Flash News in Tamilnadu Today Updates: தி.மு.க., - காங்., இடையே நிலவிவந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை தி.மு.க. ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி 'தி.மு.க.வின் செயல் கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது' என அறிக்கை வெளியிட்டார். அதற்கு தி.மு.க. தரப்பில் பதிலடி தரப்பட இரு கட்சிகளின் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
ராகுலுக்கு நேரடி சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படிக்கட்டும். அதில், முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என குறிப்பிட்டிருந்தால், அவருடன், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார்,'' என ராகுலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சவால் விடுத்துள்ளார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனடு டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என்று நெற்பயிருடன் முதல்வர் பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட் செய்துள்ளார்.
Pleased to see Chief Minister of Tamil Nadu, Shri Edappadi K. Palaniswami working in fields as a farmer, who will never forget his roots. It may be symbolic but it inspires people. Everyone should focus on making agriculture profitable and sustainable. This is the need of hour. pic.twitter.com/cmcnKWaIHU
— Vice President of India (@VPSecretariat) January 19, 2020
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சுமார் 96 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். படகில் சென்ற மீனவர்கள் பாரதி, அசோக், சக்திகுமார், மணி ஆகிய நான்கு பேரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய விசைப்படகு திடீரென கடலுக்குள் மூழ்கியது. சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
துக்ளக் இதழ் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து தவறான தகவலை கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவருடைய வீடு 23-ம் தேதி முற்றுகை - முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாட்ஸ் அப் பயனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சிக்கல் குறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; இதன் காரணமாக #Whatsappdown என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறத்தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு மின்விளக்கு அலங்காரம் இருக்கும்போது, வள்ளுவர் சிலையை பராமரிக்காதது பாரபட்சமானது. வள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டசபைகளில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களால் எவ்வித பாதிப்புமில்லை என்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் சபரிமலை சென்றுள்ளார். இருமுடி கட்டி தேனியில் இருந்து சபரிமலைக்குச் சென்றுள்ளார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல்லவில்லை. அதிகாலை அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். மாலை அவர் மீண்டும் தேனி திரும்புவார் என்று கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று, அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது, தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளது. ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் அதிக அளவு 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 54 ஆயிரத்து 776 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், 12 ஆயிரத்து 560 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 9 ஆயிரத்து 615 போலி இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், கர்நாடகாவில் 6 ஆயிரத்து 750 ரூபாய் போலி தாள்களும், டெல்லியில் 6 ஆயிரத்து 457 போலி ரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மிசோரமில் 3 ஆயிரத்து 494 போலி இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், குஜராத்தில் 2 ஆயிரத்து 722 ரூபாய் போலி தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோவில், திருக்குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த வலியுறுத்தி நடக்கும் மாநாடு, வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டின் கோரிக்கையை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights