Flash News in Tamilnadu Today Updates: முதல்வராக மீண்டும் வருவேன். சில காலம் பொறுத்திருங்கள் என மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்னவிஸ் கூறினார். பட்னவிஸ் பேசுகையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு தான் மக்கள் தீர்ப்பு வழங்கினர். தேர்தலின் போது 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதனை அரசியல் கணக்கு மாற்றிவிட்டது. தேர்தலில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். ஜனநாயகத்தின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கையை நான் ஏற்று கொள்கிறேன் என்றார்.
கடந்த நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,03,942 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஜூலைக்கு பின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டுவது இது 8 வது முறையாகும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின்னர், அதிக வருவானம் கிடைத்த மாதங்களில் 3வதாக நவம்பர் மாதம் உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஏப்ரல் மற்றும் 2019 மார்ச்சில் அதிக வருமானங்கள் கிடைத்திருந்தது.கடந்த 2 மாதமாக எதிர்மறையான வளர்ச்சி இருந்த நேரத்தில், தற்போது ஜிஎஸ்டி வருமானம் 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் உள்நாட்டு பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்த ஜிஎஸ்டியில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியில் கிடைக்கும் ஜிஎஸ்டி தொடர்ந்து எதிர்மறை சதவீதமாக உள்ளது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தெலங்கானாவில், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள், பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக உறுதியாக மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
கோவையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்து குறித்து, இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில்,
கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்.#மனிதமற்ற_மனிதர்கள்
— pa.ranjith (@beemji) December 2, 2019
என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பூவளூர், கருப்புகுறிச்சி, மாவடிகோட்டை, செம்மணாம்பொட்டல் பிராந்தணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த சாயக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன். ரிக் போர் வண்டி உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், மனைவி மற்றும் மகளுடன் சல் பாஸ் என்ற மாத்திரையை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேலகவுண்டன்பட்டி போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை அப்டேட்ஸ் குறித்த லைவ் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முகிலி வாரி பள்ளி கிராமத்தில் உள்ள காலை ராமகிருஷ்ணா என்ற விவசாயியின் நிலத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், மேற்கொண்ட ஆய்வில் தும்பிக்கை மேலே உயர்த்தியபோது, உயர் அழுத்த மின் வயர் பட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விவசாய நிலங்களில் உள்ள மின்சார வயர்களை உயரமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு எனக்கூறி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு
திட்ட அதிகாரி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகள் பாராட்டுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, திமுக மீது அரசு பழிபோடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏமாற்று வேலையாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது என்று கூற மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் அறிவித்துள்ள்ளார். ஸ்டாலின் முதல்வராவார் என அறிவித்தது குறித்து ஏற்கனவே தான் விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஜனார்தன ஷர்மாவின் குழந்தைகளை கடத்திய வழக்கில் அகமதாபாத் நித்தியானந்தா அசிரமத்தின் மேலாளர்கள் பிரன்பிரியா மற்றும் பிரியதத்வா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் குஜராத் நீதிமன்றம் அறிவிப்பு.
திமுக நிர்வாகி வீட்டு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் முக ஸ்டாலின். அந்நிகழ்வில் மாநில பாஜக துணைத்தலைவர் பி.டி. அரசக்குமாரும் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் முக ஸ்டாலின் என்று பேசியிருந்தார். இது பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரன், அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
Press Release / பத்திரிக்கை செய்தி pic.twitter.com/J1l3K5BwAx
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 2, 2019
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக கடல் வளங்களை கொள்ளையடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது என்று வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.
புதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் பிரிக்காமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்றும் தற்போது வெளியாகியுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
துரைமுருகன் கண்டனம் : நகர்ப்புற பகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும், ஊரக பகுதிக்கு மட்டும் தனியே தேர்தல் என்பது முறைகேடு நடக்க வழிவகுக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் - திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும்
மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால் அறிவிப்பு வெளியிடவில்லை . நகரப் பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும்
வேட்பாளர் செலவு - கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது . ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர் . அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு, டிசம்பர் 6ம் தேதி வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13.
வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்ப பெற கடைசி தேதி டிசம்பர் 16.
தேர்தல் நடைபெறும் நாள் - டிசம்பர் 27, 30
வாக்கு எண்ணிக்கை நாள் - 2020, ஜனவரி 2.
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாள் - 2020, ஜனவரி 6
மறைமுக தேர்தல் தேதி - 2020, ஜனவரி 11
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை,வழக்கமான அளவைவிட அதிகமாகவே பெய்துள்ளது. இதன்காரணமாக ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மீட்புபணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திய திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு பயமில்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், இட ஒதுக்கீட்டின்படியும் நடைபெற வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின், ஒவ்வொரு மாநகராட்சியிலும் மேயராக தேர்வு செய்யப்பட வேண்டியவர் ஆணா அல்லது பெண்ணா என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார்.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.. தி.மு.க., ஆட்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் இலவச, 'டிவி' வழங்கப்பட்டது. அதுபோல, பொங்கல் பரிசும், பாரபட்சம் இன்றி, அனைத்து கார்டுகளுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights