Tamil Nadu News Today : சுற்றுச் சுவர் விபத்து – கோவை விரையும் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu News Today

Flash News in Tamilnadu Today Updates: முதல்வராக மீண்டும் வருவேன். சில காலம் பொறுத்திருங்கள் என மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்னவிஸ் கூறினார். பட்னவிஸ் பேசுகையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு தான் மக்கள் தீர்ப்பு வழங்கினர். தேர்தலின் போது 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதனை அரசியல் கணக்கு மாற்றிவிட்டது. தேர்தலில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். ஜனநாயகத்தின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கையை நான் ஏற்று கொள்கிறேன் என்றார்.

கடந்த நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,03,942 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஜூலைக்கு பின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டுவது இது 8 வது முறையாகும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின்னர், அதிக வருவானம் கிடைத்த மாதங்களில் 3வதாக நவம்பர் மாதம் உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஏப்ரல் மற்றும் 2019 மார்ச்சில் அதிக வருமானங்கள் கிடைத்திருந்தது.கடந்த 2 மாதமாக எதிர்மறையான வளர்ச்சி இருந்த நேரத்தில், தற்போது ஜிஎஸ்டி வருமானம் 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் உள்நாட்டு பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்த ஜிஎஸ்டியில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியில் கிடைக்கும் ஜிஎஸ்டி தொடர்ந்து எதிர்மறை சதவீதமாக உள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

21:52 (IST)02 Dec 2019
4 பேரையும் அடித்து கொல்ல வேண்டும் - எம்.பி. ஜெயா பச்சன் ஆவேசம்

தெலங்கானாவில், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள், பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

21:51 (IST)02 Dec 2019
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

கோவை மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன்

21:21 (IST)02 Dec 2019
10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக செங்கல்பட்டில் 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

21:16 (IST)02 Dec 2019
காவல்துறையினர் தடியடி கண்டிக்கத்தக்கது

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது

நியாயம் கேட்ட மக்களின் மீதே காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது

என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

21:16 (IST)02 Dec 2019
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மாநகர பேருந்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு. 

21:15 (IST)02 Dec 2019
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி.

17 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல்.

21:05 (IST)02 Dec 2019
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

20:56 (IST)02 Dec 2019
ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று (டிச.2) தனது நட்சத்திர பிறந்தநாளை தன் இல்லத்தில் ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார்.

20:25 (IST)02 Dec 2019
பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக உறுதியாக மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

20:01 (IST)02 Dec 2019
நியாய விலை கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தல்

பொங்கல்பரிசு தொகுப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏதுவாக தயார் நிலையில் வைக்க வேண்டும் - நியாய விலை கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தல்.

20:01 (IST)02 Dec 2019
கோவை செல்கிறார் ஸ்டாலின்

மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து பலியான 17 பேர்களின் உறவினர்களை காண நாளை கோவை செல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

19:45 (IST)02 Dec 2019
இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்

கோவையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்து குறித்து, இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில், 

19:27 (IST)02 Dec 2019
போலி ஆவணங்கள் மூலம் ரூ.6.34 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.6.34 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த தனியார் நிறுவன உரிமையாளர் இம்ரான் என்பவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனர்.

19:25 (IST)02 Dec 2019
ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன், மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளார்.

19:22 (IST)02 Dec 2019
ரஜினி - பிரணவ் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு.

18:44 (IST)02 Dec 2019
உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங் மேன் பணி நியமனத்துக்கு நிரந்தர தடை விதிக்க கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு.

18:43 (IST)02 Dec 2019
தண்ணீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பூவளூர், கருப்புகுறிச்சி, மாவடிகோட்டை, செம்மணாம்பொட்டல் பிராந்தணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

18:42 (IST)02 Dec 2019
கடன் தொல்லை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த சாயக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன். ரிக் போர் வண்டி உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், மனைவி மற்றும் மகளுடன் சல் பாஸ் என்ற மாத்திரையை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேலகவுண்டன்பட்டி போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.

18:42 (IST)02 Dec 2019

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

மழை அப்டேட்ஸ் குறித்த லைவ் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

18:40 (IST)02 Dec 2019
3 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாநிலம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளியில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

18:39 (IST)02 Dec 2019
உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முகிலி வாரி பள்ளி கிராமத்தில் உள்ள காலை ராமகிருஷ்ணா என்ற விவசாயியின் நிலத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், மேற்கொண்ட ஆய்வில் தும்பிக்கை மேலே உயர்த்தியபோது, உயர் அழுத்த மின் வயர் பட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விவசாய நிலங்களில் உள்ள மின்சார வயர்களை உயரமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18:39 (IST)02 Dec 2019
ராம்நாத் கோவிந்துக்கு கடிதம்

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினயின் கருனை மனுவை நிராகரிக்க கோரி தேசிய பெண்கள் ஆணையம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம்.

18:12 (IST)02 Dec 2019
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு எனக்கூறி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு

திட்ட அதிகாரி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது 

18:12 (IST)02 Dec 2019
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும்

ஊரக அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது - திருமாவளவன்.

17:43 (IST)02 Dec 2019
ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை.

ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ் பாரதி, கே.என் நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு.

17:43 (IST)02 Dec 2019
மீண்டும் கனமழை

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

17:42 (IST)02 Dec 2019
பாதுகாப்பை உறுதி செய்ய மனு

சபரி மலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பிந்து என்பவர் மனு தாக்கல்.

17:41 (IST)02 Dec 2019
பாக்யராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகள் பாராட்டுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது.

17:40 (IST)02 Dec 2019
ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

சென்னை ஐஐடி வளாகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் அர்ஜுனன் என்பவர் வீட்டில் 40 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை.

17:22 (IST)02 Dec 2019
ஜனநாயக படுகொலை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, திமுக மீது அரசு பழிபோடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏமாற்று வேலையாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

17:21 (IST)02 Dec 2019
ஆன்லைன் பதிவு துவங்கியது

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவங்கியது.

17:18 (IST)02 Dec 2019
அதிமுக தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

17:16 (IST)02 Dec 2019
மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

அம்பத்தூர் தொழிற்பேட்டை தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் தொழிலாளர் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம்.

நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

16:16 (IST)02 Dec 2019
நரேந்திரனுக்கு அதிகாரமில்லை - பி.டி.அரசகுமார்

என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது என்று கூற மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் அறிவித்துள்ள்ளார். ஸ்டாலின் முதல்வராவார் என அறிவித்தது குறித்து ஏற்கனவே தான் விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

16:12 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

16:03 (IST)02 Dec 2019
நித்தியானந்தா சிஷ்யைகளுக்கு ஜாமீன் மறுப்பு

ஜனார்தன ஷர்மாவின் குழந்தைகளை கடத்திய வழக்கில் அகமதாபாத் நித்தியானந்தா அசிரமத்தின் மேலாளர்கள் பிரன்பிரியா மற்றும் பிரியதத்வா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் குஜராத் நீதிமன்றம் அறிவிப்பு.

16:00 (IST)02 Dec 2019
அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மூல மனுதாரர் சித்திக்கின் மகன் மௌலானா சய்யது ஆசாத் ரஷீதி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

15:51 (IST)02 Dec 2019
அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

திமுக நிர்வாகி வீட்டு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் முக ஸ்டாலின். அந்நிகழ்வில் மாநில பாஜக துணைத்தலைவர் பி.டி. அரசக்குமாரும் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் முக ஸ்டாலின் என்று பேசியிருந்தார். இது பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரன், அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

15:42 (IST)02 Dec 2019
கடலோரப்பகுதிகளில் சட்டவிரோதமாக கடல் வளங்கள் கொள்ளை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக கடல் வளங்களை கொள்ளையடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.

15:40 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் - கே.எஸ். அழகிரி கருத்து

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 முறை தேர்தல். அதன் பிறகு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

14:38 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் - மதுரை நீதிமன்ற கிளை தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது என்று வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.

14:30 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை - மதிமுக பொதுச்செயலாளர்

புதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் பிரிக்காமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்றும் தற்போது வெளியாகியுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

14:11 (IST)02 Dec 2019
தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நகர்புற பகுதிகளுக்கு அது பொருந்தாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

13:34 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை குவிப்போம் – ஸ்டாலின்

மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் குவிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:56 (IST)02 Dec 2019
பஞ்சாயத்து ராஜ் சட்டம் அனுமதிக்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

உள்ளாட்சி தேர்தலை 2 பிரிவுகளாக நடத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் அனுமதிக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

12:06 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது – ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

துரைமுருகன் கண்டனம் : நகர்ப்புற பகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும், ஊரக பகுதிக்கு மட்டும் தனியே தேர்தல் என்பது முறைகேடு நடக்க வழிவகுக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் - திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

11:34 (IST)02 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் - 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள்

கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும்

11:16 (IST)02 Dec 2019
தேர்தல் ஆணையர் பேட்டி- தொடர்ச்சி

மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால் அறிவிப்பு வெளியிடவில்லை . நகரப் பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும்

10:45 (IST)02 Dec 2019
தேர்தல் ஆணையர் பேட்டி- தொடர்ச்சி

வேட்பாளர் செலவு - கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது . ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

10:42 (IST)02 Dec 2019
தேர்தல் ஆணையர் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர் . அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.  

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.,2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், இன்று(டிச.,02 ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.. தி.மு.க., ஆட்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் இலவச, 'டிவி' வழங்கப்பட்டது. அதுபோல, பொங்கல் பரிசும், பாரபட்சம் இன்றி, அனைத்து கார்டுகளுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Web Title:

Tamil nadu news today live updates weather chennai weather local body election gst mettupalayam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close