Flash News in Tamilnadu Today Updates : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் இன்று பேரணி நடத்துகின்றன. இந்தப் பேரணி இன்று காலை 9 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கி, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானம் வந்தடைகிறது.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் நடக்கவுள்ள, ஊரக உள்ளாட்சி தேர்தலில், பெரிய சச்சரவு இல்லாமல், இடப் பங்கீட்டை முடித்துள்ள, அ.தி.மு.க., தலைமை, பெரும்பாலான பதவிகளை கைப்பற்ற, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் துவக்கி உள்ளது. அமைச்சர்கள் அனைவரும், தங்கள் மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.தேர்தல் வெற்றிக்காக, எதிர்க்கட்சியினரை வளைப்பது, பணப் பட்டுவாடா செய்வது என, அனைத்து யுக்திகளையும் துவக்கி உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்திய அரசின், ஆறு மாத செயல்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு அமைச்சகமும், தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள், ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, பிரதமர் மோடியிடம் விளக்கின. பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக, கடந்த, மே, 30ல் பதவியேற்றது.இதன் பின், ஜூன், 13ல், மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது, அமைச்சர்களின் பணி மற்றும் திட்டங்களை, அவர்களுக்கு மோடி விளக்கினார். மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நாளை நடைபெறும் திமுக பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
திமுக தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் போராட்டம் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது. அதே நேரத்தில் வன்முறையையும் அனுமதிக்க முடியாது.
போலீஸ் அனுமதியின்றி நாளை எந்த பேரணி நடத்தப்பட்டாலும் ட்ரோன் மூலமாக வீடியோ பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஒருவேளை கலவரம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பை அதற்கு பொறுப்பாக்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர்
சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருக்கிறது
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்
- முதல்வர் பழனிசாமி
நாங்கள் இடைக்கால உத்தரவு மூலம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணிக்கு அனுமதிப்பதாக இருந்தால், ஆர்ப்பாட்டத்தை முறையாக படப்பிடிப்பு செய்து விதிமீறல் ஏற்படாமல் உள்ளதா என கண்காணிக்க முடியுமா? அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?
- நீதிபதிகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் தகவல்
மனு தாக்கல் செய்த பிறகு திமுக பேரணிக்கு அனுமதி மறுப்பா அல்லது அதற்கு முன்பாகவே மறுக்கப்பட்டதா? - நீதிபதிகள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை; அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் பங்கேற்பு.
பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்
நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும் என நம்புகிறேன் - சிதம்பரம்
நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும்,
ஜார்க்கண்ட் மாநிலத்தில்
நம் ஆட்சி அமையும்,
என்ற நம்பிக்கையுடன்
உறங்கப் போகிறேன்— P. Chidambaram (@PChidambaram_IN) December 22, 2019
#CAA2019 சட்டத்திற்கு எதிராக, நாளை (டிச-23) நடைபெறும் பேரணியில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பீர்.
சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உரிமைகள் மீட்சி பெறட்டும் - மு.க.ஸ்டாலின்
கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை
குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா பற்றி அறியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவது பற்றிய முதல்வரின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார்
- ஹெச்.ராஜா
3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு 316 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரன் 89,பொல்லார்ட் 74 ரன்கள் அடித்தனர்
இந்திய அணியில் சைனி 2 விக்கெட்,தாகூர், ஜடேஜா,ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்
திட்டை ரோட்டில் தனிவட்டாட்சியர் பிரேம்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த லாரியில் உரிய ஆவணம் இன்றி மகாராஷ்டிராவில் இருந்து 21 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் வெங்காயத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்பவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, எதிர்த்து போராட்டம் செய்பவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.
டெல்லியில் அங்கீகாரம் இல்லா குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே தங்களது முதல் பணி என்றார். வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் குணாதிசயம் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளில் கைவிடப்பட்ட மக்களின் நலனுக்காக தான் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர்கள் நேர்மையற்றவர்கள் என்றும் பிரதமர் மோடி சாடினார். நாடாளுமன்றத்திற்கு மக்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி போன்ற இரும்பு மனிதர் இல்லைெயன்றால், வன்முறையால், இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். மோடி என்ற வீரனால் மட்டுமே, இந்தியா இந்தியாவாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டம், என்ஆர்சி உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டில்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த போராட்டம், நாளை ( 23ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம் . மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது என்று கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாக, மக்கள் நீதிமய்யம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன்; பட்டமளிப்புவிழாவை புறக்கணிப்பதன் மூலம்தான் நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யமுடியும்;இந்த மசோதாவை சட்டமாக்கிய குடியரசுத் தலைவரிடம் இருந்து பட்டத்தை பெற நான் விரும்பவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிலையில், விழாவை புறக்கணிப்பதாக ’தங்கப்பதக்கம்’ வென்ற கார்த்திகா என்ற மாணவி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறையால் இந்திய ரயில்வே துறைக்கு ரூ.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமுற்று இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் ரூ.72 கோடியும், தென்கிழக்கு ரயில்வேயில் ரூ. 13 கோடியும், வடகிழக்கு ரயில்வேயில் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமுற்றுள்ளன.
: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டிச.,25 ம் தேதி மாலை 5 மணி முதல் 27 ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதே போன்று 28 ம் தேதி மாலை 5 மணி முதல் டிச.,30 மாலை 5 மணியும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜன.,2 அன்றும் டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார். இதே போன்று சேலம் மாவட்டத்திலும் டிச.,25 முதல் டிச.,30 வரையும், ஜன.,2 ம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக , திமுக தலைமையில் நாளை ( டிசம்பர் 23ம் தேதி)பேரணி நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை லீவு எடுக்க தடை விதித்து, மாநகர போக்குரவத்து மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக்கொண்டதாகவும், இதுகுறித்து மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும்என்று அவர் உறுதியளித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம், தேர்தல் நடக்காத, 10 மாவட்டங்களில், பொங்கல் பரிசு வழங்க தடை இல்லை என, தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை, ஜனவரி, 15ல் வருகிறது. ஆண்டுதோறும், பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் தான், ரேஷனில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.இதனால், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும், அனைத்து மாவட்டங்களிலும், ஒரே சமயத்தில், ஜனவரியில், பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அந்த விபரம், அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், முன்கூட்டியே வழங்கும்படி அரசு கூறினாலும், பொங்கல் பரிசு வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights