Tamil Nadu news today live updates: இன்று நரேந்திர மோடி ராஞ்சியில் இருந்து விவசாயிகளுக்கான பிரதமர்-கிசான் மான் தன் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3000 கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன்களின் டிவைஸ்களும் சிறப்பம்சங்களும்
பொங்கல் பண்டிகைக்கு, ரயிலில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.ரயிலில் பயணம் செய்ய, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளதன் காரணமாக, முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் "காஷ்மீர் தொடர்பான சர்தார் வல்லபாய் படேலின் வலியை குஜராத்தின் மற்றொரு மகனாக இருக்கும் நரேந்திர மோடி நீக்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகள், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரங்கள் தெரிந்துக் கொள்ள கீழே பின் தொடருங்கள்.
அசோக் லேலண்ட் நிறுவனம் எண்ணூர் யூனிட் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் 5 நாட்கள் கட்டாயவிடுப்பு அளித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் எண்ணூர் யூனிட் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் 5 நாட்கள் கட்டாயவிடுப்பு அளித்துள்ளது.#SunNews #AshokLeyland #EconomicSlowdown #leave #Chennai pic.twitter.com/t0hfq8x73w
— Sun News (@sunnewstamil) September 12, 2019
கோவையில் வட மாநில இளைஞர் தங்கியிருந்த வீட்டிலிருந்து, இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுக்ராவார்பேட்டையில் நேற்று முன்தினம் வட மாநில இளைஞர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் துருப்பிடித்த நிலையில் சுமார் 30 சென்டி மீட்டர் நீளமுள்ள துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்து ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த ஆய்வாளர் செந்தில்குமாரிடம், ஆணையாளர் சுமித்சரண், விசாரணை நடத்தினார். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேரந்த இளைஞர் பவானிசிங் தங்கியிருந்த அறையிலிருந்து சுமார் 13 அங்குலம் நீளமுள்ள மற்றொரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? https://t.co/nyNxhpGmkf
— M.K.Stalin (@mkstalin) September 12, 2019
பராமரிப்பு பணிகளுக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது ரிசர்வ் வங்கி சுரங்கபாதை.
பாரிமுனையிலிருந்து தலைமை செயலகம் செல்ல, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதையின் அணுகு சாலையில் சென்று, வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி பாலம், போர் நினைவு சின்னம் வழியாக செல்லாலாம்...
செப்டம்பர் 14 முதல் செயல்பாட்டுக்கு வருமென சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
Its called rumours !
— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) September 12, 2019
தோனிஓய்வு பெறுவதாக, அதை இன்று இரவு அறிவிப்பதாக பரவிக் கொண்டிருக்கும் வதந்திக்கு அவரின் மனைவி சாக்ஷி முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதுக் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் வதந்தி என பதிவிட்டிருக்கிறார்.
தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்திருப்பதாக தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தோனி ஓய்வு பெறுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7 மணிக்கு தோனி செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு பேராபத்து திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் தான் தமிழ் மொழியை வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமியின் இஸ்ரேல் பயணம் வரவேற்கத்தக்கது என பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது, தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும், அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும். ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என அவர் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் பழனிசாமி, நீர் மேலாண்மை தொடர்பாக, விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிதியாண்டில் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகளைச் செய்த பின்னும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவார்கள். இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் மாற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அனைத்து நோட்டீஸ்களும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு சென்று, அங்கு தகவல்களை மேலும் உறுதி செய்யப்பட்ட பின் பொதுமக்களுக்கு அனுப்பும் முறையை பின்பற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
Delhi High Court has issued notice to CBI on P. Chidambaram's plea seeking bail and challenging judicial custody order given by the trial court in INX Media case; Next date of hearing is 23rd September. pic.twitter.com/Ri7vdlS82q
— ANI (@ANI) September 12, 2019
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும், சிதம்பரம் மனு மீது பதிலளிக்க சிபிஐ க்கு ஏழு நாட்கள் கெடு விடுத்துள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 30 நாள் பரோலில் (சிறை விடுப்பு) வந்தார். இதனையடுத்து. பரோலை மேலும் 3 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 15 வரை இந்த பரோலை நீட்டிக்க கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இதில் நளினியின் பரோல் நீட்டிக்கப்படாது என்ற தீர்ப்பு தான் வந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம்,1988 திருத்தியமைக்கப்பட்டு வாகனம் மற்றும் சாலை விதிமுறைகளை மீறும் மக்களுக்கு அபராத கட்டணத்தை அதிகப்படுத்தியிருந்தது மத்திய அரசு. போக்குவரத்து விதிகளை மீறுவதன் மூலமாகவே அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துவருவதால் தான் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாகவும், மாநில அரசுகள் தேவைப்பட்டால் இந்த அபராத கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று நேற்று நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதலமைச்சருடன் ஆலோசித்து அபராத கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழ்நிலையில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரை இன்று டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
நடிகர் செந்தில், மன்னார்குடி சிவா-ராஜமாணிக்கம், டாக்டர் கே.கதிர்காமு, எஸ்.கே.தேவதாஸ், இரா. ஹென்றி தாமஸ் போன்றோர்கள் புதியதாய் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
பொங்கல் விடுமுறைக்காக ஜன., 10 அன்று தங்கள் சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடத்தில் ராக்கெட் வேகத்தில் காலியாகின.
ரயிலில் பயணம் செய்ய, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளதன் காரணமாக, முன்பதிவு இன்று துவங்கியுள்ளது
ஜன., 10 வெள்ளிக்கிழமைக்கு ரயிலில் பயணிக்க, இவன்று முன்பதிவு துவங்கியது. ஜன., 11ல் பயணிக்க, வரும், 14ம் தேதி; ஜன., 14 போகியன்று பயணிக்க, வரும், 17ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
இரண்டு வருட பிந்தைய படிப்பு வேலை விசாவை மீண்டும் அறிமுகப்படுத்திகிறது பிரிட்டிஷ் அரசு. இந்த வசதி மூலம் , தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு வருடங்கள் அவர்கள் விரும்பும் வேலையை செய்யவோ , அல்லது விரும்பிய வேலையைத் தேடவோஅனுமதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விசாவை 2012 இல் உள்துறை செயலாளர் தெரசா மே ரத்து செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
லடாக்கில் உள்ள 130 கி. மீ நீளம் கொண்ட பன்கோங் எரியில் நேற்று இந்தியா மற்றும் சீனா படை வீரர்களுக்கு இடையே நேற்று பதட்டம் நிலவி வந்தது. இந்த ஏரியின் 60 சதவீதம் சீனாவின் கட்டுபாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இன்று சீனா மற்றும் இந்தியாவின் எல்லை உயர் மட்ட அதிகாரிகள் கூடி பேசி பதற்றத்தை தனித்து விட்டதாகவும் தகவல் வருகின்றன. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லையாக இருக்கும் லைன் ஆப் கன்ட்ரோல் பற்றிய குழப்பங்களால் அடிக்கடி பதற்றம் வருவது குறிப்பிடத்த்தக்கது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி முன்னாள் மத்திய மந்திரி பி.சிதம்பரம் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த நடவடிக்கையெல்லாம் அரசியல் பழிவாங்கும் தன்மையாய் இருகின்றது என்று தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், தனி மனு மூலம், செப்டம்பர் 5 ஆம் தேதி 14 நாட்களில் நீதிமன்ற காவலில் இருக்கும் நீதிமன்றம் உத்தரவையும் நிறுத்தி வைக்க கோரியுள்ளார்.
சென்னையில் கட்டிட தொழிலாளியாக தலைமறைவாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights