Advertisment

Tamil Nadu news today updates : மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக 13 , திமுக 12 - மாநில தேர்தல் ஆணையம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து ரூ.78.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயர்ந்து ரூ.73.10க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates : மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேட்சைகளின் ஆதரவைப் பெறுவதற்கு திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இத்தேர்தலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக் கோரி காவல்துறையினரிடம் திமுக-வினர் மனு அளித்துள்ளனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு எதிராக திமுக நடந்துக் கொண்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் நிலையில், அழகிரியின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

10ம் வகுப்பு பாடத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த தவறான வாசகம் நீக்கப்படும் – தமிழக பள்ளிக்கல்வித்துறை

கடும் போராட்டங்கள் நிலவி வரும் நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்திருப்பதாக, அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல், இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அனைத்தும் அமலுக்கு வருவதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில், ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Live Blog

Tamil Nadu news today updates

இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள














Highlights

    22:32 (IST)11 Jan 2020

    மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்

    மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக - 13 இடங்களையும், திமுக - 12 இடங்களையும் பெற்றுள்ளது - மாநில தேர்தல் ஆணையம்

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக 12 இடங்களில் ஒன்றிய தலைவருக்கான தேர்தல் நடைபெறவில்லை - மாநில தேர்தல் ஆணையம்

    21:59 (IST)11 Jan 2020

    117 பணியிடங்கள் நிறுத்திவைப்பு

    கணினி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு; தேர்வானவர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர் - ஆசிரியர் தேர்வு வாரியம்

    697 பணியிடங்களுக்கான பட்டியல் வெளியீடு, வழக்குகள் காரணமாக மீதமுள்ள 117 பணியிடங்கள் நிறுத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்

    21:22 (IST)11 Jan 2020

    செயற்குழு அவசரக் கூட்டம்

    திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

    21:07 (IST)11 Jan 2020

    #MasterHelmetAwareness

    தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterHelmetAwareness என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்

    19:26 (IST)11 Jan 2020

    தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் திமுக வெற்றி பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு

    19:22 (IST)11 Jan 2020

    காங்கிரஸ் தோள்கொடுக்கும்

    மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம்

    சமத்துவம், நீதி, கண்ணியத்துகான மக்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் தோள்கொடுக்கும்

    - சோனியா காந்தி

    19:22 (IST)11 Jan 2020

    ரூ.5 லட்சம் நிதியுதவி

    எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்

    வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும்

    - மு.க.ஸ்டாலின்

    19:21 (IST)11 Jan 2020

    துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

    18:08 (IST)11 Jan 2020

    பிரதமரை சந்தித்தார் மம்தா பானர்ஜி- குடியுரிமை திருத்தம்  சட்டம் திரும்ப பெற வலியுறுத்தல்

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  இன்று ராஜ் பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குடியுரிமை திருத்தம்  சட்டம் மற்றும்  முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார்.

    "நாங்கள் குடியுரிமை திருத்தம்  சட்டம், முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு  ஆகியவற்றை எதிர்க்கிறோம் என்று அவரிடம் சொன்னேன். யாரையும் நாட்டை விட்டு வெளியேறும்படி நாங்கள் கேட்க விரும்பவில்லை"என்று ராஜ் பவனில் பிரதமரை சந்தித்த பின்னர் பானர்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

    17:35 (IST)11 Jan 2020

    மாவட்ட ஊராட்சி தலைவர் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது

    தமிழகத்தில் நடந்த 27 மறைமுக மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. சிவகங்கை மாவட்டதை தவிர்த்து எஞ்சியுள்ள 26 மாவட்டங்களில் அதிமுக 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், பாமக -1 தலைவர் பதவியையும்,  திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளன.

    16:41 (IST)11 Jan 2020

    இன்டு நாள் சுற்று பயணமாக மோடி கொல்கத்தா பயணம்:

    கொல்கத்தா துறைமுகம் அறக்கட்டளையின் 150 வது ஆண்டு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    கொல்கத்தாவில் மோடி வருகையை எதிர்த்து மாணவர்கள் GoBack Modi என்ற வாசகத்தை காட்டி போராட்டம் நடத்தினர்.   

    14:49 (IST)11 Jan 2020

    புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது:

    புதுகோட்டை ஊராட்சி மன்ற தலவைர் பதிவியை அதிமுக கைப்பற்றியது. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக பெரும்பன்மை  இடங்களில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

    14:43 (IST)11 Jan 2020

    பழங்குடியினத்தை சேர்ந்த பொன்தோஸ் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவரானார்

    தமிழகத்தில் முதல்முறையாக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த பொன்தோஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

    14:37 (IST)11 Jan 2020

    கடலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் குலுக்கல் முறைக்கு அதிமுக எதிர்ப்பு

    கடலூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் இணைந்து 13 இடங்களிலும் ,  திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

    மங்களூர்  ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக, திமுக சமமாக வாக்குகள் பெற்றுள்ளது. குலுக்கல் முறையில்  தேர்ந்தெடுப்பதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து வருவதால், அங்கு சற்று பரப்பரப்பு நிலவி வருகிறது.    

    14:33 (IST)11 Jan 2020

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் முறைகேடு - டி.ஆர்.பாலு பேட்டி

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில், அதிமுகவினருடன் , தேர்தல் அதிகாரிகள் சேர்ந்து, பல இடங்களில் தேர்தல் நிறுத்திவருவதாக   டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

    14:30 (IST)11 Jan 2020

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைப்பு

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது .  அந்த மாவட்டத்தில்   அதிமுக 8 வார்டு உருபினர்களையும் ,திமுக, இந்திய தேசிய காங்கிரஸ் சேர்த்து 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களையும்  கைவசம் வைத்துள்ளது. 

    14:25 (IST)11 Jan 2020

    அதிமுக போராட்டம்

    மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவும், திமுகவும் சரிசமமாக வாக்குகளை பெற்றதால், குலுக்கல் நடத்த தேர்தல் அதிகாரி முடிவு செய்தார். ஆனால் குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேர்தல் ஒத்திவைப்பு

    13:54 (IST)11 Jan 2020

    திமுக வெற்றி விபரம்

    திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக. அந்த மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் திமுக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. நாகை மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது திமுக. மொத்தமுள்ள 11 ஒன்றியங்களில் 8 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கின்றன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக . அங்கு அதிமுக, திமுக தலா 14 உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 

    13:00 (IST)11 Jan 2020

    மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

    முறைப்படி தேர்தலை நடத்தவில்லை என பலமுறை புகார் அளித்துள்ளோம். பல இடங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது. திமுக வெற்றி பெறும் இடங்களில் பிரச்சினை செய்து தேர்தல் நிறுத்தப் பட்டிருக்கிறது. பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் வரவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

    12:45 (IST)11 Jan 2020

    திமுக-வை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிமுக

    புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு திமுக கூட்டணி அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

    12:43 (IST)11 Jan 2020

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

    இதுவரை நடந்த மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 8, திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 57, திமுக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

    12:26 (IST)11 Jan 2020

    டி.எஸ்.பி-க்கு அரிவாள் வெட்டு

    விருதுநகர், நரிக்குடி ஒன்றியக்குழு அலுவலகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் வெட்டியது. 

    12:23 (IST)11 Jan 2020

    தேர்தல் அலுவலருக்கு நெஞ்சுவலி

    கோவில்பட்டி ஒன்றிய தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலர் வராததால் மறைமுக தேர்தல் பணிகள் தொடங்கவில்லை

    12:02 (IST)11 Jan 2020

    பாஜக வெற்றி

    கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அனுஷியா தேவி வெற்றி பெற்றுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு 

    11:49 (IST)11 Jan 2020

    அதிமுக - திமுக வெற்றி விபரம்

    தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா வெற்றி. நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் சாரதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ப்ரீத்தா தேர்வாகியிருக்கிறார். நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வாகியிருக்கிறார். 

    11:25 (IST)11 Jan 2020

    திமுக-வுடன் எந்த மனக் கசப்பும் இல்லை - கே.எஸ்.அழகிரி

    திமுக உடன் எந்த மனக்கசப்பும் இல்லை எனவும்,  திமுக உடனான நட்பு எப்போதும் போல தொடர்கிறது எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கவில்லை என நேற்று வருத்தம் தெரிவித்திருந்தார் அழகிரி. 

    11:13 (IST)11 Jan 2020

    அதிமுக-வுக்கு முதல் வெற்றி

    தேனி ஊராட்சி மன்றக் குழு உறுப்பினராக பிரீத்தா என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். மறைமுக தேர்தலில் கிடைத்த முதல் வெற்றி இது. 

    11:12 (IST)11 Jan 2020

    ஒரத்தநாட்டில் திமுக-வினர் போராட்டம்

    ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் திமுக உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை என திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

    11:04 (IST)11 Jan 2020

    திருப்புவனம், பரமத்தியில் தேர்தல் ரத்து

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு  பிறப்பித்துள்ளார். அதே போல் நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்தாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.  மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மற்ற 4 அதிமுக உறுப்பினர்கள் அங்கு வரவில்லை. 

    10:50 (IST)11 Jan 2020

    அதிமுக திமுக இடையே கடும் போட்டி

    கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக திமுகவிற்கு தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக தலா ஒரு உறுப்பினர்களும், சுயேட்சை 3 பேரும் உள்ளனர். தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 

    10:21 (IST)11 Jan 2020

    உக்ரைன் நாட்டு விமான விபத்து

    உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் விமானம் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்டது ஈரான்

    09:53 (IST)11 Jan 2020

    ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு

    ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    09:39 (IST)11 Jan 2020

    வில்சன் கொலை வழக்கு

    கன்னியாக்குமரி எஸ்.ஐ வில்சன் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் குற்றவாளிகள் தொடர்பாக தமிழகம், கேரளா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    09:28 (IST)11 Jan 2020

    நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்

    நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன், அங்கிருந்து வெளியில் வந்தார். 

    09:15 (IST)11 Jan 2020

    இன்று மறைமுக தேர்தல்

    மாவட்ட உள்ளாட்சிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்துக்கு 975 ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்தச ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், 9, 624 கிராம் ஊராட்சி துணை தலைவர் உள்பட மொத்தம் உள்ள 10 ஆயிரத்துக்கு 306 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    Tamil Nadu News Today Updates : ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கடலூர் மாவட்டம் சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன், வேட்பாளர் மற்றும் முகவர் வருமுன்னரே வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் தவரகரை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட அமராவதி மற்றும் திமுக சார்பில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை கோரி வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனவரி13 ம் தேதி தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment