இன்றைய செய்திகள்: கேரளாவில் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் பரப்பிய 2 பேர் கைது

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ.75.04-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ரூ.68.89-க்கும் விற்பனையாகிறது

By: Feb 9, 2020, 10:39:02 PM

இன்றைய செய்திகள்: ரஜினி, விஜய், அன்புச்செழியன், ரெய்டு என்று இந்த வாரம் முழுவதும் அரசியல் களத்தை தாண்டி சினிமா வட்டாரம் தகதகத்தது. ஆனால், அதில் அரசியல் வாசம் புகுந்து விளையாடியது. ஆக மொத்தம் நேரடி அரசியல் விவகாரங்கள் பெரிதாக இல்லை என்றாலும், விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு, அரசியல் புள்ளிகளோடு கோலமாக போடப்பட்டது.

இன்று (பிப். 9) வார இறுதி ஞாயிற்றுக் கிழமை நமக்கு என்னென்ன சர்பிரைஸ் வைத்திருக்கிறதோ தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் இன்று நடக்கும் இந்தியா – வங்கதேசம் அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முக்கிய செய்தியாக இடம் பிடிக்கிறது.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

தவிர, தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, சினிமா, வானிலை உட்பட அனைத்து வித இன்றைய முக்கிய செய்திகளையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் இந்த லைவ் பக்கத்தில் உடனுக்குடன் வழங்குகிறது.

ஸோ, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பாருங்க, அப்டேட்டா இருங்க!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:43 (IST)09 Feb 2020
இந்து சமூகம் என்பது பாஜக அல்ல; பாஜக எதிர்ப்பு என்பது இந்து எதிர்ப்பு அல்ல - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்

ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி: இந்து சமூகம் என்பது பாஜக என்று அர்த்தமில்லை; பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு சமமல்ல. அரசியல் சண்டைகள் தொடரும், ஆனால் அதனை இந்து சமூகத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

21:42 (IST)09 Feb 2020
கேரளாவில் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் பரப்பிய 2 பேர் கைது

கேரளாவில் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்களைப் பரப்பிய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக திரிச்சூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் பிபேஷ், பிரதோஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

21:05 (IST)09 Feb 2020
சிஏஏ எதிர்ப்பாளர்களை ஷாஹீன் பாக்கிலிருந்து அகற்றக் கோரி வழக்கு உச்ச நீதிமன்றம் நாளை விசாரனை

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து அகற்றுவது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

20:01 (IST)09 Feb 2020
டெல்லியில் 62.59% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பல்லிமரான் தொகுதியில் 71.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியில் 45.4% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த ஆண்டு கூடுதலாக 2% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது” என்று கூறினார்.

19:56 (IST)09 Feb 2020
ரஜினி சித்திரையில் கட்சி தொடக்கம்; செப்டம்பர் மழையில் சூறாவளி சுற்றுப்பயணம் திட்டம் என தகவல்

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாத்தில், சித்திரை தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு கட்சி தொடங்க உள்ளதாகவும் அதன்பிறகு, செப்டம்பர் மாதம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

19:16 (IST)09 Feb 2020
அப்துல் காலாம் வாழ்க்கை திரைப்படமாகிறது; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

18:55 (IST)09 Feb 2020
என்.எல்.சி.யில் படப்பிடிப்பு தளத்தில் திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய்

நெய்வெலி என்.எல்.சி.யில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் நடிகர் விஜய்யை காண என்எல்சி முன்பு கூடியிருந்தனர். இதையடுத்து, விஜய், * வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்து, செல்ஃபி எடுத்தார். அங்கே கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்.

18:27 (IST)09 Feb 2020
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி. இது குறித்து தாம் பெருமிதம் அடைகிறேன். இந்த அறிவிப்பின் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

17:19 (IST)09 Feb 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: அரசு பணிகளை ரூ.4 கோடிக்கு ஜெயக்குமார் விற்பனை செய்தது அம்பலம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்டதாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அரசு பணிகளை ரூ.4 கோடிக்கு ஜெயக்குமார் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.

16:31 (IST)09 Feb 2020
ஜனவரி 15-க்குப் பிறகு சீனாவுக்கு சென்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை

பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 15-க்குப் பிறகு சீனாவுக்கு சென்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்துள்ளது. அதே போல, இந்த அறிவிப்பு விமான மார்க்கமாகவோம் அல்லது தரைவழியாகவோ கடல்வழியாகவோ சென்ற இந்தியா - நேபாளம், இந்தோ - பூட்டான், இந்தோ - பங்ளாதேஷ், அல்லது இந்தோ - மியான்பர் எல்லை வழியாகவோ சென்றவர்களும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அய

16:04 (IST)09 Feb 2020
சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பெரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்தவர்கள் - கேரள அமைச்சர்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். அவர், தனது இணையதள பக்கத்தில் கேரளாவில், கொரோனோ தொடர்பாக அரசால் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை பட்டியிலிட்டுள்ளார். அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரியும் புனே பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

15:36 (IST)09 Feb 2020
550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

* ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் - படுகாயம் அடைந்த 6 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி

14:38 (IST)09 Feb 2020
முதல்வருக்கு நன்றி தெரிவித்த ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

பா.ம.க.வின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

14:33 (IST)09 Feb 2020
தமிழக அரசு அனுமதி தராது

டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது எனவும் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

13:51 (IST)09 Feb 2020
சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

"காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும்".

- முதல்வர் பழனிசாமி

13:50 (IST)09 Feb 2020
இந்திய அணி பேட்டிங்

ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

13:49 (IST)09 Feb 2020
கால்நடை தீவன தொழிற்சாலைகள்

திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது - முதலமைச்சர்

13:48 (IST)09 Feb 2020
ரஜினி போல், விஜய் விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் - கே.எஸ்.அழகிரி

பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருப்பதாகவும், ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் என்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13:04 (IST)09 Feb 2020
கரோனா பாதிப்பு இல்லை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார். 2 தமிழகர்கள் மற்றும் 2 சீனர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

12:24 (IST)09 Feb 2020
5 1/2 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் களத்தில் சச்சின் - வீடியோ

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக புஷ்பையர்(Bushfire) காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தியது. குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிவாரணம் ஈட்டுவதற்காக புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் காட்சி போட்டியை நடத்த திட்டமிட்டனர்.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இதில் மோதின. இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சின் ஒரு ஓவர் விளையாட வேண்டும் என்றும், இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதை ஏற்று சச்சின் ஒரு ஓவர் மட்டும் விளையாடினார்.

12:18 (IST)09 Feb 2020
தண்ணீர் இல்லாமல் மூடப்படுகிறது

வறட்சியின் விளிம்பில் குற்றாலம் உள்ளதால், வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

11:30 (IST)09 Feb 2020
மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.

11:07 (IST)09 Feb 2020
கால்நடை கண்காட்சியை தொடங்கிய முதல்வர்

சேலம் தலைவாசலில் கால்நடை கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி

* கண்காட்சியானது இன்று முதல் பிப்.11ஆம் தேதி வரை நடக்கும்

10:46 (IST)09 Feb 2020
நீர் வெளியேற்றம் - 3600 கனஅடி

பவானிசாகர் அணை நீர்மட்டம் - 101.22 அடி, நீர் இருப்பு - 29.6 டிஎம்சி, நீர்வரத்து - 830 கனஅடி, நீர் வெளியேற்றம் - 3600 கனஅடி.

10:18 (IST)09 Feb 2020
இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக தமிழக விளையாட்டு ஆணையம்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் ஜெயலலிதா. சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்புள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக தமிழக விளையாட்டு ஆணையம் உள்ளது - சேலத்தில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

10:16 (IST)09 Feb 2020
சேலத்தில் தோனி விளையாடுவார்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் - முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன்

10:10 (IST)09 Feb 2020
பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ.75.04-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ரூ.68.89-க்கும் விற்பனையாகிறது

10:09 (IST)09 Feb 2020
ராணுவ வீரர் சுட்டுக்கொலை

தாய்லாந்து நாட்டில் கண்மூடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை

வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை சுட்டுக்கொன்றது தாய்லாந்து போலீஸ்

10:08 (IST)09 Feb 2020
U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன

10:08 (IST)09 Feb 2020
810 பேர் உயிரிழந்துள்ளனர்

'சார்ஸை விட கொரோனாவில் உயிரிழப்பு அதிகம்'

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 810 பேர் உயிரிழந்துள்ளனர்

- சீன அரசு தகவல்

10:07 (IST)09 Feb 2020
ராகுல் பவுலிங்; முதல்வர் பேட்டிங்

சேலத்தில் திறந்து வைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தில் முதல்வர் பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார்இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார்.

10:06 (IST)09 Feb 2020
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள்...

"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள்

சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி"

- சேலத்தில் ராகுல் டிராவிட்

09:58 (IST)09 Feb 2020
சேலத்தில் ராகுல் திராவிட்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட், சீனிவாசன், ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய டிராவிட், "சர்வதேச தரத்திலான சேலம் புதிய மைதானத்தில் நான் விளையாடாமல் போனது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தபோது 61.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த பிறகு பாரதீய ஜனதா கட்சி சந்தித்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை மறுதினம் (11-ம் தேதி) எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும், பிந்தைய கருத்துக்கணிப்புகளும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Web Title:Tamil nadu news today live updates u19 cwc final 2020 rajini vijay corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X