Flash News in Tamilnadu Today Updates : கட்சியில் சிறப்பாக உழைத்ததால், நாங்கள் உயர்ந்துள்ளோம். அதேபோல், நீங்கள் சிறப்பாக உழைக்கும்போது, எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்,'' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஜெயலலிதா, தன் நோயைக் கூட பொருட்படுத்தாமல், மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். அவர் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.அனைத்து பகுதிகளிலும்,ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவ வேண்டும். முதியோருக்கு வேஷ்டி, சேலை; பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் வழங்குங்கள்; அன்னதானம் செய்யுங்கள். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, பழங்கள், பால், பிரட் வழங்கலாம். மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இதுவே, ஜெ.,க்கு நாம் செய்யும் நன்றி. ஜெ., உழைப்பால், நாம் நிமிர்ந்து நிற்கிறோம் என அவர் மேலும் கூறினார்.
தஞ்சையில் சுகோய் போர்விமானங்கள் சாகசம்
மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி தாக்கல் செய்த கடைசி மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை
என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம்
பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்
- துணை முதல்வர் ஓபிஎஸ்
எம்.ஜி.ஆர் தனக்கென தனி முத்திரையை பதித்தவர், நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலம் நாட்டிற்கு சொன்னவர். அதிமுக கொடியில் அண்ணாவின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர். சாதரணமானவர் கூட அதிமுகவில் எம்.பி, எம்.எல்.ஏ,வாக முதலமைச்சராக கூட வரலாம், திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதிமுக மட்டுமே ஜனநாயக முறைப்படி கட்சி நடத்துகிறது. நூற்றாண்டு காலம் கடந்த கட்சி காங்., அதன் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு - முதலமைச்சர் பழனிசாமி
'ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எப்போதும் முதலமைச்சராக முடியாது.
அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள்
ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்.
அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்
* ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா?
- முதல்வர் பழனிசாமி
காட்டுமன்னார்கோயில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறனின் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் எம்.பி., தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்த நீதிபதி கார்த்திகேயன் அறிவிப்பு
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
மன்னிப்பா? ஹாஹாஹாஹா. 😎 👏👏👏@rajinikanth #Thalaivar #Rajini #Periyar #seruppadi pic.twitter.com/ze0uoKkqyC
— Kasturi Shankar (@KasthuriShankar) January 21, 2020
இந்திய பயணிகள் 8 பேர் நேபாளத்தில் இறந்தது வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனையில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் - ஜெய்சங்கர்
இதனிடையே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கும்பாபிஷேகம் விழாவை நடத்த தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மைய விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மாவின் முரண்பட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி, சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றக்கூடாது எனவும் அதில் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.
கார்த்தி சிதம்பரம், சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் சொத்து விற்பனை மூலம் கிடைத்த 7 கோடியே 73 லட்சம் வருமானத்தை மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும், அதை ரத்து செய்யக் கோரியும், எம்.பி கார்த்தி சிதம்பரம், அவரின் மனைவி ஸ்ரீநிதி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், ஜனவரி 27ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம், அவரின் மனைவி ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில், இன்று தான் தவறாக பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். இந்நிலையில், பழைய நிகழ்வுகளைப் பற்றி பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிக்கு என்ன பி.எச்.டி பட்டமாக கொடுக்கப்போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல. மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரன்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது” என தெரித்தார்.
நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த 8 பேரின் உடல்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
ரஜினியின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில், சரியோ தவறோ இதை ஒரு தனிப்பட்ட கருத்து என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், ரஜினியைப் பார்த்து நான் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். இப்போது நமக்குத் தேவை நேர்மை.. பயம் அதிகாரம் செய்ய முடியாது. பேசுங்கள் உங்களுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை பேசுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். நீங்கள் அனைவரையும் மகிழ்விக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தான் கூறியதற்கு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதராமாகக் காட்டினார். ரஜினியின் கருத்து குறித்து பேசிய நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினி விஷயம் தெரியாமல் அவ்வப்போது இப்படி பேசி மாட்டிக்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இத்திட்டத்தை ஜன., மாதம் அமல்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக முதல்கட்டமாக ஜன.,1ம் தேதியே 12 மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுவிட்டது எனவும் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம், மீண்டும் இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். தேர்வுகள் திறமையை வளர்க்க வேண்டும்; மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது. இதேநிலை நீடித்தால் ஒன்றாம் வகுப்புக்கும், இரண்டாம் வகுப்புக்கும் கூட பொதுத் தேர்வு வந்து விடும் போலிருக்கிறது! என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சி செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1971ம் ஆண்டில் சேலத்தில் நடந்த பெரியார் பேரணி குறித்து துக்ளக் விழாவில் தான் கற்பனையாக எதுவும் பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, 1971ம் பேரணி தொடர்பாக தான் கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வெளிவந்ததை தான் நான் பேசினேன். கற்பனையாக எதுவும் பேசவில்லை. இதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
'தி.மு.க., ஆட்சியில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினா என, அனைத்திற்கும் அனுமதி கொடுத்துவிட்டு, தற்போது வானத்திலிருந்து குதித்ததுபோல், ஸ்டாலின் பேசுகிறார். ''ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்காது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights