Flash News in Tamilnadu Today : தி.மு.க., கூட்டணியில் இருந்து காங். விலகினாலும் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். தற்போது வரை தி.மு.க. கூட்டணியில் தான் காங். உள்ளது; பிரியவில்லை. தி.மு.க. கூட்டணியில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. வெளியே போ என சொல்வதில்லை. அவர்களே போனாலும் ஒப்பாரி வைப்பதில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை மரியாதையாகவே நடத்துவோம். கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். நடிகர் ரஜினி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை
காணும் பொங்கல கொண்டாட ஈஸியா மெரினா போக வாய்ப்பு
டில்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள ‘வாரன்டு’க்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. ‘அதே நேரத்தில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம்’ என கூறியுள்ளது. இந்த நிலையில், ‘திட்டமிட்டபடி, ஜன. 22ல் தண்டனை நிறைவேற்ற முடியாது’ என டில்லி அரசு கூறியுள்ளது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சர்வதேச அளவிலான எந்த பிரச்னையிலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல், தீர்க்கமான முடிவெடுப்பது, இந்தியாவின் கொள்கை என, மத்திய வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவுபீக்கை ஜனவரி 20ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு. ஜனவரி 20 வரை இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க குழித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மிசோரத்தில் நடைபெற்ற வன்முறையால் புரு இன மக்கள் திரிபுராவுக்கு குடிபெயர்ந்தனர். திரிபுராவில் நிலவிவந்த புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணும் வகையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா – புரு பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா திரிபுராவில் புரு அகதிகளை குடியமர்த்த 600 கோடி திட்டத்தை அறிவித்துள்ளார்.
அண்மையில், தமிழகம் வந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஷ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இலங்கைக்கு வர அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை அரசு கூறியதாக தகவல்கள் பரவின.
இந்த செய்திக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை. ரஜினியிடமிருந்து விசா வேண்டி எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறினார்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. போட்டியில் 16 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார்: சாதி, மதம், இனம் பேசும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் அறிய மருந்து திருக்குறள். சாதி, மதம், இன வழி செல்வோர் அறவழி போதிக்கும் திருக்குறளை படித்து பின்பற்ற வேண்டும். திருக்குறள் படித்தால் அகவழி மணக்கும், மனமது தெளிவு பெறும், மனிதகுலம் தழைக்கும் என்று கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கதில், “திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.” என்று தமிழில் டுவிட் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விசா கோரி, ரஜினிகாந்த் தரப்பிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்று இலங்கை அரசு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப்பேசியிருந்த நிலையில், விசா மறுப்பு குறித்து வெளியான செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பிசிசிஐ) ஆண்டுதோறும் வருடாந்திர ஒப்பந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020 கால அளவிலான ஒப்பந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரூ.7 கோடி மதிப்பிலான ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.
ரூ.5 கோடி மதிப்பிலான ஏ கிரேடு பட்டியலில், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், சமி, இசாண்ட் சர்மா, குல்தீப் யாதவ், ரிசப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.
ரூ.3 கோடி மதிப்பிலான பி கிரேடு பட்டியலில் சஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளனர்
இந்த பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் இடம்பெறவில்லை. இதனால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னாள் வீரர்கள் பிசிசிஐவின் இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவிலேயே ஒரு பெரிய கூட்டம் செயல்பட்டு வருவதாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில், மாணிக் தாகூரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஈஸ்வர் – மகாலெட்சுமி பிரச்னையால் மனமுடைந்த சீரியல் நடிகையும், ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை இணைத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனிடையே தர்மபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார், வெங்கையா நாயுடுவுக்கு டுவிட்டர் வழியாக தெரிவித்திருந்தார்.
உடனடியாக, வெங்கையா நாயுடு, காவி திருவள்ளுவர் படத்தை நீக்கியுள்ளார். இதற்கு வெங்கையா நாயுடுவிற்கு எம்பி செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
கனிமொழி, ராசா தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, 2ஜி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை, டில்லி உயர்நீதிமன்றம்ஜன.க்ஷவரி 27 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணைம னுவை டில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்துள்ளார். நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவரின் திருக்குறள் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு, மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என்று திருவள்ளுவர் பிறந்தநாளையொட்டி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவி உடையிலான திருவள்ளுவர் படத்துடன் டுவீட் செய்துள்ளார்.
நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2017 நவ., 1முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி வரும் ஜன.,31 பிப்.,1 மற்றும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில்தான் அதிமுகவும் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு, சிஏஏ, மற்றும் என்ஆர்சி போன்றவைகளுக்காக மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி வருவது குறித்து நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதன்காரணமாக, அந்தபகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) பணிகளுக்கான நடவடிக்கைகள், கேரள மாநிலத்தில் நடைபெறாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழர் உரிமையான ஜல்லிகட்டை மீட்டெடுத்து 3 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.49 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் 15காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.83ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு, மதுரையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தைப்பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் நாளில், பாலமேட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. சீறிவரும் காளைகளை சினங்கொண்ட காளையர்கள் அடக்கி வருகின்றனர். இந்த போட்டியை காண, உலகெங்குமிலும் இருந்து பலர் வருகை தந்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை ( 17ம் தேதி) நடைபெற உள்ளது.