Tamil Nadu news today updates : இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் வழக்கம் போல் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் உற்சாகமாக சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர்.
பல தலைவர்களும் பொதுமக்களுக்கு தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே அறிந்து கொள்ளலாம்
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: சாதிய அடையாளங்களுடன் பள்ளிகளில் கயிறு கட்டக்கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் சுற்றறிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்: “ரஜினி பிரதமர் மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல பேசி வருகிறார். ரஜினி பேசுவது உண்மைக்கு புறம்பானது. ரஜினி என்ன நோக்கத்துக்காக இது போன்று பேசுகிறார் என்பது தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னை அரசியலாகிவிட்ட நிலையில் அதைப் பற்றி பேசுவதே அரசியல்தான்” என்று கூறினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி: “காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது. அதை மோடியும் அமித்ஷாவு ராஜதந்திர நடவடிக்கையால் மாற்றியுள்ளார்கள். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்று கூறினார்.
ரஜினி கூறியது பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினியின் கருத்து சரியானது. நல்லக் கருத்து. உறுதியான நெஞ்சத்தோடு தெரிவித்துள்ளார் என்று அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இவ்விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
காஷ்மீர் விவகாரத்தால் எல்லையில் பதட்டம் நிலவி வருகின்ற சமயத்தில், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. சுதந்தரதினத்தின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி செய்துள்ளனர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.
திருநெல்வேலி கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியினர் தங்கள் வீட்டில் திருட வந்த திருடர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் இன்று சிறப்பு விருதினை வழங்கினார் முதல்வர். விருதுடன் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
48 நாட்களுக்கு பிறகு மீண்டும் அத்தி வரதர் சிலை தரிசனத்திற்கு வைக்க கூடாது என்று ஆகம விதிகள் ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகின்றது. தினமும் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்வதால் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை
#MSDhoni celebrating in independence day in army uniform @msdhoni pic.twitter.com/V0OhaUFfmC
— simbu Rakesh (@STRRakesh1) August 15, 2019
Lieutenant Colonel with spending quality time with soldiers at army hospital 🇮🇳❤️#MSDhoni #Dhoni #ParaMSD pic.twitter.com/0DYeHktHxw
— Dhoni Raina Team (@dhoniraina_team) August 14, 2019
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் மிகச் சிறந்த முறையில் கொண்டாடி வருகிறார்.
லடாக்கில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் ஜவான்களுடன் நேரத்தை செலவிடுவது போன்ற புகைப்படமும் , வீடியோக்களும் இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 15, 2019
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழக மக்கள் வழங்கவேண்டுமென்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிவாரன பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிவைத்தர் . இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேரள முதல்வர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.
அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay
— M.K.Stalin (@mkstalin) August 15, 2019
இந்நாளில் விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூறுவோம். ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் தியாகிகளின் வழியில் நாமும் செல்வோம் என்றார்.
தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெருங்குடி ஏரி பாதுகாக்கப்படும் என்று முதல்வர் சுதந்திர பேச்சில் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை அத்திவரதர் கோயிலில் தான் செய்யும் கடமைகளையும், தனக்கு இருக்கும் பொறுப்புகளையும் தொகுத்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. காஞ்சி ஆட்சியருக்கு இந்த வீடியோ பதில் சொல்வதாய் உள்ளது என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய புவிசார் குறியீடு ஆணையம் உலக பிரசித்திப் பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights