scorecardresearch

Tamil News Today: இங்கிலாந்து டெஸ்ட்; ரோகித் சர்மா அபார சதம்

Latest Tamil News : ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், எஞ்சியிருந்த பஞ்ச்ஷிர் மாகாணமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

Tamil News Update : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மேல் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டி

டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் பிரமோத் பகத் அரையிறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் ஃபுஜிஹாராவை 21-11, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ 99.08 –க்கு டீசல் விலை ரூ 93.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.  முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சின்போது உமேஷ்யாதவ் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்ககோரி மனு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 18-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க்கோரி தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் மேலும் 6 மாதகாலம் அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:53 (IST) 4 Sep 2021
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் : அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தெர்தல் வரும் 18-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

20:00 (IST) 4 Sep 2021
4-வது டெஸ்ட் போட்டி : ரோகித் அபார சதம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா 209 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருன் 101 ரன்கள் எடுத்துள்ளார்.

19:29 (IST) 4 Sep 2021
ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டம் – பிரதமரிடம் விரைவில் கோரிக்கை

ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாவை கொண்டு வர பிரதமரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

18:57 (IST) 4 Sep 2021
பிரமோத் பகத்-க்கு பிரதமர் பாராட்டு

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, ஒட்டுமொத்த தேசத்தின் இதயங்களை வென்றுள்ளார் பிரமோத் பகத் என புகழாரம் சூட்டியுள்ளார்.

18:48 (IST) 4 Sep 2021
திருப்பதி ஏழுமலையான் கோவில் பொது தரிசனத்திற்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோவில் பொது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி சென்ற பக்கதர்கள் சிவன் கோவிலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். மேலும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கதகவாவது பக்தர்களை திருப்பதியில் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

16:37 (IST) 4 Sep 2021
பாரா ஒலிம்பிக்; பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீர‌ர் மனோஜ் சர்கார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர‌ர் மனோஜ் சர்கார் வெண்கலம் வென்றுள்ளார். தற்போது வரை இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது

16:27 (IST) 4 Sep 2021
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4 ஆவது தங்கம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர‌ர் பிரமோத் பகத் தங்கம் வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 4 ஆவது தங்கம் ஆகும்.

16:08 (IST) 4 Sep 2021
விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க முயன்றால் சட்டப்படி நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர்

தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

15:48 (IST) 4 Sep 2021
சென்னை காவல் ஆணையருக்கு நடிகர் ஆர்யா நன்றி

நடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கில், ஆர்யாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். உண்மை குற்றவாளிகளை கண்டறிந்ததற்காக என்னை சந்தித்து ஆர்யா நன்றி தெரிவித்தார் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

15:08 (IST) 4 Sep 2021
கொடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜ் உறவினர்களிடம் விசாரணை

கொடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பந்தய சாலையில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

14:56 (IST) 4 Sep 2021
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்யும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

14:46 (IST) 4 Sep 2021
“மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும்” – அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

“தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத் தளம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும்.” என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

14:11 (IST) 4 Sep 2021
கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணமில்லை

தமிழக கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது; மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயிலில் திருமணம் நடத்த கட்டணம் இல்லை போன்ற அறிவிப்புகளை சட்டப்பேரவையில் இந்து அறநிலைய துறை அமைச்சகர் சேகர் பாபு அறிவித்தார்.

13:48 (IST) 4 Sep 2021
“அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் ரூ.1,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள இந்து அறநிலைய துறை அமைச்சகர் சேகர் பாபு, “அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ1,000ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

13:31 (IST) 4 Sep 2021
பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த யோகி பாபு!

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் காமெடி நடிகர் யோகி பாபு, தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

13:16 (IST) 4 Sep 2021
‘பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி’ – புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாட வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

12:36 (IST) 4 Sep 2021
நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

12:36 (IST) 4 Sep 2021
கோவில் யானைகளின் உடல்நலன்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:11 (IST) 4 Sep 2021
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை

ஒன்றிய அரசின் உள்த்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதாக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.

12:08 (IST) 4 Sep 2021
இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

12:01 (IST) 4 Sep 2021
அருங்காட்சியகங்களுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

3 மாவட்ட அருங்காட்சியங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும் அருங்காட்சியகத்தை மாற்றி அமைக்கவும் 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

11:47 (IST) 4 Sep 2021
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கங்கனா ரனாவத்

தலைவி படத்தின் ப்ரோமோசனுக்காக சென்னை வந்துள்ள நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். அதன் காட்சிகள் இதோ

Actress #kanganaranaut pays tributes at former Tamil Nadu Chief Minister J Jayalalithaa's memorial in the Marina beach. She is in Chennai for #thalaivii movie promotions. @IndianExpress pic.twitter.com/7Uy3XTSODG— Janardhan Koushik (@koushiktweets) September 4, 2021
11:42 (IST) 4 Sep 2021
தொல்லியல் அகழ்வாய்வு 30ம் தேதியோடு முடிவு

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 இடங்களில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழ்வாய்வு பணிகள் வருகின்ற 30ன் தேதியுடன் நிறைவடையும் என்று கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

11:39 (IST) 4 Sep 2021
தஞ்சையில் அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா

கடந்த 1ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், 914 மாணவிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பரிசோதனை முடிவில் 3ஆம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

11:36 (IST) 4 Sep 2021
தொல்லியல் அகழ்வாய்வு

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 இடங்களில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழ்வாய்வு பணிகள் வருகின்ற 30ன் தேதியுடன் நிறைவடையும் என்று கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

11:14 (IST) 4 Sep 2021
நிலங்கள் மீட்பு

ரூ. 641 கோடி மதிப்பிலான 203 ஏக்கர் வேளாண் நிலங்கள் மற்றும் 170 கிரவுண்ட் காலி மனைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:13 (IST) 4 Sep 2021
திங்கள் கிழமைக்கு அனைத்துக் கட்சி கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக நாளை மறுநாள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

10:41 (IST) 4 Sep 2021
மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்க- பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

10:39 (IST) 4 Sep 2021
பஞ்சு வரி ரத்து

நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1 சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நுழைவு வரி மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

10:01 (IST) 4 Sep 2021
கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பள்ளி மாணவிகள் 5 பேர், கல்லூரி மாணவி ஒருவர், 2 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:56 (IST) 4 Sep 2021
பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவுக்கு தங்கம்,வெள்ளி

பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்கள் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் மனீஷ் நார்வால் தங்கப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் சிங்கராஜ் அதானா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

09:07 (IST) 4 Sep 2021
பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் : இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் சிங்ராஜ், மணீஷ் ஆகியோர் இறுதிபோட்டிக்கு தகுதி தகுதி பெற்றுள்ளனர்.

08:48 (IST) 4 Sep 2021
போதை பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் விசாரணை

போதை பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், இந்த விசாரணையில், ஹவாலா மோடி, போதை பொருள் கும்பல் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

08:46 (IST) 4 Sep 2021
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்திய வீரர் மனோஜ் சர்கார் தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்கார் பிரிட்டன் வீரர் டேனியலிடம் 8-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

08:43 (IST) 4 Sep 2021
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்றும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி மெற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள அமைச்சர் கே.என்.நேரு நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்நத்தப்படும் என்றும் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Web Title: Tamil nadu news today live updates tamilnadu weather report tamilnadu assembly update