவட்டடத்தில் அமைந்துள்ளது ஜவ்வாது மலை. அங்கிருக்கும் ஜமுனாமரத்தூரில் கோடை விழா வருடாவருடம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 22வது கோடை விழாவை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர். 2 நாட்கள் இந்த கோடை விழா நடைபெறும்.

    09:30 (IST)16 Jun 2019

    தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

    மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடலில் மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த வருடம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான இந்த 61 நாட்களில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று அதிகாலை கடலுக்குள் சென்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    Tamil Nadu news today live updates : சென்னையில் வேறெப்போதும் நிலவாத வறண்ட வானிலை இப்போது காணப்படுகிறது. சென்னையில் மழை பெய்து கிட்டத்தட்ட 200 நாட்கள் ஆகப் போகின்ற நிலையில், சுற்று வட்டாரங்களில் அமைந்திருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை.

    ஐ.டி. நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என தண்ணீர் தேவை மிக அதிகமாக உள்ள இடங்களில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. மேலும் படிக்க : இன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை ?

    Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment