Tamil nadu news today updates : டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையே வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 17-ஆக உயர்ந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் பள்ளிகள் மூடப்பட்டு, தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கையின் நடுவே இன்று 4 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத எதிர்க்கட்சி தலைவர் தமிழகத்தில் உள்ளார்' என்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நான் வெளியிடுவேன் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. விசித்திர விவசாயி என ஸ்டாலின் என்னை குறிப்பிட்டதற்கு அவருக்கு நன்றி. விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதால் நான் விசித்திர விவசாயி தான். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக தமிழகத்தில் உள்ளார். விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம் என ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலம், பஸ் போர்ட் அமைக்கப்படும். பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து சாதனை படைக்கிறோம், என்றார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று ஆமதாபாத் வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர் டிரம்ப், மோடி யுடன் சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. இந்த உறவை மேம் படுத்தும் வகையில், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று இந்தியா வந்தார். அமெரிக்க ஜனாதிபதியான பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் காயமடைந்த சுமார் 150 பேர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மவுஜ்பூர், ஜாஃப்ராபாத், பஜான்புரா, யமுனா விஹார், சந்த் பாக் மற்றும் வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகல்பூரி ஆகியவை வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், வடகிழக்கு டெல்லியில் வன்முறை நடபெற்றுவருவதால் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபிஎஸ்இ தேர்வு மையங்களில் தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரியதை ஏற்று தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
JUST IN: CBSE reschedules Board Exams scheduled on Feb 26 across 86 test centres in NE Delhi in wake of riots in the area @IndianExpress pic.twitter.com/hhjZBaw0cj
— Ritika Chopra (@KhurafatiChopra) February 25, 2020
வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் செவ்வாய்க்கிழமை துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் துணை நிலை ஆளுநர் பைஜலுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறிய பின்னர் வன்முறை அதிகரிக்கக்கூடும் என்று டி.எம்.சி தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அச்சம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி டிரம்ப் இன்றிரவு வெளியேறிய பின்னர் நாளை நிலைமை மோசமடையக்கூடும். தயவுசெய்து இதை அவசரமாக கருதுங்கள். ஏனெனில், எந்தவொரு தாமதமும் அதிக உயிர் இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கான் தனது கடிதத்தில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கக் கோரி உள்ளார்.
வடகிழக்கு டெல்லி பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வன்முறையாளர்களைப் பார்த்ததும் சுட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வன்முறையில் இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
#JUSTIN: Shoot at sight order issued in some areas of North-East Delhi. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/2pgqF0Y1A2
— Mahender Singh (@mahendermanral) February 25, 2020
தேசிய தலைநகர் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு தொடர்பாக ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் புதன்கிழமை வாரியத் தேர்வை மறுசீரமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யுமாறு தில்லி உயர் நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்திடம் கூறியுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் புதன்கிழமை காலை மீண்டும் விசாரிக்கும் என்று கூறியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள சூர்யா நிகேதனில் தேர்வு எழுத உள்ள தனியார் பள்ளி, பாய் பர்மானந்த் வித்யா மந்திரில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. தேர்வு மையம் உள்ள பகுதியான கராவல் நகர் சாலை, வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றாகும்.
வடகிழக்கு டெல்லியின் சந்த்பாக் பகுதியில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 144 தடை உத்தரவு இருந்தபோதிலும், கலவரக்காரர்கள் இன்று மாலை கடைகளுக்கு தீ வைத்து கற்களை எடுத்து வீசினர். அப்பகுதியில் இருந்த கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். ஆனால், பயனில்லை. அங்கே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்ததோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் “தேசத்தின் நலனுக்காக செயல்பட வேண்டும். ஒரு சிலரின் நலனுக்காக அல்ல” என்று கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் டெல்லி காவல்துறையின் செயலற்ற தன்மையை விமர்சித்ததோடு அமைதியாக இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் பார்வையற்றவர்களாக்கிவிடும் என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற வாசகத்தை அவர் நினைவுபடுத்தினார். அமைதியும் நல்லிணக்கமும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்களின் போது இறந்த டெல்லி காவல்துறைத் தலைமைக் காவலர் ரத்தன் லாலின் மனைவிக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்து செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், “உங்கள் கணவரின் அகால மரணம் குறித்து நான் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் தீ வைப்பு சம்பம் தொடர்பாக மொத்தம் 11 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் எம்.எஸ். ரந்தாவா கூறுகையில், “வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்டவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்க வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றோம். நாங்கள் ட்ரோன்களின் உதவியையும் எடுத்துள்ளோம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நாகராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றொரு ஆசிரியர் புகழேந்திக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவெடுத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர தேவைப்பட்டால் ராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி மார்ச் 31க்குள் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையேயான வன்முறை குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த 2 செய்தியாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
சென்னையில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், உதவி செய்தார். கொளத்தூர் தொகுதியில் ஆய்வுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருசக்கர வாகனம் மோதி ஒருவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ”தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்தும் பேசினோம். தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினோம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சினிமா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை, தயாரிப்பு நிறுவனம் தான் ஏற்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் மார்ச் 1-ந்தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பா.ம.க.வுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்தத் தேர்தலில் பா.ம.க. வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்தை விசாரிக்கும் விசாரணை கமிஷன், ரஜினியையும் விசாரிக்க உள்ளதாக அறிவித்திருந்ததது. இந்நிலையில், விசாரணை ஆணையம் முன் ஆஜராக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று கமிஷன் முன் ரஜினி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள், விசாரணை கமிஷன் முன் ஆஜாராவார்கள் என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் முன் ஆஜராக ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி பதிலளிக்க வேண்டிய கேள்விகள், வழக்கறிஞர் இளம்பாரதியிடம் வழங்கப்பட்டன.
மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் பேரது பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து்ளளது. மொத்தமுள்ள 6 எம்பிக்களில், 3 பேர் திமுகவில் இருந்தும் 3 பேர் அதிமுகவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா முத்துகருப்பன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது
திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அன்பழகனுக்கு இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விரக்தியின் உச்சத்தில் உள்ளார்; எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்,'' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights