Advertisment

Tamil Nadu News Today Updates: 'பெரியார் கருத்துகளை வைத்து எடுத்த படத்தை வெளியிட உதவியதே ரஜினி தான்' - லாரன்ஸ்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Flash News in Tamilnadu Today Updates : ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 335 பதவிகளுக்கு, வரும், 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 11ம் தேதி நடந்த மறைமுக தேர்தலின் போது, பல்வேறு காரணங்களால், பல இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தலை, 30ம் தேதி நடத்த, மாவட்ட தேர்தல் அலுவலர்களை, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள, 143 மனுக்கள் மீதான விசாரணையை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:43 (IST)23 Jan 2020

    ஒன்று திரட்டி நீட் தேர்வை ஒழிப்போம்

    நீட் தேர்வு என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது, மக்களை ஒன்று திரட்டி நீட் தேர்வை ஒழிப்போம் - கரூரில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேச்சு

    21:48 (IST)23 Jan 2020

    ரூ.499 கோடி டெண்டரை இறுதி செய்ய தடை

    மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதற்காக ரூ.499 கோடி டெண்டரை இறுதி செய்ய தடை

    டெண்டர் விதிகள் பின்பற்றப்படவில்லை என தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    21:48 (IST)23 Jan 2020

    பிரெக்ஸிட் சட்டத்தை அங்கீகரித்த ராணி

    பிரிட்டன் ராணி 2ம் எலிசபத், இங்கிலாந்து அரசின் பிரெக்ஸிட் சட்டத்தை அங்கீகரித்தார்

    21:48 (IST)23 Jan 2020

    பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியீடு

    5ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    21:23 (IST)23 Jan 2020

    பெரியார் கருத்துகளை வைத்து எடுத்த படத்தை வெளியிட உதவியதே ரஜினி தான் - லாரன்ஸ்

    2006ம் ஆண்டு இயக்குநர் வேலு பிரபாகரன், பெரியார் கருத்துகளை வைத்து எடுத்த படத்தை வெளியிட முடியாதபோது, பெரும்தொகையை கொடுத்து ரஜினிதான் படத்தை வெளியிட உதவினார் - நடிகர் ராகவா லாரன்ஸ் முகநூல் பதிவிட்டுள்ளார்.

    20:42 (IST)23 Jan 2020

    ரூ.1.13 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல்

    தாய்லாந்து, கொழும்பு, மலேசியா, துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

    20:42 (IST)23 Jan 2020

    4 பேருக்கு இரட்டை ஆயுள்

    ஓசூர் : கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் 2009ம் ஆண்டு சகிலா பானு என்ற பெண்ணை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

    20:41 (IST)23 Jan 2020

    அரவிந்த் கெஜ்ரிவால் முதலிடம் பிடிப்பார்

    இந்தியாவில் பொய் வாக்குறுதிகள் சொல்லும் போட்டி வைத்தால், அரவிந்த் கெஜ்ரிவால் முதலிடம் பிடிப்பார் - உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

    20:41 (IST)23 Jan 2020

    ஆர்.கே.நகர் பணப்படுவாடா வழக்கு

    ஆர்.கே.நகர் பணப்படுவாடா வழக்கில் சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்க்க கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

    திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

    20:07 (IST)23 Jan 2020

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு என தகவல்

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் ஆடும் பதினோரு பேரில் ஒருவராக சஞ்சு சாம்சன் இடம்பெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    19:41 (IST)23 Jan 2020

    தேர்வு பற்றிய அறிவிப்பாணை

    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

    19:28 (IST)23 Jan 2020

    13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

    19:02 (IST)23 Jan 2020

    'மாறா' படப்பிடிப்பு தொடங்கியது

    நடிகர் மாதவன் தனது 'மாறா' படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் திலீப் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘கல்கி’ என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அலெக்சாண்டர் பாபு காமெடியனாக நடிக்க இருக்கிறார்.

    18:52 (IST)23 Jan 2020

    நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் நாளை தீர்ப்பு

    நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

    விஷால், நாசர், கார்த்தி, சங்க உறுப்பினர்கள் தொடுத்த வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது

    18:52 (IST)23 Jan 2020

    அழிக்க முடியாத தடம் பதித்த தலைவர் நேதாஜி

    சுதந்திர போராட்டத்தில் அழிக்க முடியாத தடம் பதித்த தலைவர் நேதாஜி - வெங்கையா நாயுடு

    அவரது கம்பீரமான தோற்றம் இளைஞர்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராக உருவெடுத்தவர் - துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

    18:44 (IST)23 Jan 2020

    கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன் - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

    மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ஜெயக்குமார் என்னைப்பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார். இவர்கள் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சான்றிதழ் தரவேண்டியது இல்லை. கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன். நேரில் பார்க்கும்போது அமைச்சர் ஜெயக்குமாருடன் சில விஷயங்கள் பேசுவேன்” என்று கூறியுள்ளார்.

    18:03 (IST)23 Jan 2020

    தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யக் கோருவது நியாயமானதே - டாக்டர் ராமதாஸ்

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு, தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள்ளார்.

    18:00 (IST)23 Jan 2020

    2020-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிகள் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கலாம் - இஸ்ரோ

    மே 11 முதல் 22 வரை நடைபெறும் 2020ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும்
    8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் http://isro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    17:51 (IST)23 Jan 2020

    சிஏஏ குறித்து நந்திதா தாஸ்: 4 தலைமுறையாக இங்கே இருப்பவர்களை இது உங்கள் நாடு இல்லை என்கிறார்கள்

    ஜெய்பூரில் சிஏஏ குறித்து பேசிய நடிகை நந்திதாதாஸ், நான்கு தலைமுறைகளாக இங்கே இருக்கும் மக்களை இது உங்களுடைய நாடு இல்லை என்று சொல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. நான் இதற்கு எதிராக ஒவ்வொரு பேச வேண்டும் என்று நம்புகிறேன். உண்மையில் மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். நாடு முழுவது அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

    17:26 (IST)23 Jan 2020

    இந்தியா எந்த திசை நோக்கி செல்கிறது என்பதில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ப.சிதம்பரம்

    மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு பலவீனமடைந்துள்ளது; அதை கவனிப்போருக்கு ஜனநாயகம் எப்படி பலவீனமடைந்துள்ளது என தெரியும். இந்தியா எத்திசை நோக்கி செல்கிறது என்பதில் ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    16:49 (IST)23 Jan 2020

    நாட்டிலேயே தொழில்துறையில் தமிழகம் முன்னணி - முதல்வர் பழனிசாமி பெருமிதம்

    சென்னை தரமணியில் நடந்த டி.எல்.எப் அடிக்கல் நாட்டு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். முதலீடுகள் செய்வதை எளிதாக்கும் பிரிவு, தனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

    16:14 (IST)23 Jan 2020

    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்த வழக்குகள்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

    15:06 (IST)23 Jan 2020

    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா அமித்ஷாவின் சவாலை ஏற்ற மாயாவதி, அகிலேஷ்

    குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்க தயாரா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏற்றனர். எந்த இடத்திலும், எந்த தளத்திலும் விவாதம் நடத்த தயார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பா.ஜ.க தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    14:33 (IST)23 Jan 2020

    ரஜினியை தவறாக வழிநடத்துகின்றனர்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    அமைச்சர் செல்லூர் ராஜூ: ரஜினியை யாரோ தவறான வழியில் வழிநடத்துகின்றனர். 50 ஆண்டுகால பழமையான விஷயங்களை ரஜினி தற்போது பேசவேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியுள்ளார்.

    14:21 (IST)23 Jan 2020

    ரஜினிக்கு தலையும் தெரியாது , வாலும் தெரியாது – துரைமுருகன்

    ரஜினிக்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது , வாலும் தெரியாது  என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.  ஸ்டாலின் கூறியதுபோல, ரஜினி, பெரியாரை பற்றி பேசாமல் இருப்பது நல்லது என அவர் மேலும் கூறியுள்ளார்.

    13:30 (IST)23 Jan 2020

    கட்டுக்குள் வந்தது ஆஸ்திரேலிய காட்டுத்தீ...

    காட்டுத் தீயால் பே‌ரழிவை சந்தித்த ஆஸ்திரேலியா மெல்ல மெல்ல இ‌யல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 6 மாதங்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ, அண்மையில் பெய்த மழையால் கட்டுக்குள் வந்துள்ளது.

    13:18 (IST)23 Jan 2020

    தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்று முதல்வர் பழனிசாமி மேலும் கூறினார்.

    12:54 (IST)23 Jan 2020

    திமுக தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

    சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுகவில், மகன், மகனுக்கு பின்னர் பேரன் உதயநிதி என வாரிசுகளே தலைவர் பதவியை ஏற்க முடியும் எனவும் ஆனால், அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட கொடி கட்டிய காரில் வர முடியும் என்றார்.  அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவின் தலைவராக துரைமுருகன் வரமுடியுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்றைக்கும் ஹீரோதான் எனவும் 2021ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

    12:14 (IST)23 Jan 2020

    ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

    பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

    11:28 (IST)23 Jan 2020

    ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா?

    அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாம, தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுப்பாரா என திமுக  பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

    சேலத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

    11:13 (IST)23 Jan 2020

    இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கணா ஆவேசம்

    நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.  மீடியாக்களுக்கு பேட்டி அளித்த மனிதஉரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாககக் கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு பலர் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரை போன்ற பெண்களால் தான் அரக்கர்களும் கொலைகாரர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

    11:07 (IST)23 Jan 2020

    மேகதாது அணை விவகாரம் – தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகா, மேகதாது அணை கட்ட தடை கோரிய தமிழக அரசின் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் ஆஜரானதால் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை 2 வாராத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    10:46 (IST)23 Jan 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.54 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.71.70ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    10:38 (IST)23 Jan 2020

    பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது – ஹெச்.ராஜா

    பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது எனவும், அதனை பொதுவுடமை ஆக்க வேண்டும் என்றும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : திராவிடர் கட்சி உடனான தொடர்பை துண்டிக்காவிடில் தி.மு.க., மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்,'' என பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தி.க.,வுடன் தொடர்பை துண்டிக்காமல் தி.மு.க., இருந்தால், அக்கட்சி மிகபெரிய விளைவை சந்திக்க நேரிடும். வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதை கண்டித்தேன். இதனால் எனக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தினர். ரஜினி மீது வழக்கு போடுவோம் என வீரமணி கூறியது வேடிக்கையாக உள்ளது. இவ்விஷயத்தில் நீதிமன்றமே தி.க.,வினருக்கு விரைவில் தண்டனை வழங்கும், என்றார்.

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.2021ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன், 'வியோம மித்ரா'என்ற பெண் உருவம் கொண்ட, மனித ரோபோவை, இஸ்ரோ அனுப்ப உள்ளதாக, அதன் தலைவர் சிவன் தெரிவித்தார்.

    Tamil Nadu Rajinikanth Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment